Wednesday, October 13, 2010

"தீராத் தனிமை...!!"



நொடிக்கொரு நிலை மாறும் வாழ்க்கை
வெடிக்கும் உணர்ச்சி வெறுமை தாளாமல்
தனித்தே வாடும் என்னுயிர் எரிக்கும்
வெப்பத்தில் வெந்து தணியும் உடல்.

மிரட்டும் இருட்டில் மின்மினியாய் விண்மீன்
எத்தனை இரவுகள் எண்ணியும் தீரவில்லை.
தனித்த நிசப்தம்....! தண்ணீர்ப் பானை...!!
தணிந்த பாடில்லை என் தாகம்.

கைநரம்பு புடைக்கும்.., இனம் புரியா
இதயப் படபடப்பு.., இங்கும் அங்கும்
நடை பழகும் இரவின் தனிமை
இதழ் கிழிக்கும் கூரியப் பற்கள்.

உள்ளே நடக்கும் உணர்ச்சிப் பிரளயம்
என்னை கொல்லும் வேதனை புரியா
ஊரும் உறவும் கொள்ளும் உறக்கம்
யாரறிவார் என் புலராப் பொழுதுகள்?.

மெலிந்தேன்.. எலும்பே தோல் திண்ணுமளவு...!
நலிந்தேன்.. திசுக்கள் யாவும் தீர்ந்துப் போக..!!
குழைந்தேன்... நுரையீரல் சுவாசம் சுருங்க..!!
கரைந்தேன் கண்ணீர் வற்றிய கண்களில்...!!!

உணர மறுத்த உறவு..! எனை
முயங்க மறுத்த  நீ..!! உனை
மறக்க மறுத்த என் மனம்..!
யாவும் வெறுக்க முடியா நான்..!!

நரகத் தனிமையில் நான் மட்டும்
நாயாய் அலைகிறேன்....! நகரம் உறங்க..!!
வீடும் அலுவலகமும் பற்றி எரிக்கும்
விரக தாபம் சுற்றித் திரியும் நான்.

என்றோ உன்னைக் காதலித்த காரணம்
இன்னும் இன்னும் இறுக்கமாய்...எனக்குள்
என்றைக்கும்  தீராத... தாகம்..! உன்னோடு.
எங்கோ.. எதற்கோ... இன்னும் அலைகிறேன்.

( இந்த எழுத்து என் இனிய நண்பன் சிவாஜி சங்கர் என்கிற சிவாவுக்காக.)

********************************************************************************

10 comments:

Chitra said...

உணர மறுத்த உறவு..! எனைப்
முயங்க மறுத்த நீ..!! உனை
மறக்க மறுத்த என் மனம்..!
யாவும் வெறுக்க முடியா நான்..!!


.... simply superb!

சிவாஜி சங்கர் said...

//உணர மறுத்த உறவு..! எனைப
முயங்க மறுத்த நீ..!! உனை
மறக்க மறுத்த என் மனம்..!
யாவும் வெறுக்க முடியா நான்..!!//

சிவாஜி-க்குன்னாலே இது வந்திடுதா..?? :(

நன்றி நண்பா..

தனிமை என்னை தின்னட்டும்.,
இன்று உன்னோடு...! :)

வினோ said...

அருமை நண்பரே...
சிவாஜி ஒரு ஓஓஓஓஓஓ

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை நண்பரே...
வரிகளில் கொஞ்சி விளையாடுகிறது...
உங்கள் கொஞ்சும் தமிழ்...
தமிழ்க் காதலன் என்பதை நிரூபிக்கும் பாடல்.
வாழ்த்துக்கள்.

தமிழ்க்காதலன் said...

சித்ரா அக்காவுக்கு வணக்கம். எனது கவிதைகளுக்கு முதல் கருத்துரையிடும் உங்கள் அன்புக்கு நன்றிக்கா. உங்களின் கவிதைப் பற்றிய சிந்தனைகளையும் எதிர்ப் பார்க்கிறேன். வெளியிடுங்கள். மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதினிய சிவாஜி சார்...! என்ன நலமா? சாமிக்கு தகுந்த பூசாரி வேணும்னு சொல்லுவாங்க. அதான். உங்களுக்கு அசைவப் படையல்..!!

தமிழ்க்காதலன் said...

எனதினிய அருமைத் தோழன் வினோத்நிலா, உங்களின் ஒ ஒ ஒ ஒ...களுக்கு அர்த்தம் சிவாவுக்கு புரிந்தால் சரி. உங்களின் "ஒ" க்களுக்கு என்னுடைய "ஓஓஓஓ" வைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் குமார், உங்களின் கொஞ்சும் தமிழ் என்னை சிலிர்க்க வைக்கிறது. நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

ஜெயசீலன் said...

நல்லக் கவிதை... வாழ்த்துக்கள்

தமிழ்க்காதலன் said...

அன்பு நண்பர் ஜெயசீலன் வாங்க.., உங்கள் முதல் வருகைக்கும் என் மீதான அன்பிற்கும் மிக்க நன்றி.