Tuesday, October 19, 2010
"அவள் அப்படித்தான்"...!
என்னைப் புரியாத நீ..!
உன்னைப் புரிந்த நான்...!
ஊடுறுவும் பார்வையில்...
உணர்ச்சித் தெரிப்புகள்...!
எகிறிக் குதிக்கும் எண்ணக்குதிரை
கடிவாளமிடப்பட்ட கண்ணியவானாய்
நான்... உன்முன்..!
என் நுனிநாக்கில் முடிச்சிட்டுக் கொள்ளும்
உணர்ச்சிகள் !.... மொழிப் பெயர்க்க
வார்த்தைகளின்றி.....
உன்முன்...
மௌனியாய் நான்...!.
உன் விழிக்கோள அசைவில்
என் இதய நரம்பில் ஏழு சுரங்கள்...!
வெட்கி சிரிக்கும்
வினோதச் சிரிப்பில்...
சுழிவிழும் இதழ்க்கடையில்
சிக்கித் தவிக்கும் நான்...!
சிதறி வெடிக்கும் சிந்தனையில்...
கதறி விழும்....
கவிதைகள்...!
எதுவும் புரியாதது போல் வார்த்தைகள்.
எல்லாம் புரிந்ததாய்.... உன்
சின்ன சின்ன அசைவுகள்..!
அர்த்தமாய் நர்த்தனமிடும் நளினங்கள்....!
எனைத் திண்ணாமல் திண்ணும்
உன் எண்ணங்களுக்கு
இரையாகிறேன் நான்...!
தினம் தினம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சிதறி வெடிக்கும் சிந்தனையில்...
கதறி விழும்....
கவிதைகள்...!
...Excellent!
//சிதறி வெடிக்கும் சிந்தனையில்...
கதறி விழும் கவிதைகள்//
Nanba udalnalamillathathaal valaippakkam varavillai...
Kavithai arumai...
arumaiyana varigal.
vazhththukkal.
அற்புதம் சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!
எனதினிய சகோதரி, இதைத்தான் "குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டு படணும்" அப்படின்னு சொல்றாங்களோ...! குட்டுங்க...குட்டுங்க... ( நல்லா..)
நெஞ்சம் சுமக்கும் நேசனே, வாங்க குமார். உங்கள் உடல் நலமடைய விரும்புகிறேன். இந்த நிலையிலும் அன்பை அன்பாய் வெளிப்படுத்திய உங்களின் நேசம் பிடிக்கிறது. தொடருங்கள்.
வாங்க.., எஸ்.கே. வணக்கம். நல்லா இருக்கீங்களா..? உங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் வருகையை...
இனிய தோழி.... ( பத்மா தான் ), வணக்கம். உங்களின் வருகை எமக்கு உவகை அளிக்கிறது. கருத்து இரத்தின சுருக்கம். மிக்க நன்றி. ( ஒரு சிறு விண்ணப்பம்... ) உங்கள் கருத்துக்களை இனிய என் அன்னைத் தமிழில் பதிக்க வேண்டுகிறேன். ஏனென்றால் உங்களைப் போன்ற நல்ல தமிழ் எழுதுபவர்கள்.... தமிழுக்கு செய்யும் சிறு தொண்டாய் அமையும் என நம்புகிறேன். வருத்தமில்லையே..? மிக்க நன்றி.
Post a Comment