Wednesday, November 17, 2010

"குழம்பி...!"


இளஞ்சூட்டில் இதழ்ப் பதிக்க பரவசம்...!
இதமாய் கை அணைக்க சுகம்
ஆவி நுகர்ச்சி ஆன்ம இன்பம்...!
ஆடைக் களையும் நாவுக் கிளர்ச்சி..!!

குவளைக் கடையும் கைகள் மிதமாய்
பாற்கடல் அமுதம் விளிம்பில் இதமாய்
பருகத் ததும்பும் பருவ உணர்ச்சி
பார்த்துப் பருகும் பார்வை நுகர்ச்சி...!

வாய் சரிந்து வழியும் அமுதம்
இதழ்க் குவித்து இழுக்க வின்பம்..!
இனிய உணர்வில் கண்கள் செருகும்
மணக்கும் மணத்தில் மிதக்கும் மனம்...!!

கனக்கும் கணம் குறையும் கைகளில்
கணங்கள் கணக்கும் சுவைத்த மனம்...!
இதழ்க் கடை வழியும் ஒருதுளி
இழுத்துச் சுவைக்கும் நாவுக் கிறங்கும்...!!.

பிரிந்த காதலி பின்னொரு நாள்
காணும்...! இன்பதுன்ப இரட்டை உணர்ச்சி
குதூகளிக்கும் மனதுக்குள்...!!, இன்று காலை
கிடைத்த குழம்பியின் கடைசிச் சொட்டில்...!!!.

10 comments:

அருண் பிரசாத் said...

yummy கவிதை

தினேஷ்குமார் said...

குழம்பி நல்லாருக்கு ஒரு கப் கிடைக்குமா தோழரே

'பரிவை' சே.குமார் said...

Coffee kudiththa sugam kavithaiyil...

செல்வா said...

கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு அண்ணா .,
ஆனா படிப்பதற்கு இனிமையா இருக்கு ..

அழகி said...

காபி குடித்த​தை எ​தை​​யோடு ஒப்பிடுகிறீர்கள்..... ​பெரிய ஆள் சார் நீங்க....

பவள சங்கரி said...

காப்பியைப் போலவே கவிதையும் சுவையாத்தான் இருக்குங்க......

ஜெயசீலன் said...

மனம் என்னமோ செய்யிது.... நான் ரெண்டயும் தான் சொன்னேன்... அருமையான் கவிதை...

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

ஹேமா said...

குழம்பியின் கடைசிச் சொட்டில் இத்தனையா !

எஸ்.கே said...

வித்தியாசமான கவிதை! ஆனா காப்பி குடிக்கிறதும் ஒரு சுகம்தான்!