Tuesday, November 30, 2010

"வாழ்க்கை...!"



வனாந்தரங்களில்...
அலைகழியும் வாழ்க்கை
மணற்  புயலாய்....!

புழுதிப் பெருவெளியில்...
ஒண்டிக் குடித்தனம்
நடத்திக் கொண்டிருக்கும்....!
தனிமரம் முகம் சுழிக்கும்
அலைப் பரப்பில்....
காலத்தின் நினைவலைகள்....!
கால்தடம் பதிந்த
மணற்பரப்பு.

நீருக்கு அலையும்
வேருக்குள் தாகம்...!
நிலத் தகர்ப்பில்
நீளும் வாழ்க்கை...!!

மணல் முகட்டில்
தகதகக்கும் அழகொளியில்
கேட்பாரற்று கிடக்கும்....
வாழ்க்கை.....!!

சுனைத் தேடும் ஒட்டகத்தின்
சுவாசத்தில்....!
உயிர்ப்பின் தேடல்
காற்றாய் கரைகிறது...!!

தங்கத் தட்டில்
மரகதம்
மணல்வெளியின்
புல்வெளி...!!
பசுமையாய் வாழ்க்கை....
படர்ந்து கிடக்கிறது...!!

மார்பில் ஒளியொழுகும்....
மணல் மலைகள்...!!
திங்கள் ஒளி மணல்வெளியில்...!!
திறந்து கிடக்கும் வாழ்க்கை....
திருட யாருமின்றி...!!

பகலும் இருளுமாய் வாழ்க்கைப்
பறிமாற்றம்....!
பாலையில் பாலொழுகும்
பால் நிலா...!!
காய்ந்து கிடக்கிறது.....
கவனிப்பாரின்றி...!!

கருமேகக் கைகுலுக்களில்
கவின்மிகு ஓவியங்களாய்
ஒளிந்துக் கிடக்கிறது....
வாழ்க்கை....!
திறந்து பார்க்க யாருமின்றி...!!


9 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழ்க்கை படமாய் விரிகிறது உங்கள் கவிதையில்...
அழகிய வரிகள்....

அருண் பிரசாத் said...

வாழ்க்கை -படம் அருமை... அது தரும் பாடங்களை போல

Thangarajan said...

KAVITHAI NANRAAGA ULLATHU.

செல்வா said...

//பகலும் இருளுமாய் வாழ்க்கைப்
பறிமாற்றம்....!
பாலையில் பாலொழுகும்
பால் நிலா...!!
காய்ந்து கிடக்கிறது.....
கவனிப்பாரின்றி...!!//

கலக்கலா இருக்கு அண்ணா .,
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு ..!!

தினேஷ்குமார் said...

நல்லாருக்கு நண்பரே வாழ்க்கை
அனுபவம் ஆயிரம் கதைசொல்லும்
விடியும் வரை விண்நிலா
விளையாடும் நம் கண்ணிலே .........

Thoduvanam said...

மிக அருமையாய் இருக்கிறது கவிதை..வாழ்த்துக்கள்.

Unknown said...

//மணல் முகட்டில்
தகதகக்கும் அழகொளியில்
கேட்பாரற்று கிடக்கும்....
வாழ்க்கை.....!!//

அழகான வரிகள்..

Unknown said...

படங்கள் அருமை...

ஹேமா said...

படமும் கவிதையும் வாழ்க்கையை
கண்முன் நிறுத்துகிறது !