Wednesday, October 06, 2010

"அ....தர்மம்.!!"


அவிழ்சடை யவிழ்த்த களிமணம் கமழ்
காற்றிடை அவிழ்த்த அந்தண அதர்மம்
தில்லைவாழ் கூத்தன் திரிசடை முடிச்சில்
சேர்ந்து சிக்கித் தவித்த பூணூல் கூட்டம்.

நெகிழ் நெஞ்சம் முகிழ் இன்பம்
நெக்குறுக திக்கதிறும் தில்லையும் தான்
அதிரும் அவர் தொல்லையும் சேர்ந்ததிரும்
திருவிழா கூட்டத்தின் வாயதிரும் மனமுருகும்.

தான் செலுத்தா பக்தி தனியொருவன்
தான் கொண்ட போதில் எதிர்ப்பார்
இறை கண்ட போதில் "எப்படி?"யென
வியந்து நம்புகிலர் நந்தனார் உரைத்தும்

நறுமணம் கமழ் நறுமனம் கொண்டோர்
நலிவடைந்த இனம் என்றால்?... கதவடைப்பார்.
நாலடி தள்ளி வைப்பார் நஞ்சை
நெஞ்சில் வைப்பார் யாதொறு கேள்வியில்லை?

எதிர்ப்பது இறை யென்றாலும் எதிர்ப்பார்
இறை "இல்லை" யென்றாலும் எதிர்ப்பார்
தன்குலம் தழைக்க தான் மட்டும் பிழைக்க
எரிப்பார்.... எந்த தர்மமும்..! அதுவொன்றே

அந்தண தர்மம்.!? கோயில் கட்டார்
குளமும் வெட்டார், யாதொரு தொழிலும்
செய்ய வொட்டார், அவருக்கு தீட்டென்பார்
உன்னைத் தள்ளி வைப்பார்... அநியாயம்

இல்லை யென்பார் எல்லாம் முடிந்தபின்
நடுவே வந்தமர்ந்து நல்ல கதைபேசி
எதுவும் புரியா வாயசைப்பு வார்த்தை
"மந்திரம்" ஓதுவார் உன் காதில்?.

எல்லா மரியாதையும் தனக் கென்பார்
தானம்பெற தகுதி தனக்கே யென்பார்
சுள்ளிக் குச்சியும் கொடுத்து உதவார்
தேர் நடுவே நாயகனாய் வீற்றிருப்பார்

வீதியுலா வருவார் வெட்க மின்றி
ஆயிரம் காலமாய் தான் உழையார்
பிறர் உழைப்பில் வாழ்வது........ஒன்றெ
அந்தண தர்மம் என்றால் அது தர்மமா..?
*************************************************

No comments: