Sunday, October 03, 2010

"அபாய சங்கு...!!"

தமிழகத்தை தாயகமாய் கொண்ட அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி. கவனமாக கவனியுங்கள். இந்தியாவிலேயே "மதுவிலக்கை" முதலில் கொண்டு வந்த மாநிலமும், ( காமராசர் காலத்தில் ) அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்று நடத்துவதிலும் தமிழ் நாடே முதலிடம். வருமானத்திலும் இப்போது அமோகமாய் களை கட்டி கொண்டிருப்பதும் இந்த திட்டம்தான். ஒரு காலத்தில் "கள்ள சாராய வியாபாரியும்.., காவல் துறையும்" கைக்கோர்த்து செய்ததை..., இப்போது "டாஸ்மாக்" ஊழியர்களும், அதிகாரிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய உருக்கமான செய்தி.

மதுப் புட்டிகளின் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்க படுகிறது. இது ஏதோ விற்பவர்கள் பேராசை மட்டும் காரணம் என நினைக்காதீர்கள். விருப்பமில்லா விட்டாலும் நிர்பந்தத்தின் காரணமாக கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் ஊழியர்கள். எப்படி என்றால் "மாமுல்" ஆசை காரணமாய்......, கடைக்கு இவ்வளவு என வாரம் அல்லது மாதம் என்ற கணக்கில் மாமுல் வசூலிக்கப் படுகிறது. இதை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் அதை சரிகட்ட கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலை ஊழியர்களுக்கு.

#
இது பற்றி தினசரி ஒன்றில் குறிப்பிடுகிறார்கள். புட்டி ஒன்றிற்கு ரூ.2 முதல் 5 வரை கூடுதல் விலை.... சராசரியாக ரூ.3 எனக் கணக்குப் பார்த்தால் ஒரு நாள் ஒன்றுக்கு...ரூ.3215 உபரி வருமானம். மாதம் ஒன்றுக்கு ரூ.96,450 ஒரு கடையின் தனித்த வருமானமாகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த கடைகள் சுமார் 6700. இவற்றின் மொத்த தனித்த வருமானம் என்பது........ ரூ. 65 கோடி ஒரு மாதத்திற்கு. ஆண்டுக்கு பார்த்தால்...ரூ. 768 கோடி தான்....!!!

# இந்த வருமானம் யாருக்கு போய் சேருகிறது? ...... , கவனியுங்கள். இது அரசாங்க கணக்கில் வராத கணக்கு. இது பங்கிடப் படும் "மாமுல் தொகை". கீழ் மட்ட ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரி வரை.., உழைத்து சம்பாதித்த பணம்.

#
ஒரு அரசு செய்யும் வேலையா இது?. ஒரு அரசாங்க வேலையில் இருக்கும் அதிகாரி செய்யும் வேலையா இது?.

# இந்த தேசத்தின் செல்வம் எப்படி எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கப் படுகிறது பாருங்கள். இப்படி சரி எது? தவறு எது எனத்தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டால்.... , அடுத்த தலைமுறைக்கு "ஊழல்.., இலஞ்சம்" இவை எல்லாம் நியாயமான விசயங்களாக தெரிய ஆரம்பித்து விடும்.

#
அரசு நிர்வாகத்தில் இருந்து கொண்டு இப்படி கொள்ளை அடிக்கும் நபர்களை கண்டு பிடித்து "களையவும்", இப்படி உபரி வருமானம் பார்க்காதவாறு தடுப்பு முறையும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப் படுமா?

# இன்றைய சூழலில் ஒரு தினக்கூலி பெறுகிற நபரை விட குறைவான கூலிக்கு வேலைப் பார்க்கும் ஒரே ஏழை அரசு ஊழியன்.... டாஸ்மாக் கடைமட்ட விற்பனையாளர்கள் தான். அதிக வருமானம் ஈட்டித் தந்து விட்டு குறைந்த "கூலிக்கு" உழைக்கும் அவர்களுக்கு நியாயமான "சம்பளம்" வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

# இதில் நான் சொல்ல வந்த விசயம் என்னவென்றால்......., வருடத்திற்கு சுமார் ரூ.14,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித் தரும் துறையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது. இப்படி வேறெந்த அரசுத் துறையும் இலாபம் பார்க்க வில்லை. அப்படி வருமானம் வரும் அளவுக்கு இங்கே "குடி மகன்கள்" இருக்கிறார்கள். இப்படி பட்ட நிலையில் ஒரு தேசம் இருக்குமேயானால் வெகு எளிதாக அந்த தேசம் எதிரிகளால் சூரையாடப் படும். நிலை குலைக்கப் படும். தகர்க்கப் படும். அடிமையாக்கப் படும்.

# இதுவரை நாம் "பொறுமையாக" மட்டுமே பிரச்சனைகளை கையாண்டு வந்திருக்கிறோம். அதனால் தான்.., காஷ்மீரை இழந்து தவிக்கிறோம். சீனாவிடம் சில பகுதிகளை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்கிறோம். நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

#
இப்போது இலங்கை மூலம் சீனா இந்தியாவை மும்முனை தாக்குதலுக்கு உள்ளாக்க முயல்கிறது. ராசபக்சே குள்ள நரி தந்திரமாய்........, வேலை செய்கிறது.

#
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இந்தியாவின் இலங்கை மீதான தார்மீக உரிமைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சீனாவின் உதவியை நாடி..., சீனாவை உள்ளுக்குள் நுழைய விட்டிருக்கான். அடுத்து தமிழகத்துக்கும், தமிழனுக்குமான மானசீக எதிரியான....., காங்கிரசை தனக்கு நண்பனாக்கிக் கொண்டு இந்தியாவை சமாளிக்கிறான்.

# எதுவுமே நடக்காதது போல் குடித்து கும்மாளமடிக்கும் எனதருமை "குடிமகன்களே" ......, நாளைய சமூக அவலங்களின் இன்றைய அடித்தளம் நீங்கள் என்பதை மறக்காதீர்கள். நம் தேசம் மீண்டும் மாற்றானிடம் அடிமையாக அனுமதிக்காதீர்கள்.

# இன்னொரு சுதந்திர போராட்டம் இந்தியா தாங்காது. உங்கள் வாழ்வை மீட்டெடுக்க நீங்கள் தயாராகுங்கள். நன்றி.
==============================================

3 comments:

பவள சங்கரி said...

பகிர்வுக்கு நன்றிங்க.

erodethangadurai said...

நல்ல கருத்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க நித்திலம் சிப்பிக்குள் முத்து.,

வாங்க ஈரோடு தங்கதுரை..,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

மிக்க நன்றிங்க.