Wednesday, November 10, 2010

"பச்சைக் கிளி"

பச்சை பாத்திரத்தில் பூத்திருக்கும்
பச்சைக்கிளி படர்ந்திருக்கும்
கவிந்த கவின் கூடு தழைத்த
தளிர் மிக்க துளிர் சொக்க
முகம் சிவக்கும் பஞ்சவர்ணம்.

பழம் எதுவென குழப்பும் அழகு
அலகாய் அமைந்த அதிசயம்..!
கழுத்து மேல் என் காதல்
சொல்லும் மஞ்சள் தாளி...!
வெட்கத்தில் சிவந்த மூக்கு..!

வளைத்தேடும் உன் வேகம்
வலைப் போடும் என் மோகம்
சிக்குவது யார்? நீயா? நானா?
சிலந்தி வலை நேசம்...!

முரண்டு பிடிக்கும் உன் கழுத்து
திருகல்...! முனக வைக்கும் என்னை..!!
குறுகுறுக்கும் பார்வைக்காய்
நெடுந்தவம் நான் புரிவேன்.

பிதுங்கும் விழிகளை உருட்டும் அழகில்
பிதுங்கும் நெஞ்சம் முயங்க கெஞ்சும்..!
பச்சைக்கிடை பதுங்கும் உன் பாசாங்கில்
இச்சைக்கிடை இம்சையாய் தேடும் நான்..!

பேசும் உன் பேச்சில் என் மூச்சு...
உள்ளும் வெளியுமாய்...
ஊசலாடும்...அவத்தை புரியுமா?
நிசத்தை நான் சொல்ல ....வெட்கமுனக்கு?

வேட்கை எனக்கு...!!

வாராயோ ... பைங்கிளியே..!!!

10 comments:

தினேஷ்குமார் said...

அருமையான வரிகள்

எஸ்.கே said...

அழகு! அழகு! அருமை!

'பரிவை' சே.குமார் said...

//வளைத்தேடும் உன் வேகம்
வலைப் போடும் என் மோகம்
சிக்குவது யார்? நீயா? நானா?
சிலந்தி வலை நேசம்...!//

அருமை நண்பரே...
பச்சைக்கிளி படமும் கவிதையும் அழகு.

Chitra said...

....very nice.... :-)

அன்புடன் மலிக்கா said...

பச்சைக்கிளி முத்துச்சரம்.
மிக அருமை வாழ்த்துக்கள்..

தமிழ்க்காதலன் said...

வாங்க தினேஷ்.., உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

அன்பு எஸ்.கே.., வணக்கம். உங்களின் கருத்துக்கு அன்பு நன்றிகள். தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

இனிய தோழன் குமார் வாங்க... உங்கள் கலக்கல் கருத்துக்கு மகிழ்ந்த நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க அக்கா.., நலமா? நன்றிக்கா.

தமிழ்க்காதலன் said...

வாங்க மாலிக்கா.., எங்க நீண்ட நாளா ஆளையே காணோம். பரவாயில்ல... வந்தீங்களே.... அதுவே சந்தோசம். கருத்துக்கு நன்றி. தொடருங்கள்.