Friday, October 22, 2010
"என் இரவுகள்...!".
இரவை பகலாக்கும்
இனம் புரியா உணர்வுகளால்....!
இமைகள் இரக்கமற்று...
வேலை நிறுத்தம் செய்யும்
விழி மூடாமல்...!
உணர்வு உலைக்கலன்களில்
உணர்ச்சிகள் கொதிக்கும்
வெம்மைத் தாங்காமல்...!
வியர்வையாய்...
வெளிநடப்பு செய்யும்
நீர்த்திவலைகள்...!
உருண்டும் புரண்டும்.....
உறக்கம் வரா இரவுகள்....
எத்தனை எத்தனையோ...?
விடியற்காலையில்....
விழிமூடிய இரவுகளே....!
ஆயுட்காலத்தில்
அதிகமென நினைக்கிறேன்...!
ஒன்றை நினைத்து...
ஒவ்வொன்றாய் நினைத்து...
நினைவுகள் பின்னும் வலையில்...
உணர்வுகள் சிக்கித் தவிக்கும்.
சுவாசம் கூட மறந்துப்போகும்
சுய சிந்தனையால்....!
ஆழ்மனம் அமைதியின்றி.....
எங்கெங்கோ....!
நினைவுகள் சுற்றிப் படரவிட்டு...
நிலைக்குத்தி நிற்கும் விழிகளில்...
பார்வையில்லாமல்...!
உணர்வற்ற நிலையில்....
உள்முகம் பார்க்கும் நினைவுகள்.
மனதைக் கொத்தித் தின்னும்
கொக்கிப் புழுக்களாய்....!
கேள்விகள்..?
விடை காணமுடியா கேள்விகளுக்கெல்லாம்....
விதியை நொந்து கொள்ளும் மனம்.
விடைத் தெரிந்த கேள்விகளால் மட்டும்
வாழ்வில் விளைந்த பயன்தான் என்ன...?
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கவிதை அருமை, எனக்கும் கவிதை இழுத ஆசைதான் ஆனால் அது காமடியா போய் முடிஞ்சிடுது
அருமையான கவிதைகள்.....
http://aadaillathavarigal.blogspot.com/
உங்கள் எழுத்து நடை அருமையாக உள்ளது!
/ ஒன்றை நினைத்து...
ஒவ்வொன்றாய் நினைத்து...
நினைவுகள் பின்னும் வலையில்...
உணர்வுகள் சிக்கித் தவிக்கும். /
அருமை அருமை...
அருமையான கவிதை.வாழ்க.
இந்த இமை மூடா இரவுகளைப்
பற்றி நானும் பகிர்ந்துள்ளேன்.
நேரம் வயப்படும் போது,சற்றே
எட்டிப்பார்க்கவும் .
அன்புடன்
காளிதாசன்
வினோவுக்கு பிடித்ததே எனக்கும் பிடிக்கிறது ...ஒவ்வொன்றாய் நினைத்து
கிளாஸ்
முதல் வருகைப் பதிக்கும் தொப்பிதொப்பிக்கு வணக்கம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசைசரவணன், முதல் வருகை. மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
வாங்க தோழர்...வினோ..
வாங்க எஸ்.கே...
வாங்க பத்மா....,
உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.
வாங்க காளிதாஸ்... உங்கள் அன்பிற்கும், பேராதரவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment