Friday, October 08, 2010

"அளவுக்கு மிஞ்சினால்...!" பாகம் - 1.


குளிர்ந்த கோள்கள் குழம்பாகும்
சுற்றித் தீப் பிழம்பாகும்....,
பூதங்கள்
நான்கும் நானாவேன்,
நான் மட்டும்
தனித் தீவாவேன்...
ஐம்பூத ஒடுக்கம்.!


எரிப்பேன் எச் சத்தையும் அதன்

எச்சத்தையும் மீதம் வைக்காமல் மிச்சத்தையும்.

எரிப்பதால் எழும் புகையும்...எரிப்பேன்.

எதிர்ப்பதால் சூழும் பகையும் எரிப்பேன்.


விண்மீன்கள் விழுங்கும் வாய் எனக்கு

வாய்ப்பிருந்தால்.., எரி விண்மீன் எரிக்கும்

விழியெனக்கு. சூல் கொள்ள தாங்கும்

சூற்ப் பை இல்லை எனக்கு.


சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!
கோள்கள் நகரும் என் நரம்பில்...!!
இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!!

என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..?


நான் இல்லாத சூரியன் கரும்பூதம்.

நான் இல்லாத பிரபஞ்சம் பாழிருள்.

நான் இல்லாத பூமி நரகம்.

நான் இல்லாத இயற்கை கொடுமை.


விதிக்கும் விளக்காவேன்..! உன்
விழிக்கும்
வழி காட்டுவேன்.. அணுக்குள்
அடங்கி
அண்டம் நிறைந்து கிடக்கும்
நான்
.....!!?

விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன்.


நான் நெருப்பு...!!!

நீ.....???
************************************************

5 comments:

வினோ said...

/ விதிக்கும் விளக்காவேன்..! உன்
விழிக்கும் வழி காட்டுவேன்.. அணுக்குள்
அடங்கி அண்டம் நிறைந்து கிடக்கும்
நான்.....!!?

விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன்.

நான் நெருப்பு...!!!
நீ.....??? /
அருமை நண்பரே

பனித்துளி சங்கர் said...

////// சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!
கோள்கள் நகரும் என் நரம்பில்...!!
இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!!
என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..? ////////////

மிகவும் அருமையான சிந்தனை . நல்ல இருக்கு நண்பரே ஒவ்வொரு வரிகளும், வார்த்தையும் . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

தமிழ்க்காதலன் said...

இனிய தோழன் வினொத்நிலா.. வாங்க.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வாங்க சங்கர்..., உங்கள் பனித்துளிப் பார்வை என்மேல் பட்டதற்கு நன்றி.

தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்.

சுவடுகள் said...

கொதித்துப் போய் கிடக்கிறேன். உங்கள் எழுத்தின் தகிப்பு.., வேகம்.., வெளி நோக்கி விரியும்....உங்கள் பார்வை...அப்பப்பா..!
மிகவும் ஆழமாக யோசிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நல்ல பதிவுகள் தொடர்ந்து தாருங்கள்.
# எரிப்பதால் எழும் புகையும்...எரிப்பேன்.
என்ன உக்கிரம்..!

# விண்மீன்கள் விழுங்கும் வாய் எனக்கு
வாய்ப்பிருந்தால்.., எரி விண்மீன் எரிக்கும்
விழியெனக்கு. சூல் கொள்ள தாங்கும்
சூற்ப் பை இல்லை எனக்கு.
அற்புதம்.. அற்புதம்.

# சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!
கோள்கள் நகரும் என் நரம்பில்...!!
இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!!
என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..?
உணர்ச்சித் தெரிப்பில்...சிலிர்க்கும் உள்ளம்.

# நான் இல்லாத சூரியன் கரும்பூதம்.
நான் இல்லாத பிரபஞ்சம் பாழிருள்.
நான் இல்லாத பூமி நரகம்.
நான் இல்லாத இயற்கை கொடுமை.
பிரபஞ்ச முடிவு... நினைக்கவே பயமா இருக்கு.

# விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன்.
தகிக்கும் வரிகள்.
நன்றி. நல்ல பகிர்வுக்கு.

தமிழ்க்காதலன் said...

எமது பதிவிற்கு முதல் வருகையை அசத்தலாக தந்திருக்கும் சுவடுகளுக்கு, வணக்கம். தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.