Sunday, November 28, 2010

"விபரீதம்"....!!


பொதுவாய் இருந்த
குளம் நிறைத்த
வாய்க்கால், வடிகால்...
வழி யாவும் சுயநலம் சூழ...
பொய்த்து போன பருவமொன்றில்
காய்ந்துப் போன குளம்...!
வறுமைத் தாயின்
வற்றிய மார்பாய்...!

அல்லியும், தாமரையும்
அகலாச் சேற்றில்
ஆழப் பதித்த...
கிழங்கு நோண்டும்
கிழமும்...பேரனும்..!!

குளிக்க.....,
குண்டி கழுவத் தண்ணிக்கு
குளம் இல்லை...!
குழாயடியில்
குடிக்கவே தண்ணீர் இல்லை.
"பின்கழுவல்" எப்படி...?

பேரன் கிழித்துப் போட்ட
காகிதக் குப்பை
பொறுக்கினார் கிழம்...
கீழே குனிந்தபடி...!!
*******************************************

7 comments:

வினோ said...

வேதனை.. தண்ணி இல்லா நிலைமை கொடூரம்...

Philosophy Prabhakaran said...

கவிதை அருமை...

நிலாமகள் said...

முகத்திலறையும் நிதர்சனம்

எஸ்.கே said...

மனதை உருக்கும் கவிதை!

அருண் பிரசாத் said...

தண்ணீர்.....

பிரச்சினைக்குரிய பொருள்....

கவிதை அருமை

'பரிவை' சே.குமார் said...

முகத்திலறையும் நிதர்சன கவிதை.

ஹேமா said...

நீர் இல்லா அவதியை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் !