சிவன் : எவனடா இங்கே எனது தருமியின் துறை மீது குற்றம் கண்டு பிடித்தது....?
அரசன் : அவையில் "சபை மரியாதையுடன்" பேசவும்..., அவன் இவன் என ஏக வசனம் வேண்டாம்.
சிவன் : மைனாரிட்டிகளை சேர்த்துக் கொண்டு "மெஜாரிட்டி" என சொல்லிக் கொள்ளும் நீர்ப் பேச வேண்டாம் மரியாதைப் பற்றி...., அமைதியாக அமரும். தருமி.... "உன் திட்டத்தை" குற்றம் கண்டு பிடித்தவன் எவன் எனக் காட்டு..., இந்த கூட்டத்தில்...,
தருமி : "எதிர்க் கட்சிகள்" சொக்கா.... குறிப்பாய் சொன்னால்... சுப்ரமணிய சுவாமி......
சிவன் : ( ஒரு கணம் பயந்து....) அடேய்... அடேய்... என் மகனிடமே என்னை வம்புக்கு இழுத்து விட்டாயே படுபாவி....., அவன் சிறுவயதிலேயே எனக்கு "பாடம்" நடத்திய வாத்தியார். அவனிடம் என்னை மாட்டி விட்டுட்டியே..... உன்னை நம்பி நான் வந்திருக்க கூடாது.
தருமி : சொக்கா... இது உங்கள் மகன் இல்லை. இது இந்திய அரசியலின் "சரவெடி" சுப்ரமணியசுவாமி..., பயப்படாமல் பேசுங்கள். ம்..ம்..ம்..
சிவன் : அடேய்... பேர் இராசியப் பார்த்தியா..! இந்த பேரை வக்கிரவன்லாம்...... கேள்விக் கேக்குராண்டா. இனிமே பூலோகத்துல யாருக்கும் இந்த பேர வைக்க கூடாதுன்னு மேலோகத்துல சட்டம் போடனும்.
தருமி : சொக்கா... ஒங்கொக்க மக்கா... வந்த வேலையைப் பாரும்...ம்..ம்..ம்
சிவன் : "என் நம்பிக்கைக்கு பாத்திரமான" இந்த தருமி மீது எதிர்க் கட்சிகள் என்ன குற்றம் கண்டுப் பிடித்தன....? குணத்திலா...? நடத்தையிலா...?
நக்கீரர் : குணத்தில் குற்றம் இருந்தால் அது மன்னிக்கப் படலாம். நடத்தையில்தான் குற்றம் இருக்கிறது.
சிவன் : யார்... யார்.. இவன்....? என்னையே எதிர்த்துப் பேசுபவன். நான் உருவாக்கிய கூட்டணியடா இது...
அரசன் : சொக்கா இவர் எதிரணி.... சற்று மரியாதையாகப் பேசவும். மானம் போய் விடும்.
சிவன் : ம்..ம்.. நீர் அமரும் மங்குனி.. நான் பார்த்துக் கொள்கிறேன். ஓ.... நீர்தான் அந்த "சாமியா"..?
நக்கீரர் : நான் அந்த சாமியல்ல.... "கந்த சாமி".
சிவன் : ம்..ம்ம்ம். ( என செருமி விட்டு ) சரி தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். என்ன குற்றம் கண்டீர்..?
நக்கீரர் : உங்கள் அமைச்சரின் கீழ் இயங்கும் இலாக்காவில் "ஊழல்" நடந்திருக்கிறது. அதற்கு அவரும் உடந்தை.
சிவன் : "ஊழல்" யூ மீன் "கையூட்டு"...ஹ..ஹ..ஹ...ஹ... வெட்கம்.. வெட்கம்..., ஊழல் பற்றி யார் பேசுவது...? உங்களில் எவன் ஊழல் செய்ய வில்லையோ அவன் பேசட்டும் ஊழல் பற்றி......
அமைச்சரவை : ( மயான அமைதியில்....எல்லார் தலையும் குனிந்த படி )
நக்கீரர் : நான் இருக்கிறேன்.... எனக்கு பதில் சொல்லும்...?
சிவன் : என் எதிரணியோடு "கை" கோர்த்துக் கொண்டு "பார்ப்பனீயம்" பார்க்கும் நீயா என்னைக் கேள்வி கேட்பது...?
நக்கீரர் : "கை" கொடுப்பது... பின் கால் வாரி விடுவது... இதெல்லாம் எனக்கு தெரியாது.... கூட்டணி சூத்திரமெல்லாம் உமக்குத்தான் அத்துப்படி.. திராவிடன் பெயரை சொல்லி திராவிடனையும், பார்ப்பான் எனச் சொல்லி பார்ப்பனரையும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவீரோ....?
சிவன் : ( மனதுக்குள்.... அடேய் உண்மையை பேசுகிறானேடா....) சரி..சரி... என்ன ஊழல் என விளக்கமாக சொல்லும்?
நக்கீரர் : ஏன் உங்கள் நம்பிக்கை நாயகன் சொல்லவில்லையோ....? பிறகு என்ன வக்காளத்து வேண்டியிருக்கு...? சரி சொல்லித் தொலைக்கிறேன். அலைக்கற்றை ஏலம் விடுவதில் ஊழல்....செய்திருக்கிறார் தருமி...
சிவன் : எப்படி...?
நக்கீரர் : ங்கொய்யால... உசுர வாங்குரான்யா...., ஐயா பெரியவரே, அரசாங்கத்துக்கு நியாயமா கிடைக்க வேண்டிய இலாபத்தை குறைத்து .., குறைந்த விலைக்கு சில நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார் உங்கள் அமைச்சர்...
சிவன் : அரசே.. இதற்கு உம்முடைய பதில்...?
அரசர் : இதெல்லாம் "அசின்" கொள்கைகள் தலைவா.
சிவன் : என்னது அசினா...? எனக்கு தெரியாமல் இங்கு இப்படியெல்லாம் நடக்கிறதா?
அரசர் : இல்லை..இல்லை.. வாய் தவறி விட்டது தலைவா..., "அரசின் கொள்கை" என முன்பே விளக்கமளித்து விட்டேன் தலைவா...?
சிவன் : அப்புறமென்ன .... விசயத்தை கமுக்கமாக முடிக்க வேண்டியதுதானே... என்னை ஏன் அலைகழிக்கிறீர்...?
அரசர் : அதுவந்து.... நமக்கும் மேல ஒருத்தர் ஆப்பு வச்சுட்டார். அதான்....
சிவன் : யாரு விஷ்ணுவா....? அவர் என் மைத்துனராச்சே...
அரசர் : இல்லை.... இல்லை...., இது "சுப்ரீம் கோர்ட்" என்கிற தர்ம ராசா...
சிவன் : அவர்களுக்கு இதில் என்ன வந்ததாம்....?
நக்கீரர் : நாட்டின் மீதும்..., நாட்டு மக்கள் மீதும் உள்ள அக்கரை....
சிவன் : "துரோகி"...? நம் கொள்கைக்கு எதிரானவன்....
அரசர் : என் தலை போய்விடும் போலிருக்கிறது.... ஏதாவது செய்யுங்கள்....
சிவன் : ஏ கந்தசாமி.... ஊழல் என்றாயே... அது எவ்வளவு... ரூவான்னு சொல்ல முடியுமா...?
நக்கீரர் : ஏன் உங்கள் அமைச்சர் உங்களிடம் உண்மையை கூறவில்லையா...? சரி சொல்கிறேன்... ஊழல் மதிப்பு... ரூபாய். 1.76 இலட்சம் கோடிகள்.....
சிவன் : அம்மாடி........ ( நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...) அடேய்.... தருமி... ஏமற்றிவிட்டாயேடா...., என்னையே ஏமாற்றிவிட்டாயேடா...., என் பிள்ளைகளை விட எமகாதகனடா நீ...
தருமி : சொக்கா... அவன் பொய் சொல்கிறான்... அவன் சொல்லும் தொகை நான் வாங்கிய இலஞ்சமில்லை. இந்திய அரசுக்கு நம்மால் ஏற்பட்ட இழப்புத் தொகை.... அவ்வளவுதான்... என் மூலமாக நம் எல்லோருக்கும் கிடைத்த இலஞ்சம் ரூவா. 60,000 கோடிகள் மட்டும்தான் தலைவா...?
சிவன் : ( ம்.ம்.ம்..ம் அமுக்கி வாசியடா... வெளியில் சொல்லாதே..) நக்கீரா.... சரி இதற்கு தீர்வு.
நக்கீரர் : உடனடியாக உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வாங்கிய பணத்தையெல்லாம் திருப்பி அரசாங்க கஜானாவுக்கு கொண்டுவந்து வைக்க வேண்டும். செய்த தவறுகளையும், உடந்தையானவர்களையும், அவரே வெளிப்படையாய் அறிவிக்க வேண்டும். தண்டனை அனுபவிக்க வேண்டும்....
சிவன் : ( ம்க்கும்... நடக்கிற காரியமா இது...) அதுசரி... இதற்கு முன் ஊழல் செய்தவங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறதா....?
நக்கீரர் : ( நொய்ங்க் என முழித்து விட்டு ) இதற்கு அரசர்தான் பதில் தரவேண்டும்.
அரசர் : இல்லை தலைவா... வழக்கமா.... சி.பி.ஐ விசாரணை.... பின், கோர்ட்டில் விசாரணை... பின் வாய்தா வாங்களிலேயே..... காலத்தை ஓட்டி மண்டையை போடுவதுதான் மரபு ....பிரபோ...
சிவன் : வ்வாவ்... அப்புறமென்ன....! அதையே பின்பற்ற வேண்டியதுதானே...
அரசர் : இந்த முறை "அமௌண்ட்" அதிகமானதாலயும், இதில எதிர்க்கட்சிகளை நாம கவனிக்காம விட்டதாலயும் இப்போ அவங்க "பொதுக்குழு" விசாரணை கேட்டு ஸ்டிரைக் பண்றாங்க...
சிவன் : சரி..சரி.., இது நம்மலோட தப்புதான். என்ன இருந்தாலும் அவங்களும் நாமளும் ஒரே ஜாதி. "அரசியல் ஜாதி". அவங்கள கவனிச்சிருக்கனுமில்ல... என்னாய்யா நீர்... இப்ப எதுனா குடுத்தா வாங்குவாங்களான்னு பார்த்தியா..?
அரசர் : முடியாது தலைவா... அதுல ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு... விசயம் வெளியில "லீக்" ஆனதால... பொதுமக்கள்... சுப்ரீம் கோர்ட்... மீடியா... உலகம் என மொத்தமும் இந்த மெகா ஊழலைக் கவனிக்குது.
ரெண்டாவது.... எதிர்க் கட்சிகள் இதை வச்சி அடுத்த தேர்தல்ல ஆட்சிய பிடிக்கப் பாக்குராங்க....
சிவன் : யோவ்... என்னாய்யா...நீ, ஊழல் அரசியல்ல "கை" வச்ச நம்மல மிஞ்ச ஆள் இருக்கா... ஊழல்ல உங்களுக்கு 60 ஆண்டுகால அனுபவம்யா... அதை வச்சி எதையாவது செஞ்சி சமாளிக்கப் பாரு. நான் வேணா உனக்கு ஒத்தாசையா ஒரு அறிக்கை விடுறேன். அப்படியே நம்ம பய "தருமியையும்" ராஜினாமா பண்ண சொல்றேன். எதுக்கும் ஒரு வாட்டி "மகாராணிய" கலந்து பாருய்யா....
அரசர் : சரி தலைவா..
சிவன் : கந்தசாமி நீ இந்த விசயத்த இத்தோட விட்டுடனும். என்ன
சொல்ற... உனக்கு எதுனா வேணும்னா என்ன கேளு..
எவ்வளவு ஊழல் நடந்திருக்கோ அதுக்கு தகுந்தாப்ல பங்கு தரச் சொல்றேன். என்ன சம்மதமா...?
நக்கீரர் : இரந்துண்டு வாழ்வோம்...., ஆனால் உம்போல் அசிங்கப்பட்டு, அவமானப் பட்டு, நேரத்துக்கு தக்கபடி அரசியல் கூட்டணி வச்சு... தனக்குதானே புகழ் பாடி..., தினம் ஒரு மேடை ஏறி.., யாரையாவது புகழ்பாட சொல்லி.... மைக்க கடிச்சு ... முழுப் பூசணிக்காயை வாயால மறைச்சி.... இப்படி ஒரு செத்த வாழ்க்கை வாழ மாட்டோம்.
சிவன் : அடேய்.... இவன் பார்ப்பான். திராவிட இனத்துக்கு எதிரானவன். நமக்கு துரோகி. தருமி "ஏழை ஜாதி" அப்படிங்கறதால இவனுக எல்லாம் சேர்ந்துகிட்டு நம்ம தருமிய பழி வாங்கறாங்க.... அப்படின்னு நாளைக்கு என்னோட "உடன்பிறப்பு" அறிக்கை விடுறேன். பேப்பர்ல படிக்கத் தவறாதீங்க.... ஏன்னா... "இன்றைய செய்தி... நாளைய வரலாறு"
இலஞ்சத்திலும் திராவிடன் சளைத்தவன் இல்லை அப்படின்னு நாளை உலகம் பேசும்.
"தருமி" ங்கிற உன் பேரைக் கேட்டா சும்மா கிடுகிடுன்னு டில்லி அதிருதில்ல.....ராசாஆஆஆ.... நீ சரித்திரம்டா.
"இந்திய ஊழல் வரலாற்றை" எழுதுகிற எந்த எழுத்தாளனும் உன்னோட பேர் இல்லாம இந்த சரித்திரத்த முடிக்க முடியாது.அரசர் : மொதல்ல... இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ... தலைவா... நாளைக்கு நடுத்தெருவுல என்ன பஞ்சாயத்து பண்ண விட மாட்டேன்னு அடம் பிடிக்குறானுக...
சிவன் : யோவ்... கவலைப் படாதே... நாளை பேப்பர்ல "ராஜா" ராஜினாமா...ன்னு வரும்...
அரசர் : தல.... என்ன கடைசியில என் தலையில கைய வச்சுட்டீங்க.... நான் எதுக்கு ராஜினாமா பண்ணனும்....?
சிவன் : என் கேரக்டரையே புரிஞ்சிக்கலையே நீ. ஒஹோ... நீ உன்ன நெனச்சுட்டியா.... நான் தருமிய சொன்னேன். தருமி ராஜினாமா பண்ணிடுவார்.
அரசர் : அப்பாடா..... ஒரு வழியா என் தலை தப்பியது....
நக்கீரர் : நாளை நான் சுப்ரீம் கோர்ட்ல "ஊழலாற்றுப் படை" தமிழ்ல நூல் எழுதி.... வெளியிடப் போறேன்.
சிவன் : நான் அதை எதிர்த்து "பூணூல்" பிரச்சார உண்ணாவிரதம் மெரினாவுல அதிகாலை 4.30 க்கு மேல் 6.00 மணிக்குள்
இருக்கப் போறேன். எல்லாரும் வந்துடுங்க...
இத்துடன் சபை கலையலாம்....
நக்கீரர் : யார் கண்டா....? நாளை ஆட்சியே கலையலாம்....
சிவன் : ( கோபமாக முறைத்து விட்டு ) எப்படியோ தருமி மூலமா நமக்கு நல்ல வரும்புடி...( வருமானம் ), தருமிக்கு தரும அடி...., நமக்கு நம்ம குடும்பம் பெருசுப்பா.....
( புரிஞ்சுதா....... மக்கா. )
10 comments:
என்னங்க திடீர்னு அரசியல் பதிவு!
இருந்தாலும் நல்லாயிருக்கு!
என்ன சொல்வது நண்பரே...
நாட்டு நடப்பு கவிஞரையும் அரசியல் பதிவெழுத வைத்துவிட்டது....
ரசித்தேன்... சிரித்தேன்...
ஆகா ,, போற போக்க பார்த்த கவிஞர், விரைவில் நேரடி அரசியல் களத்தில் குதிப்பார் போலத்தெரிகிறது...
பதிவும்,தலைப்பும் அருமை.
//என்ன இருந்தாலும் அவங்களும் நாமளும் ஒரே ஜாதி. "அரசியல் ஜாதி". அவங்கள கவனிச்சிருக்கனுமில்ல... என்னாய்யா நீர்... இப்ப எதுனா குடுத்தா வாங்குவாங்களான்னு பார்த்தியா..?//
சர வெடி சாட்டையடி பதிவு
கலக்கல்
அடேய்... பேர் இராசியப் பார்த்தியா..! இந்த பேரை வக்கிரவன்லாம்...... கேள்விக் கேக்குராண்டா. இனிமே பூலோகத்துல யாருக்கும் இந்த பேர வைக்க கூடாதுன்னு மேலோகத்துல சட்டம் போடனும்.
தருமி : சொக்கா... ஒங்கொக்க மக்கா... : நாட்டின் மீதும்..., நாட்டு மக்கள் மீதும் உள்ள அக்கரை....
சிவன் : "துரோகி"...? நம் கொள்கைக்கு எதிரானவன்....
அம்மாடி........ ( நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...) அடேய்.... தருமி... ஏமற்றிவிட்டாயேடா...., என்னையே ஏமாற்றிவிட்டாயேடா...., என் பிள்ளைகளை விட எமகாதகனடா நீ........ராசாஆஆஆ.... நீ சரித்திரம்டா.
"இந்திய ஊழல் வரலாற்றை" எழுதுகிற எந்த எழுத்தாளனும் உன்னோட பேர் இல்லாம இந்த சரித்திரத்த முடிக்க முடியாது.
நக்கீரர் : நாளை நான் சுப்ரீம் கோர்ட்ல "ஊழலாற்றுப் படை" தமிழ்ல நூல் எழுதி.... வெளியிடப் போறேன்.
சிவன் : நான் அதை எதிர்த்து "பூணூல்" பிரச்சார உண்ணாவிரதம் மெரினாவுல அதிகாலை 4.30 க்கு மேல் 6.00 மணிக்குள்
இருக்கப் போறேன். நமக்கு நம்ம குடும்பம் பெருசுப்பா.....
பட்டைய கிளப்பிட்டீங்கண்ணே !!
நகைச்சுவை கவிதை என்று நினைத்து வந்தேன். அரசியல் காமெடில புகுந்து இருக்கீங்க.... variety ஷோ!
கலக்கல் பதிவு.. நண்பரே புதிய வழியா?
சொக்கனும் தருமியும் இப்பிடித்தான் இப்போ பேசிக்கொள்வார்களோ.இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி .... கற்பனை !
Post a Comment