Wednesday, October 20, 2010

"இலையுதிர் காலம்...!"



அன்பே...!
உன் மீதான என்
நம்பிக்கைகள்....
நீரரித்த வேராய்...
பிடிமானங்கள்
அற்றுப் போய்...!

நித்திரை... நிம்மதி...
குலைக்கும்.....
அதிகாலைக் கனவின்
அசுப சகுனங்கள்....!

இன்றேனும்...
நாளைக்குள்ளேனும்.....
வருவாயோ....!
வாடிக் கிடக்கும்...
என்னைப் பார்க்க...!!

ஒருவேளை....
தாமதமான உன் வருகை...
தாமதமானால்....!
உன் நினைவில்
கறுகிய என்
உடல் காண்பாய்...!!

வருத்தப் பட்டு....
வருத்தப் பட்டு....
வற்றிப் போன
என் மார்பில்...!
ஒரு துளி ...
உதிர்த்துப்  போ..!

எப்பொழுதோ...
இழுத்தணைத்த...
உன்னிரு கரங்களுக்காய்...!
பன்னிரு வருட காத்திருப்பில்...
கரைந்துப் போன என் தேகம்...!
அடையாளம் காண்பாயோ...!

யாருக்கும் தெரியா மச்சம்...
மறக்காதே....மாமா...
நீ மட்டும்...
தனித்த நிலையில்.....
என் உடலம்....
பார்.!!

வேகாத என்
நெஞ்சுக்கூட்டை....!!
வெட்டியான்....
வெட்டுவனோ....?
சாகும் வரை.....
நான் சேமித்த உன் நினைவுப்
பொக்கிசங்கள்- அங்கே
நிரந்தர உயிர்ப்பாய்....!

ஈமச் சடங்கிலேனும்....
உன் உதடுகள்....
என் பெயர்
உச்சரிக்கட்டும்...!! 

*****************************

10 comments:

Chitra said...

சாகும் வரை.....
நான் சேமித்த உன் நினைவுப்
பொக்கிசங்கள்- அங்கே
நிரந்தர உயிர்ப்பாய்....!


..... நல்லா எழுதி இருக்கீங்க....

சிவாஜி சங்கர் said...

//வேகாத என்
நெஞ்சுக்கூட்டை....!!
வெட்டியான்....
வெட்டுவனோ....?//

இந்த வரிகள் என்னை கவர்ந்தது நண்பா..

எஸ்.கே said...

//ஈமச் சடங்கிலேனும்....
உன் உதடுகள்....
என் பெயர்
உச்சரிக்கட்டும்...!! //
மனதை தொடும் வரிகள்!

அழகி said...

கவி​தை அரு​மை

வினோ said...

எதிர்பார்ப்பின் கனம் நண்பா...

தமிழ்க்காதலன் said...

யாரது....? சித்ராக்காவா..., வாங்க, உண்மையை சொன்ன ஒரு ஆணை பாராட்டும் முதல்ப் பெண்மைக்கு பாராட்டுக்கள். என்னக்கா நல்லா இருக்கீங்களா...? நலமே மலர நாளும் இறையைப் பிரார்த்திக்கிறேன். அன்பு சகோதரன்.... தமிழ்க்காதலன்.

தமிழ்க்காதலன் said...

என்னைக் கவர்ந்த என் அன்பு சிவாஜிக்கு, ( வாடா..., ) உன்னை காணவே இல்லையேன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தேன். வந்துட்டியா...!? இது போதும்.... இன்னும் ஒரு வருசத்துக்கு.... அருமை நண்பா..... உன்னைக் கவரும் எழுத்துக்களை தொடர்ந்து தர முயல்கிறேன். அன்னைத் தமிழின் ஆசிர்வாதங்களுடன்... தமிழ்க்காதலன். நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க...எஸ்.கே. உங்கள் வருகை இந்த எளியேனை பெருமைப் படுத்திற்று. தொடருங்கள் நல்லாதரவை.கருத்துக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

அழகாய்த் தடம் பதிக்கும் அழகிக்கு வணக்கம், வாங்க, உங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

தமிழ்க்காதலன் said...

இனிக்க நினைக்கும் தோழமை வினோவுக்கு, உங்களின் வருகை எனக்குள் ஒரு சந்தோசத்தை தருகிறது. நல்ல தோழமைக்கான ஏக்கமாய் இருக்கலாம். உங்கள் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என் எழுத்தில்...., பூர்த்தி செய்ய முயல்கிறேன். பூரணம் நோக்கிய பயணம் பூர்த்தியாகும் முன்...!!