Sunday, January 23, 2011

"இந்திய தளபதி...!" ( சுபாஷ் சந்திர போஸ் )

வங்கம் தந்த சிங்கமே...!
வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே...!
இந்திய இளைஞர்களின் எழுச்சியே...!
இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...!!

அடிமைத் தளை தகர்த்தெறிய
அரும்பாடு பட்டு ஆயுளில் பாதியை
சிறைச்சாலை செல்லுகளில்
செலவழித்த செம்மலே...!

கல்கத்தாவை கட்டியமைத்த கர்ம வீரனே..!  
தேசத்தின் விழிகளில் கண்ணீர்த் துடைக்க
தேகத்தை தியாகித்து செந்நீர் சிந்தியவனே..!
மேகத்தில் மிதந்து தாகங்கள் தணிந்தவனே.

கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவனே..!
நாட்டு விடுதலைக்கு எதிரியின் சிறகொடித்தவனே..!
வசதியாய் பிறந்தும் வறுமையை சந்தித்து
வாழ்க்கை முழுதும் தேசம் சிந்தித்தவனே..!

 

செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர்
அதிர பெரும்படை நடத்திய பேராண்மையே..!
நிலமும் கடலும் தடை இல்லையென
நீண்டு கிடக்கும் உலகில் பறந்தவனே...!!

இன்றும் எங்கள் இரத்தத்தில் இளஞ்சூட்டை
தணியாமல் தகிக்க வைக்கும் புரட்சியே..!
வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் வாழ்க்கை
செதுக்கிய செம்மலே...! பாரதத்தின் தவப்புதல்வ...!!

புகழுக்கு மயங்காத புரட்சியின் புத்துயிரே..!
புழுக்களின் கூடாரத்தில் குலவியாய் கொட்டியவனே..!
வழுக்களின் சூழ்ச்சியை வஞ்சகத்தை திட்டியவனே..!
கைக் கொடுக்காதார் கைகளில் தேசம்

காணப் பொறுக்கா நீ கண்டங்கள்
கடந்தாய்.. இந்திய இளையத் துண்டங்கள்
கரம் கோர்க்க வான் தரை 
கடல் யாவிலும் படை நடத்திய

எங்கள் பாரதமே...!

உண்மைகள் மறைக்கப் பட்ட
எங்கள் பாரதத்தின் மர்மமே...!!

இந்தியாவின் இரத்த சரித்திரமே...!!!
 

நின் புகழில் எங்கள் தேசத்தில் புது இரத்தம் பாயட்டும்...! வீரம்
விளையட்டும்..! வங்கம் தந்த தங்கம்...!
வாழிய நின் வான் புகழ்...!!

 

குறிப்பு : இந்திய இளைய சமூகத்தின் "படைத்தளபதி", புரட்சிப்படை நடத்திய "அஞ்சா சிங்கம்", தேசத்தின் தவப் புதல்வன் "சுபாஷ் சந்திர போஸ்" அவர்களின் 114 வது பிறந்த நாளுக்கு தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.

சுபாஷ் சந்திர போஸின் குறிப்பு :

பிறப்பு : 23..01.1897. 
பெற்றோர் : தந்தை- ஜானகி நாத் போஸ், தாய் - பிரபாவதி தேவி.
படிப்பு : ஐ.சி.எஸ். ( கேம்ப்பிரிட்ஜ் பல்கலை. இலண்டன் )
*******************************************************

13 comments:

கலாநேசன் said...

//உண்மைகள் மறைக்கப் பட்ட
எங்கள் பாரதத்தின் மர்மமே...!!//

நிஜவரிகள். நினைக்கப்படவேண்டியவர் நேதாஜி.

சே.குமார் said...

கவிதை வரிகளில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுதந்திர தீயில் எண்ணெய் வார்த்த வீரனுக்கு சல்யூட் அடிக்கின்றன. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

நேதாஜி அவர்களை நினைவில் கொள்வோம்.
தேசபக்தி கொண்டவர்களின் நெஞ்சில் அவர் என்றும் வாழும் அமரர்.

Chitra said...

நாட்டுபற்றை தூண்டி விடும், சமர்ப்பண கவிதை தந்ததற்கு வாழ்த்துக்கள்!

பாரத்... பாரதி... said...

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 114 வது பிறந்த தினம்.... நேதாஜீக்கு எங்கள் வீரவணக்கங்கள்...

பாரத்... பாரதி... said...

//செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர்
அதிர பெரும்படை நடத்திய பேராண்மையே.//
//வான் தரை
கடல் யாவிலும் படை நடத்திய

எங்கள் பாரதமே...!//
அருமையான வரிகள் ..

பாரத்... பாரதி... said...

வீர உணர்ச்சியையும், நேதாஜியின் வரலாற்றையும் இணைத்து கவிதை தந்தமைக்கு நன்றிகள்..

சுவடுகள் said...

வரலாற்றை புரட்டிப்போடவிருக்கும் தமிழின் நேசக் கவிஞா...உமக்கு ஒரு 'சபாஷ் '

சுவடுகள் said...

கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவனே.

தேசத்தின் விழிகளில் கண்ணீர்த் துடைக்க
தேகத்தை தியாகித்து செந்நீர் சிந்தியவனே..!
மேகத்தில் மிதந்து தாகங்கள் தணிந்தவனே.

அருமையான வீர வணக்கம்

Ramani said...

எங்கள் பாரதத்தின் மறைக்கப் பட்ட. மர்மமே..
பல செய்திகளை நினைவூட்டூம் ஒரு சொற்றோடர்.....
வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

நித்தம் நினைக்கையிலே உம்மை ஐயா சலனமில்லா தனிமையிலும் சலசலக்குதையா உள்ளுணர்வில் புது மலர்ச்சி ....

அந்நியரின் ஆதிக்கத்தை விரட்டிடவே நித்தம் துடித்த உன்மனது செயல்கொண்டு கூர்தீட்டி கூர்மையாக்கிய தேசத்து இளைஞர்களின் போர்ப்படையில் அன்று

அகத்தே தான் என்ற அகம் போற்றி அந்நியராய் மாறிவரும் கூட்டம் அடுக்கடுக்காய் சிரகொடிக்கும் அக்ரமர்களின் ஆடுகளம் ஆனதின்று மனமாய் தொடர்வாயோ மாறாக மாற்றுடல் படைப்பாயோ வரவேண்டும் வரம் வேண்டும் சுயமாலும் சூத்திரதார சூட்சமர்களிடமிருந்து தேசத்தைக்காக்க

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

Unknown said...

Entha kavithai superrr but entha kavithaiku arutha picture eruntha nalarukum.☺️☺️☺️👍