Saturday, November 27, 2010

"வீர வணக்கம்....!!"


இன மான உணர்வோடு...
தமிழ் மண்ணுக்கும்...
தமிழ் மொழிக்கும்....
அதன் சுதந்திரத்துக்கும்...
தன்னுயிர் தந்த தியாகிகளின்
நினைவு நாளில்......

மானமிகு இனத்தின் சொந்த
மண்ணில் ஈனம் கலைய
"தமிழ் ஈழம்" மீட்டெடுக்க....
புகழின் உச்சியில் நின்ற தமிழை
புதைந்து போகாமல் தூக்கிப் பிடிக்க
புத்துயிர் கொடுக்க.....
புயலாய்... புலியாய்...
புறப்பட்டு...
தமிழ் இனத்தின் மானத்தை
சிவப்புக் குறுதிப் போர்த்தி
காத்து நின்ற....மறத்தமிழர்
மரணத்தில்...!
"சுதந்திர சாசனம்" பிரகடனம்...!!

குருதி குழைத்து....
எழுதப் பட்ட அவர்களின்
இரத்த சரித்திரம்....!
பிணங்களை பிழைக்க செய்யும்
மூல மந்திரம்...!!

தாயின் கருவில்
தாயகம் கண்ட வீர மகன்கள்
தார்மீக பொறுப்பெடுத்த
தனிப் பெறும் புரட்சி...!
தமிழன் புரட்சி...!!
தமிழின் புரட்சி...!!!

ஓய்ந்து விட்டிருக்கலாம்...
ஒழிந்து விடவில்லை.
புற்று நோயையே அழிக்க முடியா நீ...தமிழ்ப்
பற்று போரையா சாய்க்க முடியும்...?

"எட்டப்பன்களின்" பிடியில்
தமிழன் தடுமாற்றம்...!
"ஏகாதிபத்தியத்தின்" பிடியில்
தமிழின் தடுமாற்றம்...!!

இருந்தும் விடாமல்...எங்கள்
"கட்டபொம்மன்" கைவரிசைகள்...!
இன்னும் இருக்கும்...எங்கள்
"வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
"வேலுப் பிள்ளைகள்"...!!


வேலுப் பிள்ளைக்கு
விதி முடிந்தாலும்....அவர்
வேலைக்கு உயிர் இருக்கு....
வவுனியாவில் .....
விதைக்கப் பட்ட "வாழ்வு"
தளிர்விட "கொழுவாய்"
கொழும்பிருக்கு...!

யாழ்ப்பாணம் எங்களுக்கு
தமிழ் யாழ் இசைக்கும் எங்களுக்கு
தலைமை எடுப்போம் தமிழுக்கு...!
விதி முடிப்போம்....
வினை முடிப்போம்...
தமிழைப் பழித்தவன்...
"தலை எடுப்போம்"...!!

விட்டில் பூச்சிகள்
"விளக்கை அணைக்கும்
விபரீதம் நடக்கலாம்...!"
வீட்டை சொந்தம் என
சொல்ல முடியாது.

தீப்பந்தம் போதும்....
ஒரு "தீ" பந்தம் போதும்....
வீட்டில் வெளிச்சம்...
நாட்டில் வெளிச்சம்...
விழுந்த வண்ணம்
எழும் வீரம் வேண்டும்...!!

ஆருயிர் ஈந்த
அனைத்து ஆன்மாக்களின்
"சக்தி" பிறக்கும்....
பிள்ளைகளின் பிஞ்சு
கரங்களில் மிகுந்திருக்க
தமிழை வணங்கி
வாழ்த்துகிறேன்.

6 comments:

Chitra said...

விட்டில் பூச்சிகள்
"விளக்கை அணைக்கும்
விபரீதம் நடக்கலாம்...!"
வீட்டை சொந்தம் என
சொல்ல முடியாது.


....எழுச்சி ஊட்டும் வரிகள்.

எஸ்.கே said...

அவர்களுக்கு வீர வணக்கங்கள்!

செல்வா said...

//"எட்டப்பன்களின்" பிடியில்
தமிழன் தடுமாற்றம்...!
"ஏகாதிபத்தியத்தின்" பிடியில்
தமிழின் தடுமாற்றம்...!!//

இந்த நிலை மாறினால் போதும் அண்ணா ..!!
கவிதை கலக்கல் ..!!

Unknown said...

எமது வீர வணக்கங்கள்.

தினேஷ்குமார் said...

இருந்தும் விடாமல்...எங்கள்
"கட்டபொம்மன்" கைவரிசைகள்...!
இன்னும் இருக்கும்...எங்கள்
"வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
"வேலுப் பிள்ளைகள்"...!!

ஆயுதம் ஏந்த
துடிக்கும் கரங்கள்
காத்து நிற்கிறேன்
காலம் வரும்
தமிழ் வெல்ல
தரணியில்
ஓர் நாள் வரும்
நெஞ்சம் துணிந்து
வருவோம்
நினைவில் வைத்துக்கொள்


வீரனின் வீர வணக்கம் என் சொந்தங்களுக்கு........

ஹேமா said...

"வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
வேலுப் பிள்ளையின் பிள்ளை பிரபாகரன்...!

காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !