Sunday, October 24, 2010

"அவளை நினைத்து....!".



நுரைத் தளும்ப கரைப்புரளும் நதிமகள்...!
நரைத் திரை மூப்பிலா இளநங்கை...!
நந்தவனம் நடைபயிலும் அழகிய அசைவுகள்...!
நாளும் மனமேங்கும் உன் வரவுகள்..!

குலுங்கி சிரித்து குதூகளிக்கும் வனப்பில்
குழைந்து நெக்குருகும் இதயம் இன்னும்
கிரங்கி இங்கிதம் கருதி சொல்லப் படாத
காதலை சொல்ல கண்ணாடி முன்.....

ஒத்திகைப் பார்க்கும்...! தினம்.. தினம்...!
என்முன் எனக்கே வெட்கம்....உன்முன்
என்னாவேனோ?... எத்தனை நாள் காத்திருப்பு..!
நெஞ்சுக்கூடு எகிறும் பெருமூச்சில்...! வெப்புரைக்கும்

நாசியில் ....! வெந்து தணியும் ஆசைகள்...!
நயனப் நோக்குக்கே பசலைப் படுக்கை....!
நெளிச்சுழி அதரப் பேரழகில்.... உள்ளுக்குள்
நிகழும் பிரபஞ்சப் பெருவெடிப்பு யாரரிவார்..?

இலட்சம் முறை சொல்லிப் பார்த்தும்
இன்னும் சொல்லத் தயக்கம்....! எனை
சுயம் இழக்கச் செய்யும் உன்வசீகரம்...!
சுத்தமாய் செத்துப் போகிறேன் நானற்று....!

வேரற்ற வேம்பாய் விழும் என்னுயிர்...!
பரவசமடைந்த பக்தனின் நிலையில் வார்த்தைகளின்றி...!
விழிமூட விபூதி பூசும் பூசாரியாய் நீ...!
வியர்த்துக் கொட்டி விசும்புகிறேன் நான்..!

எப்படி? எப்படி? சொல்லிப் புரியவைப்பதென்
நேசம்...? சொல்லிப் புரிதலா?...சொன்னால்தான்
புரிதலா..? நீயாக...., நானாகும் வரை....
காத்திருக்கும் என் நேசம்... வேள்வியாய்...!

என்றாலும் எனக்குள் ஓரெண்ணம் கேள்வியாய்...?
எனக்கு நேர்ந்தது.... உனக்கு நேரவில்லையா...?
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டாம்...!
என்வினைக் கெதிரான எதிர்வினை உன்னிடத்தில்..!?.

6 comments:

பத்மா said...

கேள்விகள் கேட்டகாமல் நேசித்து கொண்டே இரும் ..விடை ஒரு நாள் வந்து விழும்

எஸ்.கே said...

எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு! அது நமக்கு கிடைக்குமா என்பதுதான் இன்னொரு கேள்வி!

'பரிவை' சே.குமார் said...

நண்பரே...
நேசிப்பிற்குள் கேள்விகள் எதற்கு..?
ஒருநாள் விடை தெரியும் அதுவரை நேசியுங்கள் நண்பரே..!

தமிழ்க்காதலன் said...

வாங்க... பத்மா.., மனசுக்கு ஆறுதலா சொல்றீங்க.., உங்கள நம்பித்தான் இருக்கேன்.. பார்த்துக்கோங்க...

தமிழ்க்காதலன் said...

கேள்விக்கு எதிர்க்கேள்விப் போட்ட எஸ்.கே... வாங்க.., உங்ககிட்ட இருந்து ஐயா..எஸ்கேப்.

தமிழ்க்காதலன் said...

வாங்க, தோழா.. (குமார்) ஏதோ நீங்கள்லாம் சொல்றீங்க.... அதனால "மனச"த் தேத்திக்கிறேன்.