Thursday, November 25, 2010

"இனிது...! இனிது...!!" ( 100 வது படைப்பு )

கொஞ்சு மெழில் விஞ்சும் நெஞ்சமதில்
கொஞ்சு மொழிக் கெஞ்சும் மஞ்சமதில்
கொஞ்ச மின்பம் கொஞ்சத் துன்பமதில்
மிஞ்ச வரும் பேரின்பப் பெட்டகம். 



கூட்டும் இன்பம் கூட்ட வரும்
கூடும் இன்பம் காட்ட வரும்
காடும் மலையும் கானக் குயிலும்
கதவு திரை ஒதுக்கும் காற்றும்.



மொழியின் இனிமை வளமை அழகு
மோனத்தே  நீ  பேசாமல் பேச
புரிய விரியும் அழகு விழிகள்
மௌனத் துயில் மருகும் மானே..



மயிலிறகு வருடல் மயிர்க் கூச்செரிதல்
கனியிதழ் வருடும் கனிந்த கனிச்சுவை
பனித்துளிப் பருகும் பாவையின் பருவத்து
முனகல் தாகம் வளர்க்கும் மென்தேகம்.



கனலிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை
புகுந்து தழுவலின்பம் தந்ததொரு மயக்கம்.

15 comments:

Thoduvanam said...

அருவி மாதிரி கவிதை
அழகாய் ஓடுகிறது .
சொல்வளமும்
பொருள் வளமும்
பெரும் மகிழ்சிக் கடலில்
ஆழ்த்துகிறது.வாழ்க! வளர்க

முனைவர் இரா.குணசீலன் said...

100 இடுகைக்கான வாழ்த்துக்கள் நண்பா

முனைவர் இரா.குணசீலன் said...

கனலிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை
புகுந்து தழுவலின்பம் தந்ததொரு மயக்கம்.

நயம்!!!

தினேஷ்குமார் said...

azakaana kavithai nanpaa

100 kku vaazththukkal

பவள சங்கரி said...

ஆகா 100 வது பதிவா...வாழ்த்துக்கள். சும்மா கொட்டுது கவிதை அருவியாட்டமா....

'பரிவை' சே.குமார் said...

//லிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை //

வாவ்... ரசித்தேன்... மீண்டும் மீண்டும் ரசித்தேன்...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.... இன்னும் சிகரத்தை எட்ட வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள்... உங்களுக்கு பரிசு அடுத்த வாரம் தரேன்

செல்வா said...

//கனலிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை
புகுந்து தழுவலின்பம் தந்ததொரு மயக்கம்.///

இந்த நடை கலக்கலா இருக்கு அண்ணா .,
நூறுக்கு வாழ்த்துகள் ...!!

எஸ்.கே said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

தங்கள் எழுத்துக்கள் என்றுமே சிறப்பாக ஒரு தனித்துவதுடன் உள்ளன! அது இனி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி!

Chitra said...

அழகான கவிதையில் முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.
இனிமை.... இனிமை....
நூறாவது படைப்புக்கு பாராட்டுக்கள்! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

ஜெயசீலன் said...

அருமை... இனிமை... நீங்கள் கடந்து வந்த பாதை இக்கவிதையின் முதிர்ச்சி வழியாக விரிகிறது நண்பா... அருமை.... வாழ்த்துக்கள்... நிறைய இருக்கிறது இன்னும்...

ஜெயசீலன் said...

//கனலிடை அனலிடை கடும் புனலிடை
தணலிடை மணலிடை கார் முகிலிடை
புல்லிடை புதரிடை பூக் காட்டிடை
புகுந்து தழுவலின்பம் தந்ததொரு மயக்கம்.//

அட!!!

Philosophy Prabhakaran said...

நூறுக்கு வாழ்த்துக்கள்...

Ramesh said...

அருமையான கவிதை... நூறாவது படைப்புக்கு வாழ்த்துக்கள்

ஹேமா said...

அழகான மொழிவளம்.ஆழ்ந்த சிந்தனை.இன்னும் இன்னும் உங்கள் எழுத்துக்களை ரசித்தபடி.
வாழ்த்துகள் தோழரே !