Sunday, October 17, 2010

"அக்கரைப் பச்சை...!!".


செம்மண் பிரதேசங்களில்
செழித்தப் புற்கள் தின்று
கொழுத்தக் காராம்பசு
"கெடாய்க்கு" ஏங்கும் காலம்...
மணப்பாறைக் காளை
மனம் விரும்பி கேட்டும்
மறுத்தப் பசு...
சிந்துவுக்கோ...
ஜெர்சிக்கோ....
வாலைத் தூக்கும்.

வேலியோரம் மேய்ந்து
வெயில் நேரம் வயலில் பாய்ந்து...
கருகருவென வளர்ந்தப் பயிர்...
குறுகுறுவென மேயும் வெள்ளாடு.
குட்டிப் போடும் காலம் வந்தால்
வெளிநாட்டுச் செம்மறிக்கே
"விருந்து" வைக்கும்...!
உள்ளூர் "ஆட்டுக்கடா"...
அவமானத்தில்....
உயிர்த் துறக்கும்.



மலையடிவாரம்....
மண் பிரதேசம்....
பொதிசுமந்தே பொழுது கழிக்கும்
கோவேறுக் கழுதை...!
குட்டிப் போடும் ஆசை வந்தால்,
அரேபியாவுக்கு ஆள் அனுப்பும்.
ஒட்டகம் வந்து...
"உரச"  வேண்டுமாம்...!

சிறுதானியம் தின்றுக் கொழுத்த
எங்கள் வீட்டுக் கோழிகள்....
கொக்கரித்துக் கூப்பிடுமாம்...
ஐரோப்பிய கொண்டை சேவல்...!
கூரைமேல்....
கூவும் உள்ளூர் சேவல்
கோபமாய்  குதித்து
தற்கொலை புரியும்.



எங்கள் மரக்கிளையில்...
கூடுகட்டி வாழும் அண்டங்காக்கை...
அண்ட விடுவதில்லை...
அடுத்த காக்கையை..!
அடுத்த தலைமுறையேனும்....
"வெள்ளையாய்" விரும்பி....
வெள்ளைக் காக்கைக்கு
விரதம் இருக்கும்...
"கறுப்புக் காக்கை..!".

புற்றீசல் கூட...
புலகாங்கிதம் தாங்காமல்...
இனச் சேர்க்கைக்கு....
ஈழம் அலைந்தேகுதாம்...!
பர்மாவிலிருந்து
பறந்து வரும்
இறகு முளைத்த எறும்பு தரும்
குறுஞ்செய்தி...!!.



குளம், குட்டை மீன்
தின்று திகட்டிய வெள்ளைக் கொக்குகள்...
கடலுணவுக்கு ஆசைப்பட்டு...
கற்பிழந்தன....!
வெளிநாட்டு நாரையிடம்.

முட்டையிட கூடு தேடி
இந்திய குயிலொன்று
இங்கிலாந்தில் அலையுதாம்...!
அடுத்த தலைமுறையின்
நிறம் மாற்ற..!!.

பிள்ளைப் பருவம் முதல்...
பிஞ்சுகளின் மழலை மொழி
"மம்மி..., டாடி"...!
பின் வந்த பருவத்தும்....
"காண்வென்ட் கூண்டுக்கிளி...!
பருவத்து ஆடை மாற்றம்...
ஐரோப்பிய ஆடை மாற்றும்...!!
ஆங்காங்கே....
அரேபிய.... வாடை வீசும்...!
கிஞ்சித்தும் "தமிழ்"ப்  பேசாக்
கிளி நாங்கள்...!
மஞ்சத்தில் மட்டும்....
தமிழனை.....!
தாங்குமா நெஞ்சம்...?.

இடைக்கும் தொடைக்குமான
மையப் பிரதேசம்.....
தொப்புள்....! எங்கள்
"தேசிய அடையாளம்"
தெரிந்து கொள்ளவே...
திறந்து காட்டினோம்.

புரிந்து கொள் தமிழா...!

I love America....
I love Europe....
I love England...

Not  You....
Naughty  Boy.


8 comments:

பத்மா said...

வெஞ்சினம்

அழகி said...

//தொப்புள்....! எங்கள்
"தேசிய அடையாளம்"//

இது நியாயமா?

எஸ்.கே said...

nice

sakthi said...

குளம், குட்டை மீன்
தின்று திகட்டிய வெள்ளைக் கொக்குகள்...
கடலுணவுக்கு ஆசைப்பட்டு...
கற்ப்பிழந்தன....!
வெளிநாட்டு நாரையிடம்.

யப்பா ரெளத்திரம் பொங்கும் கவிதை வரிகள்

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழி.... ( பத்மா..), வணக்கம். உங்கள் வெஞ்சினம் புரிகிறது. கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

தமிழ்க்காதலன் said...

அழகிய தோழிக்கு வணக்கம். ( அழகி ), உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. பின் குறிப்பு : அடையாளப் படுத்தியதை.... அறிமுகப் படுத்துகிறேன்...., அவ்வளவே...!! வ்வே..!!

தமிழ்க்காதலன் said...

ஔவைப் போல் ஒற்றை வார்த்தையில் ஒப்புமை சொன்ன எஸ். கே க்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

தமிழ்க்காதலன் said...

முதல் தடம் பதிக்கும் சக்திக்கு..., வாங்க, வணக்கம் சக்தி, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இன்னும் இன்னும் ரௌத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன். "தமிழின் தற்போதைய தேவை ரௌத்திரம் பழகு". உங்களுக்கு பிடிக்குமோ? பழக...பழக... தமிழ் இனிக்கும்.