Friday, June 18, 2010

காதலி...!




கல்வாரிக் குகைக்குள்
கர்த்தரை வைத்த நிமிடங்களாய்....
மரித்துப் போன மகனை எண்ணி
மனம்துடித்த மாதாவாய்...
மனம் கனத்துக் கிடக்குது கண்மணி...!
**************************************
நின்னை நினைத்தேங்கும்..
ஏழை என் நெஞ்சுக்கு
எப்படிச் சொல்வேன்...?
உனக்கும்...எனக்குமான
ஒட்டும் உறவும்...
உதிர்ந்துபோன ....வினாடிகளை...!!
நிசம் தப்பிப்போன
நிமிடங்களை....
நிச்சயமாய் ஏற்க மறுக்கும்...
ஏழை என் நெஞ்சுக்கு...
எப்படிச் சொல்வேன்...?
கடந்து போன காலத்தையும்,
நிகழ்ந்துபோன நிசத்தையும்....??
**********************************
இறந்துபோன பின்பும்
ஈட்டியால் குத்தியவனுக்கும்...
குருதி சிந்தி குருடை நீக்கிய
கருணாமூர்த்தியாய்....
நான் இறந்து....
காதல் ஈந்தக் கதையை...
எப்படிச் சொல்வேன்...?
ஏழை என் நெஞ்சுக்கு.
இறந்த காலத்திலேயே
இறந்துக் கிடக்கும் ...
என் மனதை...
உயிர்பிக்கும் வல்லமை...
உன்னையன்றி....வேறு யாருக்குண்டு??
கடவுளுக்கும் கை கூடாத காரியமல்லவா??!
**********************************************
இறந்து கிடப்பது என் உடல் என்றால்...
இப்படி கலங்கி இருக்க மாட்டேன்..கண்மணி.
உடைந்துக் கிடப்பது...
உன்னையே சுமந்து...உனக்காய் வாழ்ந்த
என் ஏழை இதயம்.
********************
ஆடைக் கிழித்துக் கொண்டவனையே
பைத்தியம் என்கிறது பார்...கண்மணி.
மனதை கிழித்துக் கொண்டவனுக்கு
என்னப் பெயர்....!
*******************
என் நினைவும் தப்பவில்லை...
என் நினைவிலிருந்து நீயும் தப்பவில்லை.
இருந்தும் நான் ஏன் இப்படி..??
கடவுளைத் தேடும் உலகில்
காதலி...உன்னைத் தேடும் ஒருவனாய் நான்.
**********************************************
என் காதல்...
புரிந்தவர்களுக்கு...
கடவுள் புரிந்திருக்கும்.
பாவம்..! நீதான்
கடவுள் காணாதவளாயிற்றே...!
என் காதலை எப்படிக் காண்பாய்..?
முறிந்துபோனதாய் சிலரும்...
முடிந்துபோனதாய் சிலரும்....
நடந்துபோன நம் காதலை....
சிலாகிக்கிறார்களாம் சில பேர்.
உனக்குள்ளும்...எனக்குள்ளும்
உயிர்வாழும் காதலை யாரறிவார் கண்மணி..!
************************************************
எனக்குள் உயிர் இருக்கிறதா...?
என்கிற கேள்விக்கு....
நீண்ட காலமாய் "நிசப்தமே" பதிலாகிறது.
என் சுவாச சூட்டில்...
என் இதயம் கருகும் வாசம்...
எனக்கு மட்டும்தான் வீசுகிறதா?...கண்மணி.
மல்லிகையின் மடல் வாடினால் தாங்காதவள் நீ..!
பின் எப்படி...என் இதயம் இப்படி..?
நினைவிருக்கிறதா...என் நேசமே,
விடியல் எனும் விபரீதம் ...
நடந்துவிடுமோ என்றெண்ணி....
ஒற்றைக் கால் மாற்றி...மாற்றி....
நின்றவாறே நெடுந்தவம் செய்த...
நாட்கள்.
மூன்று சென்மம் பேசியிருக்க வேண்டியதை...
மூன்றாம் சாமத்திலேயே பேசிவிடுவோமே...
நினைத்துப் பார்ப்பதுண்டா என் நெஞ்சமே...!
***********************************************
இன்னும் உன் காதலன்...
எந்த கல்லரையிலும்...
விளக்கேற்ற வில்லை.
ஏன் தெரியுமா...கண்மணி..!
என் காதலை...
நான் புதைக்கவில்லை.
விதைத்திருக்கிறேன்.
விருட்சமாகும்....நிச்சயம்
விருட்சமாகும்.
மனம் சோர்ந்து போகும்போது
நீ வந்து இளைப்பாறிச் செல்.
நீ மட்டும்.
******************************

Thursday, June 17, 2010

"இந்திய தேசமே" -2

அப்படி சரிந்ததுதான் "சோவியத் யூனியன்".
இசுலாமிய நாடுகளில் ஆயுதம் விற்று...
அதற்கு பிணையாக அவன் கேட்கும் விலைக்கு...
இசுலாமியர்களிடமிருந்து எரிப்பொருளை பிடுங்கிக் கொள்ளும்
"குள்ளநரித்தனமெல்லாம்" நமக்கு வருமாய்யா???!.
அங்கே ஒரு பக்கம் இது நீண்ட காலமா நடக்குது.
இஸ்ரெல்...பாலஸ்தீனம் இது ஒரு பக்கம்.
இலங்கை ...விடுதலைப் புலிகள்..இது ஒரு பக்கம்.
பத்தும் பத்தாததுக்கு....
பாகிஸ்தான்...இந்தியா....
பாகிஸ்தான்... ஆப்கானிஸ்தான்....
இப்படி அந்த சதிகார சண்டாளனின்
பட்டியல் நீள்கிறது.
இதுவரை....
"நம்முடைய கையே நமக்கு உதவி" என்றிருந்த இந்தியாவை...
"அமெரிக்காவின் கையும் வேண்டும்" என்ற
மாயத் தோற்றத்தை...நம்ம..
ம(ண்)ன்மோகன் சிங்க் மூலமா...
உருவாக்கி விட்டு இருக்கான் இந்த அமெரிக்கா.
எதற்காக நாம் அவனோடு உறவாட வேண்டும்???
என்ன இலாபம் நமக்கு???
யோசிக்க வேண்டும் இந்தியா...? யோசிக்க வேண்டும்.
(ம்கூம்..ம்கூம்...அத செஞ்சிருந்தா நான் எப்பவோ உருப்பட்டு இருப்பேன்
என்கிற முனகல் காதில் விழுகிறது.)
இப்போதைக்கு உலகின் வளர்ந்த நாடுகளின்
"குப்பைத் தொட்டி" இந்தியாதான்.
எதை எதையெல்லாம் அவர்களால் வைத்துக் கொள்ள முடியாதோ...
அதை கொட்டி வைக்கும் இடம் இந்தியா.
இதற்கு இந்தியா வைத்துக் கொண்ட பெயர் " உலக மயமாதல்".
என்ன ஒரு அழகான முகமூடி பாருங்கள்.
மிக குறைந்த கூலிக்கு அதிக நேரம் உழைக்கும்
ஏமாளித் தொழிளாலன் இந்தியாவைத் தவிர
வேறு எங்கேனும் கிடைப்பானா???
அது மட்டுமா?
வளர்ந்த நாடுகளில் உழைப்பாளியின் ஒவ்வொரு
வியர்வைத்துளிக்குப் பின்னாலும்
அந்த நாட்டின் சட்டம் இருக்கிறது.
சட்டச் சலுகை இருக்கிறது.
மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது.
எனவே சட்டத்தை மதித்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது.
இந்தியாவில்தான் சட்டத்தை விலைக்கு வாங்கும் சட்டம் அமளில் இருக்கிறது.
கூலித் தொழிளாலரின் குரல்...எங்கேனும் வெளிப்பட்டால்
அதன் குரல்வளை நெறிக்கும் தொழிற்ச்சங்க கூலிப்படைகள் இருக்கின்றன.
சூட்கேசுகளுக்கு சோரம் போகும் மரமண்டைகள் இருக்கின்றன.
இந்த அணு ஆயுத ஒப்பந்தம் இருக்கே...
அது குரங்கு கை கொள்ளிக் கட்டைத்தான்.
ஐயா மண்மோகன் சிங்கு,...கொஞ்சம் கவனிப்பா...
உன் தலைல வைக்கிறதானாலும்...
வால்ல வைக்கிறதானாலும்...
வெந்து ...நொந்து போ>>>போறது...
என்னமோ என் தேசம்தான்றத மறக்காதீக.
இந்த தேசத்து அணுவிஞ்ஞானிகள் அத்தனை பேரும்...
தடுத்தும்....நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படாது...
என சொல்லியும், படாது...படாது...
எனக்கு அமெரிக்காதான் முக்கியம்
அப்படின்னா.....??
இதுக்கு என்ன அர்த்தம் ......?!
அவ்வளவு பெரிய அறிவாளியா...நீர்!!
அவ்வளவு பெரிய முட்டாள்களா நம்ம விஞ்ஞானிகள்.!
என்ன நிர்பந்தம் வந்தது? நிபந்தனைகளோடு யூரேனியம்
வாங்கத் தான் இந்த ஏற்பாடா?? இல்லை...
சூட்கேசு சூட்சுமம் இருக்கா தலைவரே...!!!
விற்பவன் விற்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே.
அப்புறம் என்ன வேவுப் பார்க்க அனுமதி.??
அங்கனத்தான்....வாத்தியாரே....
அமெரிக்கா காரன் வைக்கிறான் நமக்கு "ஆப்பு"..!
எப்புடின்றீயா??....
(இங்க மட்டும் நல்லா.. வக்கனையா கேளு, கேக்க வேண்டிய ஆளுகள வுட்டுடு)
இப்போ ஈரான், ஈராக்ல என்ன நடந்துச்சு.??
அமெரிக்கா காரன் கெலப்புன புளுகு மூட்டைய
நம்பிக்கினு உலக நாடுக...
வாயை..? (அதையும்தான்)... மூடிட்டு நின்னாங்களா?
இவந்தான் பெரிய "போலிஸ்காரனாச்சா"...
உன் நாட்ட நான் சோதனைப் போடனும்னு
வச்சான்யா ஒரு ஆப்பு.
சதாம் உசேன்னுக்கு குறி வச்சி
"உள்ள இறங்குனானுக"....சரி,
அவன் புளுகுன மாதிரி ஏதாவது ஒரு தடயம் கிடைச்சிதா?
இல்லையே. ஆனா...அந்த நாடு என்ன ஆச்சு???
சதாம் என்ன ஆனாரு???
புரியலையா???
(மரமண்டை) அதே நிலமைதான் நாளைக்கு ...
நமக்கும்.
முதல்ல சோதனைன்னு உள்ள வருவான்.
எனக்கு அங்க சந்தேகம், இங்க சந்தேகம்..னு சொல்லி
மொத்த நாட்டயும் சல்லடைப் போட்டு சலிச்சுப் புட்டு
உன்னொட கோவணம் அவன் கண்ண உறுத்த....
உறுவுவாம்ப் பாரு.......
அப்பதாண்டா நீ கதறுவ...?! ( எனக்கு சந்தேகமா இருக்கு).
அப்புறம் என்ன?
அமெரிக்காவுக்கு இந்தியா அடிமைன்னு...
இந்தாளு அறிக்கை வுடுவாரு.
இல்லாட்டி.....
எவன் அறிக்கை வுடுறன்றானோ...!
அவந்தான் நமக்கு "பிரதமர்" ஓய்.
எப்படி நம்ம அமெரிக்கா?
வாய்ல வெரல வச்சு சூப்பு ராசா...!!!
நம்மால முடிஞ்சது அவ்வளவுதான.
சோரம் போறதே நமக்கு பொழப்பா போச்சு.
உன் பொண்டாட்டி கைய அவன் புடிச்சிக்கிட்டு...
"இந்தியர்கள் சுதந்திர காற்றை இப்போதான் சுவாசிக்கிறார்கள்"
அப்படின்னு...
அறிக்கை விட்டுகிட்டே
ரவிக்கை அவிழ்க்கப் போறான்...
பார்த்துக்கோ
.

"இந்திய தேசமே" -1

ஏ எழுச்சி மிக்க வரலாற்றை பெற்ற இந்திய தேசமே,
இந்த தேசத்தின் சொந்த வித்துக்களாய் வாழும் இந்தியர்களே,
நாம் உடைந்துக் கிடந்த போது இந்தியா இல்லை.
நாம் ஒற்றுமையின்றி இருந்தபோது...
நம்மை உருக்குலைத்த அந்நிய சக்தி...!
நாம் ஒன்றிணைந்த போது ...
நமக்கு வழி விட்டு விலகியது
உலகம் கண்ட உண்மை.
இப்போது ....
மீண்டும் அதே அந்நிய சக்தி....
உருவாகி வரும் இந்தியாவை...
உடைத்தெரியும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
உங்கள் கண்களை கொஞ்ச நேரம்
என் பக்கம் திருப்புங்கள்.

அமெரிக்காவின் சதிவலையில்...
அழிந்துபோன சாம்ராச்சியங்கள்
எத்தனை? ...எத்தனை??
மிகப்பெரும் வல்லரசாக
உருவெடுத்து நிலைத்து நின்ற "சோவியத் யூனியன்"
சரிந்துபோன சரித்திரம்...
மறந்து போனாயோ?!.
அதுசரி...!
மறதி உனக்கென்ன புதுசா?.
உலகில் அமைதியாய் இருக்கும் இடங்களில் எல்லாம்
தன் "சூழ்ச்சி ஆப்பை" சொருகி...
சண்டை மூட்டி விட்டுவிட்டு....பின்
தானே சமாதானம் செய்யப்போகும்...
"பச்சை களவாணி" தனமெல்லாம்...
கைவந்த கலை அமெரிக்காவுக்கு.
இதன் நோக்கமென்ன..???
உற்று கவனியுங்கள்...
தன்னிடம் இருப்பதை விற்க வேண்டிய
கட்டாயம் இந்த அமெரிக்காவுக்கு.
அவனிடம் என்ன இருக்கிறது...?
எதை விற்கப்போகிறான்..?
தக்காளியா? வெங்காயமா??
இல்லை தேசமே...இல்லை.
உலகுக்கு ஊருசெய்யும் கொடுமையான
இரசாயன ஆயுதங்கள்... இன்னும் பிற ஆயுதங்கள்....
இதை விலை கூறி விற்றால் பரவாயில்லை.
கேடு கெட்ட அமெரிக்கா...சூழ்ச்சியாக
தன்னிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு
செயற்கையாக "தேவையை" ஏற்படுத்துகிறது.
(நம் நாட்டு பருப்பு வியாபாரிகள் போல்)
நினைத்துப் பார்.
நீயும் நானும் அமைதியாக இருந்தால்...
அவனுடைய ஆயுதம் விற்பனையாகுமா?
"நம்ம வடிவேலு அண்ணன் மாதிரி"
"எதப் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்"
என்ற கொள்கையில்....அமெரிக்கா...
முதலில் இசுலாமிய நாடுகளில் சண்டை மூட்டினான்.
எப்படி? ....எதற்காக?
உலகின் அத்தியாவசியத் தேவையான....
எரிப்பொருள்......!! அது
இசுலாமிய நாடுகளில்தானேக் கிடைக்கிறது.
அதற்காகத்தான்.
சண்டை வராது என்ற பட்சத்தில்....
சின்ன சின்ன குழுக்களாய் ...
தீவிரவாதிகளை உருவாக்கி,
உள்நாட்டு கலவரங்களை உண்டாக்கி,
தீவிரவாதிக்கும் அதிநவீன ஆயுதம் விற்று...
தீவிரவாதியின் தாக்குதலை சமாளிக்க...
சம்மந்த்ப் பட்ட நாட்டுக்கும் ஆயுதம் விற்று....
இரண்டு பக்கமும் இலாபம் பார்க்கும் "நம்ம ஐடியா" எப்படி..??
சரி இலாபம் பார்த்தால் போதுமா?
"நல்லவன்னு"ம் பெரிய "இவன்னும்" பேர் வாங்க வேண்டாமா??
அதுக்குத்தான் "ஆள் இன் ஆல் அழகு ராசா கட்டப் பஞ்சாயத்து"
பண்றான் இந்த அமெரிக்கா.
நம்ம பாசையில இதுக்கு "பிள்ளையையும் கிள்ளி...தொட்டிலையும் ஆட்டி"
அதேதான் ராசா. பயபுள்ள கெட்டியா புடுச்சிக்கிறியே...!
இப்படி தனக்கு சமமானவர்களை சமயம் பார்த்து...
கால் இடறி....பின் கை கொடுத்து தூக்கிவிட்டு....??
இந்த மொல்லமாறித் தனமெல்லாம் யாருக்காவது வருமா? ...ராசா.
அமெரிக்காவைத் தவிர??

Wednesday, June 16, 2010

இப்படியாக ஓர் கவிஞன்...!?


வறுமை வழி நடத்தும் வாழ்வில்
சில்லரைக்கு சில நேரம் தட்டுப்பாடு ...
தன்மானம் தடுத்ததால்....
யாசிக்க முடியாத தருணங்களில்...
யோசிக்க அரம்பித்து....
யோசித்ததை எழுத ஆரம்பித்து...
வாசிக்க ஆளில்லா காரணத்தால்,
நானே அதை வாசித்து...
கல்லரைக்கு பின்னே மறைந்து
நானே கைதட்டி...
சுய மதிப்பீடு செய்து கொண்ட நேரம்,
என் வாழ்வில் கல்லரை ஒன்று கதவு திறக்க...
கவிதை பிறந்தது.
சிலரது பாராட்டுகளுக்கு பின்பலனாய்...
என் கவிதைக்கும் காசு கிடைத்தது.
காசுகிடைக்க போய் கவிதை
எனக்கு தொழிலானது.!
நான் கவிஞனானேன்..!!
இளமையின் இனிமைகளை.. என்
தனிமை தின்றது.
விடியலில் விழிமூடும் வரை இரவுகளை... என்
நினைவு தின்றது.
கனவு என்பது..?! எனக்கு
கனவாகவே இருந்தது.
என் பசியை..
என் உணர்வு தின்றது.
என் உணர்வை...
என் பசிக் கொன்றது.
சிந்திக்க தொடங்கும் முன்னே...
நான் சந்திக்கும் சங்கதிகள்...
அப்பப்பா...?! எழுதி மாளாது.
எத்தனித்து எழுத தொடங்கும்...போது,
சுரந்துகிடக்கும் உணர்வுகள்...
ஒன்றையொன்று முண்டியடிக்க,
முன்வரிசை... பின்வரிசை
தடுமாற்றம்.
பால் சுரந்தும் கறக்காத காரணத்தால்...
காம்பு வெடித்து துன்புறும் பசுவாய்...நான்.
கவிதை எழுதுவதே என் கவலையானது.
சில நேரங்களில்...என்
கவலையே கவிதையானது.
இனம்பிரிக்க முடியா உணர்வுகள்...
என் கவிதை போலவே அர்த்தமற்றுப் போனது.
தீப்பற்றிய மரத்தின் வேர்களில்...
வெந்நீர் வார்த்ததுப் போல்...
பற்றியெறியும் உணர்வுகளில்...
என் உயிர் உருகும் வேதனை...
எனக்கு வலி.
உனக்கு வார்த்தை.
இழுபறி வாழ்க்கையில்தான்...
எத்தனை...? எத்தனை..??
வழிபறிகள்.

ஓர் இரவில்...!


அன்பே..! ஆரமுதே...!! இன்னெழிளே...!!!

நின் நினைவுகள் உதிர்ந்த இடத்தில்...

நிக்குதடி என் நிகழ்காலம்.

உணர்வல்ல....உணர்வல்ல கண்மணி...அவை யாவும்

உன் உயிர் உதிர்த்த உதிரங்கள்.

நெஞ்சம் நிறைத்தவன் கொஞ்சம் விலகிவிட்டான்...

மஞ்சம் மறைத்தவன் மார்த்தழுவி தோள் அணைத்தவன்

இச்செகம் சொல்லும் இச்சையெலாம் வென்றவன்...

இன்பச் சுகமெலாம் இனிதே வழங்கி...

"இதோ வருகிறேன்" எனப் பகன்றகன்றவன்...

வருவதற்குள்....

உன் உயிர் வருந்தி...

மனத்துயர் அருந்தி...

விழிகளில் காவிரி ஏந்தி...

இரவின் மடை உடையும் வரை...

அலைபுரளத் தளும்பி உடைப்பெடுத்த

உணர்ச்சி வெள்ளத்தில்....

உன் உயிர் ஒழுகும்.. ஓசை...

அருவி சிந்தும் சாரலாய் அழகாய்....ஆழமாய்...

கசிகிறதுப் பெண்ணே..!

கண்ணகி காலத்து காதலை...இளங்கோ

எடுத்தியம்பிய பொழுது புரியாமல் போன...காதல்...!!

இதோ நீ சிந்திய கண்ணீரில்....

புரிகிறது.

உயிர்ப்பதும், உறைவதும்...

மனுகுல உயிர்க்கு அபூர்வ அனுபவமாகும்.

அதில் அடிக்கடி எனை மூழ்கடிக்கும்

உன் காதல் உன்னதம்.

சிலையென சிலிர்த்து நிற்கிறேன்.

உரையகன்ற வாளிற்றுறையும்

உதிரமென உறைகிறேன்...உள்ளுக்குள்.

இலைநுனியுறை பனித்துளியாய்....

நின் இரவின்...நின் உணர்வின்

இரகசிய கசிவுகள்....!!!

வாளின்முனை மழுங்கும்

கூர்மை உன் காதல்.

சின்ன...சின்ன சிணுங்கல்கள்...

சிலப்பதிகாரம் பேசும் குலுங்கல்கள்...

ஓர் இரவில் நீ எழுதிய சிலப்பதிகாரம்...

மிதிலைமகளின் அசோகவனத்து

சோகம் கம்பன் கைவரிகளில் புரியவில்லை.

உன் ஒற்றைவரி வேதனை....எனக்கு ...

அசோகவனத்துச் சீதையை

அறிமுகப்படுத்திற்று.

கம்பன் கைவலிப் புரிந்தது.

தவிப்பின் தகிப்பைக் கண்டு

திகைத்து நின்றேன்.

எதுவும் புரியாமல்...

இப்போதுதான் பிறந்தக் குழந்தையாய்...

விக்கித்து நிற்கிறேன்.

மனித உறவுகள் விலைபோய்விட்ட...

தனிமனித உணர்வுகள்

புதைக்குழிக்குள் போட்டு புதைத்த

இச்சமூகத்தில்....

இன்னும் இருக்கிறாள்

இதோ..!

என் கண்ணகி.!!.

என்றும் அன்புடன் .

தமிழ்க் காதலன்.