Thursday, October 14, 2010

"யார்...?".

கிடைமட்ட கோடு
கிடத்தி நேர்க்குத்து கோடு
கிழித்த பிளவின் விளைவு....
பிறவி..!!

அலை வடிவொத்து
நீள் குழல் அலைந்தேகி...
பிரபஞ்ச கருவாக
வால் நறுக்கி
துளையிட்ட தலை...!

கருக்குழி அடைத்தப்
கருவிழிக் கோளங்கள்...!
பார்வைக்கு பழகாத
இருட்டு உலகம்...!!

இறகாய் முளைத்த
இரு கை வீ சல்...
திரவத்தில் முதல்
நீச்சல்..!!

கால் நீட்டி மடக்கி
சுழன்றது... இந்த 

விண்வெளியின்
முதல் நடைப்பயணம்..!

கூம்புக்குள் குவிந்து...
கூடிப் பெறுகி...
வட்டக் கலசமுடைத்து
வந்தவழி வழிந்தோடி...
காம்புக் கழும் வாழ்க்கை..!!

தொடர்புக் கொடி
துண்டித்த...துறுத்தி..
கண் பார்த்த முதல்
ஆச்சரியக் குறி..!!

வட்டத் தட்டில்...
வாயுறுஞ்சுக் குழல்...!
திசுப் பெருக்க...
தசைத் தின்னும்
பசி..!!

என் பசிக்கு இரையாகும்
இன்னோர் சீவனின்...
இரத்த அணுக்கள்...!!
எனக்கும்...உனக்கும்
பால்...!!

மென்மையாய்
பெண்மை கொல்லும்
பெருந்தன்மை..!!
உணவருந்தல்...!?.

ஆயுதம் மறைத்து
அன்பு குழைக்கும்
ஆபத்தான இதழ்கள்...!!
பதிக்கும் பற்குறி..!!

பற்றும் தனத்தில்
பசியின் நகக்குறி..!!
ஆகாரத்திற்கான
ஆதாரத்தில் நங்கூரம்..!!

நழுவாமல் இருக்க
இடுக்கிப் பிடிக்கும்
கால்களுக்கிடை
நசுங்கித் தவிக்கும்
ஆண்குறி...!!
இடுப்புப் பிரதேசம்
ஈரமாக்கும்...!.

எங்கேயிருக்கிறது....
குழந்தைத் தனம்?.

நான்...
குழந்தையா..?
கொலையாளியா??.

****************************

12 comments:

சிவாஜி சங்கர் said...

Nalla irukku nanbaa..,
vanmurai athigama iruke.. :)

'பரிவை' சே.குமார் said...

Super.

வினோ said...

:)

அழகி said...

நீங்க நல்லவரா? ​கெட்டவரா?

தமிழ்க்காதலன் said...

என்ன சிவா செய்வது? உண்மையை சொல்லும் போது கொஞ்சம் "உறைக்கத்தான்" செய்கிறது. தண்ணீர் குடிக்க வேண்டியதுதான்.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் குமார், நல்ல ரசிகருக்கு என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

மௌனப் புன்னகை சிந்தும் தோழர் வினோவுக்கு, பிறவிப் புரிகிறதா? நன்றி.

தமிழ்க்காதலன் said...

புதிதாய் வருகை தரும் "அழகி" க்கு வணக்கம், வாங்க. உங்கள் அழகிய வருகை இந்த ஏழையின் குடிலை இனிதாக்கியது. நல்லாப் பாருங்கள். நல்லது கெட்டதுப் புரியும். நன்றி. தொடருங்கள் ஆதரவை.

சுபத்ரா said...

உங்கள் தளத்திற்கு வந்து நான் படித்து வியந்த முதல் கவிதை... பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமை..

ஜெயசீலன் said...

அருமை... அருமை... அருமை... மன்னிக்கனும் நான் கொஞ்சம் தாமதம்...

*ஒரு வேண்டுகோள், சிவாகூட சேராதிங்க* ;P

தமிழ்க்காதலன் said...

வாங்க சுபத்ரா.., உங்கள் வருகையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். முதல் கவிதை வாசிப்பு உங்கள் மனம் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து ஆதரவு தர வேண்டுகிறேன். மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

தோழர் ஜெயசீலனுக்கு வணக்கம். என்ன திடீர்ன்னு இப்படி சொல்லிட்டீங்க..! சிவாஜி யாருங்க...? " நண்பேன்டா" ........ஹ..ஹ..ஹா..., நல்ல நட்புக்குள் வந்துதித்த ஜெயசீலன்... தொடருங்கள் உங்கள் ஆதரவை.., மிக்க நன்றி.