Thursday, November 11, 2010

"எங்கே அவன்...?".

பரந்த வெளியெங்கும்
திரிந்தலையும் ஆன்மாவின்
தேடல்....!
 

இன்னும் நேசிக்க
எத்தனை எத்தனை
இரகசியம் வைத்தாய்
இறைவா...!
 

ஒட்டகத் திமிலொத்து
ஓங்கிய மலைகள்...!
என் எண்ணத்தின்
எழுச்சியாய்...!
 

பாலாடைக் கூம்பு வாய்
வழிந்தோடும் பாலாய்
நதிகள்...!
 

மரகதப் பச்சை
பசும்புல் வெளி...!
 

நீலநிற ஆடைக்குள்
ஆழிப் பெண் நளினம்...!
தும்பைப் பூ படுக்கையாய்
துருவம்...!
 

மோருக்குள் மிதக்கும்
வெண்ணை உருண்டை
வழுக்கல்கள்....
பனித்துண்டங்கள்....!
 

தூய்மை துயிலும்
புள்ளினங்கள்...!
 

வளி மிதக்கும்
வான்துகள் தீட்டும்
வடிவம்...என்
கற்பனையின் களஞ்சியம்.
 

தேவைக்கு மேல்
தேடாத நல்லறிவு
பாரெங்கும் பார்க்கிறேன்
விலங்கிடத்தில்...!
 

இயற்கையின் மடியில்
இதமாய் வாழ்க்கை...
எந்த மிருகமும்
பசியடங்கி பின்
கொலை நிகழ்த்தவில்லை.
அதுவும் உணவுக்காய்
மட்டுமே...!
 

ஆடம்பரத்துகான
அத்துமீறல்கள்
எங்கும் இல்லை.
எல்லையிலா உலகில்
எல்லைகளற்ற வாழ்க்கை...!
 

தனித்துவம் இழக்காத
தார்மீக வாழ்வு....!!
பூவுலகில்....
தாவரங்கள்..
புள்ளினங்கள்...
விலங்கினங்கள்...
இங்கே கிடக்கும்
சுதந்திரம்....!
 

ஏனோ இல்லை...
எதுவும் மாந்தரிடம்.
 

இறைவா...!
இன்னும் தேடுகிறேன்
மனிதனை...!!!.

**************************

21 comments:

தினேஷ்குமார் said...

இறைவா...!
இன்னும் தேடுகிறேன்
மனிதனை...!!!.
==என்று எனை
மற்றுவாய்
மனிதனில்
மாற்றமாய்===

நல்ல வரிகள் சகோ

'பரிவை' சே.குமார் said...

//தனித்துவம் இழக்காத
தார்மீக வாழ்வு....!!
பூவுலகில்....
தாவரங்கள்..
புள்ளினங்கள்...
விலங்கினங்கள்...
இங்கே கிடக்கும்
சுதந்திரம்....!

ஏனோ இல்லை...
எதுவும் மாந்தரிடம்.//

வாவ்... ரசித்தேன்... அருமை... வரிகளில் ஜாலம் செய்யும் உங்கள் கவிதைகள் அருமை நண்பரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஏனோ இல்லை...
எதுவும் மாந்தரிடம்.

இறைவா...!
இன்னும் தேடுகிறேன்
மனிதனை...!!!.////

நச் பினிசிங்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தனித்துவம் இழக்காத
தார்மீக வாழ்வு....!!
பூவுலகில்....
தாவரங்கள்..
புள்ளினங்கள்...
விலங்கினங்கள்...
இங்கே கிடக்கும்
சுதந்திரம்....!////

ஆஹா... அருமை!

Chitra said...

ரொம்ப அருமையாக வந்து இருக்குங்க.

எஸ்.கே said...

அற்புதம் சார் அற்புதம்!
கவிதையை படித்து முடித்த உடன் ஏற்பட்ட உணர்வை விளக்க முடியவில்லை!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆன்மாவின் தேடல் பாதையில்
ஆயிரம் அழகைக் காட்டிய
அழகிய கவிதை.....!!

.......கவிதை அழகாய் இருக்குங்க.. :-))

செல்வா said...

//மோருக்குள் மிதக்கும்
வெண்ணை உருண்டை
வழுக்கல்கள்....
பனித்துண்டங்கள்....!
//

எல்லா வரிகளுமே கலக்கலா இருக்குங்க..
அதுவும் இயலா அதாவது கவிதைனா நடக்காத விசயங்கள அதிகமா சொல்லுவாங்க ., ஆனா நீங்க இயல்பா சொன்னது நல்லா இருக்கு ..!

THOPPITHOPPI said...

அருமை

அருண் பிரசாத் said...

கவிதை அருமைங்க.... வாழ்த்துக்கள்

மாணவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அழகான ரசனை...

யதார்த்தமாகவும் மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள்.

“தனித்துவம் இழக்காத
தார்மீக வாழ்வு....!!
பூவுலகில்....
தாவரங்கள்..
புள்ளினங்கள்...
விலங்கினங்கள்...
இங்கே கிடக்கும்
சுதந்திரம்....!

ஏனோ இல்லை...
எதுவும் மாந்தரிடம்”

மனதைத் தொட்ட வரிகள்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

தமிழ்க்காதலன் said...

வாங்க நேசமிக்க தினேஷ், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

இனிமை ததும்பும் தோழமை குமாருக்கு, வணக்கம். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் நிலைக்கட்டும். நன்றி.

தமிழ்க்காதலன் said...

எமது வலைப்பூவுக்கு முதன்முதலாய் வருகை தந்து கருத்துரை இட்டு, பின்தொடரும் அன்பு ராம்சாமி அவர்களுக்கு அன்பு வணக்கம். வாங்க. உங்களின் ஆதரவு தொடரட்டும்.

தமிழ்க்காதலன் said...

எனதருமை சகோதரி சித்ரா, முதல் வடை போச்சே.., பரவாயில்ல.. நாளைக்கு வாங்கிடலாம். எப்படி இருக்கீங்க? உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

தோழர் எஸ்.கே வாங்க. வணக்கம். கவிதை நல்லா இருக்குங்களா?. உங்களுக்கு பிடிச்சா சரிதான். நன்றிங்க.

தமிழ்க்காதலன் said...

அன்பு ஆனந்தி... வாங்க. வணக்கம். உங்கள் முதல் வருகை எனக்கு முத்தாய்ப்பாய். மிக்க நன்றிங்க. பின்னூட்டத்துக்கும், பின்தொடரலுக்கும். என்னோடும் எழுத்தோடும் தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க தம்பி செல்வக்குமார்.., வணக்கம். உங்களின் அன்பான வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் மிகுந்த நன்றிகள்.

தமிழ்க்காதலன் said...

அருமைத் தொப்பி.., வாங்க. இடையில் ரொம்ப நாட்களாய் காணோம். தொடர்ந்திருங்கள் தோழா.

தமிழ்க்காதலன் said...

வாங்க அருண்பிரசாத், வணக்கம். உங்களின் முதல் வருகை உவகை எமக்கு. மிக்க நன்றிங்க. உங்களின் பின்னூட்டத்துக்கும், பின்தொடரலுக்கும். தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

முதல் வருகையிலே தன் முத்திரை பதித்த மாணவன்... வாங்க. உங்களின் ரசனைப் பிடிக்கிறது. அன்பிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.