Friday, November 26, 2010

"சீதை...!"

தொட்டுக் கெட்ட இராமன்
தொடாது கெட்ட இராவணன்
பார்த்துக் கெட்ட பரதன்
பக்கத்திருந்து கெட்ட இலட்சுமனன்
பழகி கெட்ட அனுமன்
........................................
சீதை ஒரு சாபம்.
பாதை மாற்றி போட்ட
பயணம் சீதை.....
நிம்மதி குலைத்த
நிசும்பனி சீதை....
வெற்றிக்கு பின்
வெதும்பல் சீதை...

விதியின் விபரீதம்...சீதை
மதியின் மயக்கம்...சீதை
தீயும் தீண்டா தீது...சீதை

அப்போதும்....
இப்போதும்....
அயோத்தியின் பீடை ...சீதை

எப்போதும் இலங்கையின்
சாபம் சீதை...

ஆகாத வேளையில்
அவதரித்த அவலம் சீதை....
போகாத பாதையின்
புகலிடம் சீதை...

நாடாண்டவன் காடாளக்
கண்டவள் சீதை....
காடாண்டவன் நாடாள
செய்தவள் சீதை...
கண்டங்கள் கண்டவன் புகழ்
குன்ற செய்தவள் சீதை...

வேதவள்ளி சாபத்தின்
விபரீதம் சீதை.
தீராத் துயரின்
வசிப்பிடம் சீதை...

ஒரு சொல்லில்....
ஓர் வில்லில்...
வினை முடித்த
வினோதம் சீதை.

இனியும்... வில்லொடிக்க
வேண்டாம்...
எந்த இராமனும்..,
சீதைக்காய்....!

இனியும் சொல் கொடுக்க
வேண்டாம்....
எந்த இராவணனும்..,
சூர்ப்பநகைகளுக்கு....!

பயனற்ற வாழ்க்கையில்
பன்னிரு ஆண்டுகள்
பசித் தூக்கம்
துறக்க வேண்டாம்...
இலட்சுமனன்கள்...!

செய்யாத தவறுக்கு
செருப்பு தூக்கி
அலைய வேண்டாம்...
பரதர்கள்...!

பாரதம் பிழைக்கட்டும்....!!
மனிதம் மண்ணாளட்டும்....!!
அசிங்க பட அவதாரமெதற்கு...???
அவர் தாரத்தோடு பிறன்புணர்ச்சி
போராட்டம் எதற்கு...??

வாழ்க்கை அதுவல்ல...,
வாழ்க்கை அதற்க்கல்ல...!!

11 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை சூப்பர்

Deepakumar Arasu said...

வாழ்த்துக்கள் நண்பரே ! நல்ல கவிதை

Deepakumar Arasu said...

வாழ்த்துக்கள் நண்பரே ! நல்ல கவிதை

Deepakumar Arasu said...

வாழ்த்துக்கள் நண்பரே ! நல்ல கவிதை

செல்வா said...

இப்ப என்ன சொல்ல வரீங்க அண்ணா .?
ஆனா அந்த எழுத்துநடை வாய்ப்பே இல்லை .. அவ்ளோ அழகா வந்திருக்கு ..!

ஹேமா said...

முதல் பந்தியே அசத்தல்.தமிழ் அருவியாய் குளிர்மையாய் கொட்டுகிறது !

வினோ said...

வேறு மாதிரியான யோசனை... கவிதை அருமை நண்பரே...

Chitra said...

தொட்டுக் கெட்ட இராமன்
தொடாது கெட்ட இராவணன்
பார்த்துக் கெட்ட பரதன்
பக்கத்திருந்து கெட்ட இலட்சுமனன்
பழகி கெட்ட அனுமன்


...... ஆரம்பமே அமர்க்களப்படுதே!

நாணல் said...

//பாரதம் பிழைக்கட்டும்....!!
மனிதம் மண்ணாளட்டும்....!!
அசிங்க பட அவதாரமெதற்கு...???
அவர் தாரத்தோடு பிறன்புணர்ச்சி
போராட்டம் எதற்கு...??//

அருமையான முடிவு

தினேஷ்குமார் said...

இனியும்... வில்லொடிக்க
வேண்டாம்...
எந்த இராமனும்..,
சீதைக்காய்....!

இனியும் சொல் கொடுக்க
வேண்டாம்....
எந்த இராவணனும்..,
சூர்ப்பநகைகளுக்கு....!

சுயத்தினால் சூரைகாயாய் என் தமிழ் இனம் இன்றும் லங்கையில் தீரவில்லை இருவர் வித்திட்ட ரணம்......

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

நண்பா இங்கு பார்க்கவும்

காயத்ரி வைத்தியநாதன் said...

மிகவும் வித்தியாசமான கோணத்திலான சிந்தனை..அற்புதம்..மறுக்கவும் முடியவில்லை தங்கள் கோணம்..அருமை கவிஞரே..:)