விதியின் சாபத்தில்
விவசாயி...!
பருவத்தின் பிடியில்
பகடையாய்...!
உருட்டப்பெறும்
உருட்டலில்...
மிரட்டும் இயற்கை...!
இதோ..! அதோ..! வென
இழுத்தடிக்கும் மழை...!
காலத்தின் முன்...
கழைக் கூத்தாடி...!
வானம் பார்க்க மட்டுமே
இவன் தலை
"நிமிரல்"...!
உலகம் சமைக்க
உணவு சமைக்கும்...
இவனுலகம்
விடிவதெப்போ...?
வெறுப்பின் உச்சத்தில்
இருக்கும் மிச்சக் கழனியும்
வெறும் காடாய்....!
ஆட்டு மந்தை
அடைந்து கிடக்க...!
கொஞ்சம்.. கொஞ்சமாய்
நகரத்தாரின் நயவஞ்சகம்
விவசாய நிலம் விழுங்கி
வீடாக....!
பகட்டு வாழ்க்கை
முடிவில்....
பட்டினிச் சாவு...!
தவிர்க்க முடியா
வரமாகி விடும்.
தரணி யெங்கும்
பிணந்தின்னும் கழுகு
கொழுக்கும்...!
பிண வீச்சத்தில்
மூச்சுத் திணறி
மாரடைப்பில்...
மாண்டு போகும்
மனித மந்தை...!
மனித மாமிசம்
விலை போகும்...!
உயிர்ப் பிழைக்க
நர மாமிசம்...
நல்ல உணவாகும்...!!
காலம் தண்டிக்கும் முன்
பிழை திருத்து.
பிழைத்திருக்கும்
"பெரும்குடியாம்"...
"விவசாயி" வாழ்வை
வளப்படுத்து.
"விவசாயம் தழைக்க செய்".
மனிதம் "பிழைக்க"ச் செய்...!!?
விவசாயி...!
பருவத்தின் பிடியில்
பகடையாய்...!
உருட்டப்பெறும்
உருட்டலில்...
மிரட்டும் இயற்கை...!
இதோ..! அதோ..! வென
இழுத்தடிக்கும் மழை...!
காலத்தின் முன்...
கழைக் கூத்தாடி...!
வானம் பார்க்க மட்டுமே
இவன் தலை
"நிமிரல்"...!
உலகம் சமைக்க
உணவு சமைக்கும்...
இவனுலகம்
விடிவதெப்போ...?
வெறுப்பின் உச்சத்தில்
இருக்கும் மிச்சக் கழனியும்
வெறும் காடாய்....!
ஆட்டு மந்தை
அடைந்து கிடக்க...!
கொஞ்சம்.. கொஞ்சமாய்
நகரத்தாரின் நயவஞ்சகம்
விவசாய நிலம் விழுங்கி
வீடாக....!
பகட்டு வாழ்க்கை
முடிவில்....
பட்டினிச் சாவு...!
தவிர்க்க முடியா
வரமாகி விடும்.
தரணி யெங்கும்
பிணந்தின்னும் கழுகு
கொழுக்கும்...!
பிண வீச்சத்தில்
மூச்சுத் திணறி
மாரடைப்பில்...
மாண்டு போகும்
மனித மந்தை...!
மனித மாமிசம்
விலை போகும்...!
உயிர்ப் பிழைக்க
நர மாமிசம்...
நல்ல உணவாகும்...!!
காலம் தண்டிக்கும் முன்
பிழை திருத்து.
பிழைத்திருக்கும்
"பெரும்குடியாம்"...
"விவசாயி" வாழ்வை
வளப்படுத்து.
"விவசாயம் தழைக்க செய்".
மனிதம் "பிழைக்க"ச் செய்...!!?
10 comments:
நல்ல சமூக சிந்தனை உள்ள கவிதைங்க......வாழ்த்துக்கள்.விவசாயம் தழைத்தால்தான் மனிதம் பிழைக்குமென்பதுதானே நிதர்சனம்.
விவசாயம் அழிந்துகொண்டே வருகிறது. பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் அது என்றோ மறைந்திருக்கும். விவசாயத்தின் நிலையை அருமையாக கவிதையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
//இதோ..! அதோ..! வென
இழுத்தடிக்கும் மழை...!
காலத்தின் முன்..//
நாங்களும் அப்படித்தாங்க பார்த்துட்டு இருந்தோம் .,
ஆனா எங்க ஊர்ல இப்ப பயங்கர மழை ..
உணர்வு பூர்வ கவிதை...
படம் சூப்பர்... எங்க இருந்து பிடிச்சீங்க
//"விவசாயி" வாழ்வை
வளப்படுத்து.
"விவசாயம் தழைக்க செய்".
மனிதம் "பிழைக்க"ச் செய்...!!?
/
உண்மைதாங்க ,. விவசாயி வாழ்க்கை செழிக்கலைனா ரொம்ப சிரமம் தான் .
//உலகம் சமைக்க
உணவு சமைக்கும்...
இவனுலகம்
விடிவதெப்போ...?//
அருமையான வரிகள்...
விவசாய குடும்பத்தில் பிறந்தவனாய் படித்தபோது வலியை உணர்ந்தேன்... கவிதையின் தாக்கம் அப்படி.... நல்ல கவிதை.
good
ஆழமான உணர்வுகள் வரிகளாய்.....விவசாயிகளின் நிலைமையும், நாட்டின் நிலைமையையும் ஒரு சேர கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.....!குறைந்து கொண்டே போகும் விவசாயம் எங்கே கொண்டு போகுமோ நாட்டை....அச்சமே மிச்சம்.
கவிதை தான் ஆனாலும் நிஜம் சுடுகிறது.
மிகச் சிறந்தக் கவிதை...
விடிவில்லா விவசாயி
விடிந்தததும் வானம்
நோக்கும் விழிகள்
தடை சொல்லும்
உலகம் சோற்றுக்கு
கூத்தாடும் காலம்
வெகு விரைவில்
காணக்கூடா என்
என் விழி மறைத்துவிடு
இமையே இனியாவது
திருந்தட்டும்
மானிடர்............
Post a Comment