Tuesday, January 11, 2011

"கொடிகாத்த குமரன்"

நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க
சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி
யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி
யோசிக்க வைத்த எங்களின் குமரா..!

விழும் அடிகளின் எண்ணிக்கை யாவும்
"வந்தே மாதரம்" சொல்லி எண்ணி
வையத்தில் நிலைத்திட்டாய் எங்கள் நினைவில்
வான்நோக்கி உகுத்திட்டாய் உந்தன் ஆவி.

தேசப்பற்று பெரிதென்றாய் போற்றினேன்
தேசியம்தான் பெரிதென்றாய் போற்றினேன்
தேசக்கொடியே உயிரென்றாய் போற்றினேன்
தேசத்திற்கே உடல் என்றாய் போற்றினேன்

நாட்டுக்கு ஒரு நல்ல மகன் நீ
நாட்டுப்பற்றில் தலைமகன் நீ
வீட்டுக்கு ஒரு பிள்ளை உன்போல்
வேண்டும் இங்கு விதி மாற்ற...

கொடிகாத்த குமரனின் மண்ணில்,- இன்று
கோடி காத்த மைந்தர்கள் (ஏன்)...? 

குறிப்பு: திருப்பூர் கொடிக்காத்த குமரனின் நினைவு நாளான இன்று தமிழ்க்காதலனின் நினைவாஞ்சலி.   

2 comments:

Chitra said...

கொடிகாத்த குமரனின் மண்ணில்,- இன்று
கோடி காத்த மைந்தர்கள் (ஏன்)...?


.....சரியான கேள்வி!

'பரிவை' சே.குமார் said...

நண்பா,
சில பிரச்சினைகளால் உடனே படிக்க முடியவில்லை. நல்ல கவிதை.
கொடிகாத்து சுதந்திரம் பெற்ற நாட்டில் கோடி காக்கத்தானே வாரிசுகள் வளர்கின்றனர்.
என்ன செய்வது... எல்லாம் நம் (தலை)விதி.