Saturday, November 27, 2010

"அன்றும் இன்றும்"..!

அன்று...
எரிக்க புகைக்கும் விறகு
எரியூட்டும் எரிபொருள்....
ஏழைத் தாயின் கண்ணீர்...!
இழுத்து ஊதி.... ஊதி ஊதி...
இன்னமுது படைக்கும்
ஏழையின் சோற்றுப் பானை
சிரிக்கும்....
வெந்ததாய் வெளிவந்து...!

இன்று...
குறைவாய் நேரம்
குக்கர் வாய் இறுகும்...
அரிசி கலப்பட வேதிப்பொருள்
அலச நேரமின்றி...
அவசர சமையல்....!
மூடி மூச்சிரைக்கும்
குக்கருக்கு "மாரடைப்பு"..!
காப்பாற்ற விசிலடிக்கும்.
"உள்ளுக்குள்"  மூடி மறைக்கும்
"நாகரீகச் சமையல்". 

அன்று
உழைப்பின் மிகுதி
பிழைப்பின் தகுதி.
வாழ்வின் நித்திய
கடமையில் நிறைவேறும்
ஆசனங்கள்... அத்தனையும்..!
வியாதியின்றி ஆயாவும்...
மகளும், மருமகளும் ஆனந்த
ஆர்ப்பரித்தார்கள்.

இன்று..
தும்மல், சலம், இறுமல்,
எல்லாமும் மருத்துவ மனையில்..!
இருப்பிடம் தற்காலிகம்.
மருத்துவமனை வாடகை வீடு...!
கண்டிப்பாய் பிரசவம் "அறுவை"...!
அறுவை என்பதனாலே....
அளவோடு பிள்ளை...!
தலைவலிக்கு போய்...
தாங்கமுடியா நெஞ்சுவலி...!
வேண்டா விருந்தாய்..சில வியாதி.
இலவச இணைப்பாய்... சில வியாதி.
சொத்தை எழுதிக் கேட்கும்
"நோய்ப் பரப்பு மையங்கள்"...

7 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை தோழரே...
வாக்களிக்க இயலவில்லை.... இன்னும் தளங்களில் இணைக்கவில்லை போலும்.

எஸ்.கே said...

உண்மை, இன்றைய சமையல் முறை உடல்நலம், பாரம்பரியம், கைப்பக்குவம் போன்ற பல விஷயங்களை கெடுத்து விட்டது. அன்று உழைத்து விட்டு வந்து அடுப்பில் சமைத்த கஞ்சி தரும் ருசியையும் திருப்தியையும் இன்று ஓவனில் செய்த பிஸ்ஸா தருவதில்லை!

தினேஷ்குமார் said...

தலைவாழை
இலை அன்று
செயற்கையாய்
மாறியதின்று
நஞ்சும் தெரித்தொடும்
கைவைத்தியம் அன்று
பிஞ்சும் விடியல்
காண ஆயுதம்
இன்று நவீன
மருத்துவமனை...........

நவீன முறைகள் நம்மை அலையாமல் அழிக்கின்றன

வினோ said...

உண்மை தான் நண்பரே... மாற்றங்கள் வேண்டும்.. இல்லையேல் மிகவும் கடினம்..

ஹேமா said...

இன்றைய நாகரீகத்தால் ஏற்படும் அவஸ்தையை அப்படியே வரிகளாக்கிவிட்டீர்கள் !

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி !!வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுக ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை தோழரே...