Sunday, October 24, 2010

"மோனம்..."



யாருமிலா வனாந்தரத்தில்...
யாழிகள் உறையுமிடத்துக் கருகில்...
யாழிசைக்கிறேன் ...! என்னிசை


தந்த மயக்கம் யாருக்கோ...?
முதுமக்கள் தாழிக்கோ...?
வருடும் காற்றில் திணறும்...
உணர்வுகள் வடிக்கிறேன்.


குவிந்த மனமோ  இசைத் தியானிப்பில்...!
குவளையம் மறந்தே குதூகளம்.
காற்றில் கறையும் என் கானம்
காதில் வாங்கும் யாழிகள் இரண்டு.


முன் சென்மத்து யட்சன், யட்சனியாம்.
இந்த இசை எங்கள் பாவ விமோச்சனம்
இசைத்திடுக...! என்றனர். 


விழித் திறக்காமல்....
யாழிசைக்கப் பழகி....
விரல்களின் நர்த்தனம்...
மனம் படிக்கும் இரகசியம்...!


புல்தரையோ...! பொட்டல் வெளியோ...!
வாழிடமிட்டேகி.... வயல் பரப்பில்...
வந்து... வந்து வாழ்ந்துப் போகிறேன்...!


யானும்...என்
யாழும்...அதன்
இசையும்...! எங்களோடு  
இரண்டு யாழியாகிய...
யட்சன், யட்சனியும்....!


தனித்த என் மோனத்தில்
தவமிருக்கும்... வாழ்க்கை.
*********************************

3 comments:

வினோ said...

/ விழித் திறக்காமல்....
யாழிசைக்கப் பழகி....
விரல்களின் நர்த்தனம்...
மனம் படிக்கும் இரகசியம்...! /

அருமை தோழா...

'பரிவை' சே.குமார் said...

//விழித் திறக்காமல்....
யாழிசைக்கப் பழகி....
விரல்களின் நர்த்தனம்...
மனம் படிக்கும் இரகசியம்...!//

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையா இருக்கு நண்பா...
இந்தக் கவிதை அருமை என்றால் இந்த வரிகள் அழகு.

தமிழ்க்காதலன் said...

இனிய தோழர் வினோவுக்கும்,

குமாருக்கும் எனதினிய வணக்கம்.

உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.