Tuesday, November 30, 2010

"பிரமை....!"


பின்னிரவு தாண்டியும்...
பின்னியபடி கால்கள்...!
பின்னந் தலைக்கு....
தலையனைக் கைகள்...!
புரண்டு படுக்க
முரண்டு பிடிக்கும் மனம்...!
பிசுபிசுக்கும் நினைவுகளில்....

தனியொரு இரவை
தனியொரு மனிதனாய்....!
தவிர்க்கத் துடிக்கிறேன்...
தண்ணீர்க் குடிக்கிறேன்...!
இரவுக்கு பின்னும் நீளும் என்
உறவுப் போராட்டம்...
உணர்வுப் போராட்டம்...!!

சூழும் மயான மௌனத் தீயில்
பாழும் மனம் சிதை எரியும்...!
எழும் தனிமை எரிக்கும் ரணம்
தழும்பாய் நிலைக்கும் என் தனிமை...!!

நிழலுருவம்  ஒன்று
எனைப் பார்ப்பதாய்.....
என்னையே சுற்றி வருவதாய்...! இரவில்...
ஏற்படும் பிரமை...!!,
நிசமாக இன்னும்
எத்தனை நாள் கடும் தவமோ.....?

6 comments:

Chitra said...

நிசமாக இன்னும்
எத்தனை நாள் கடும் தவமோ.....?


அருமையா எழுதுறீங்க!

Philosophy Prabhakaran said...

அந்த நிழலுருவம் பாவனா தான் என்று சொல்ல வருகிறீர்களோ...

சுபத்ரா said...

தனிமை அது கொடுமை. உங்கள் கவிதை அழகாய் அதைப் பறைசாற்றியுள்ளது. வாழ்த்துகள்!

பத்மா said...

நிழலுருவமா? பேயா?? பார்த்து ஜாக்கிரதையா இருங்க

தினேஷ்குமார் said...

தனிமையின் தவிப்பு அழகாக வடித்துள்ளீர்கள் காலம் வரும் காத்திருப்போம்

ஹேமா said...

ம்ம்ம்...வயசு அப்பிடித்தானே !