பாரெங்கும் பரந்து விரிந்து
முன்பின் முகம் தெரியா
சுற்றம் நட்பு எதுவும் அறியா
உன்னையும் என்னையும்
இந்த "பாசத்தில்" கட்டி வைத்து
இன்பக் கடலில் தள்ளிவிட்டு...
அன்பலைகளால் மூழ்கடிக்கும்
அன்னைத் தமிழை வணங்கி...
அளவளாவிய ஆனத்தத்துடன்...
இருவிழி நீர்ப் பெருக்கி..
இன்னமுதத் தமிழ்ப் படைக்கிறேன்.
நான் தமிழ்க்காதலனாகி....
தமிழை நேசிக்க...என் தமிழ்
சுவாசித்த நேயநல் இதயங்கள்
அத்தனைக்கும் அன்பு பெருக்கி
கரம் கூப்பி வணங்குகிறேன்.
முத்தமிழின் முக்கடல் சங்கமத்தில்
தத்தளிக்கும் தமிழன் நான்.. எனை
அன்பெனும் படகில் ஏற்றி அரவணைத்து
இன்னும் இருக்கும் உலகம் காட்டி
நாளும் மனம் சந்தோசிக்க என்னில்
வசிக்கும் அத்தனை நட்பூக்களுக்கும்
நான் நன்றிகள் பாராட்டுகிறேன்.
உடன் இருந்து உதவும் சிவா...
தொலைவில் இருந்தாலும்
தொடர்பில் வரும் தோழமை சே.குமார்....
இனிக்க நினைக்கும் என் நேசமிக்க
வினோத... வினோத் நிலா...
அன்புடன் கை கோர்க்கும்
அக்கா சித்ரா...,
அன்பு ஆனந்தி...
இதம் நல்கும் பத்மா...
இன்னுமின்னும் தம்பியான
செல்வக் குமார்...,
நேசத்தில் நனைத்த...
தோழர் தினேஷ்க் குமார்...
அன்பு பாராட்டிய
ஐயா ... காளிதாசு...
அழகியாய் சிரிக்கும்...
அழகி...
தோழமையுடன்
"தோழி"
என்னுடன் இருக்கும் எஸ்.கே...
இன்னும் இன்னும் ....
இப்படியாக நீளும் "பாசப்பட்டியல்"
நான் சிக்குண்ட "நேசப் பட்டியில்"
நிதம் நிதம் அன்புக் குவியல்...!
இன்னும் என்னை அவ்வப்போது
அரவணைக்கும் ஆதரவு கரங்கள்
அத்தனைக்கும் என் அன்பின் நன்றிகள்.
நான் பார்த்தறியா... பா.ரா
எனையும் அறியார் ஆயினும்
நேசமுண்டு நெஞ்சுக்குள்
பாசமிக்க தந்தை அவர் பக்கத்தில்
இருக்கவியலா விட்டாலும்
நாளும் அவர் குடும்ப சுகம்
விரும்பும் நான்.
நான் ரசிக்க சுவைக்க...
"அடர்த்தமிழ் நேச" எனவழைக்கும்
நேசமித்திரன்...
யாவர்க்கும் என் நெஞ்சார்ந்த
வணக்கங்களும் நன்றிகளும்.
இன்று புதுமணத் தம்பதியாகும்
என்னுடன் பணியாற்றிய
"அகிலா" வுக்கு என் ஆசிகள்.
இன்று தம் வாழ்க்கையின்
இன்பம் பெருக்கி நல்குடும்பம்
சமைக்க புதுமணை புகுந்தேகும்
இனிக்க நினைக்கும் தோழன்
வினோத்நிலா....!
உங்கள் யாவருக்கும் ....
அன்பில் என் ஆனந்த ஆசிகள்.
கண்டங்களில் நாம் துண்டங்களாய்
தொலைத்துவிட்ட நம் நேசத்தை...
தமிழ்த் தேசத்தை...
வலைப்பூ வழியாக...
வடிவமைத்து புனரமைக்க...
வாழ்வேகும் தமிழ் நெஞ்சங்கள்
உங்கள் அனைவருக்கும்...
தமிழ்க் காதலனின்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து தோள் கொடுங்கள்
தோழர்களே...!.
***********************************
14 comments:
//உங்கள் யாவருக்கும் ....
அன்பில் என் ஆனந்த ஆசிகள்.
கண்டங்களில் நாம் துண்டங்களாய்
தொலைத்துவிட்ட நம் நேசத்தை...
தமிழ்த் தேசத்தை...
வலைப்பூ வழியாக...
வடிவமைத்து புனரமைக்க...
வாழ்வேகும் தமிழ் நெஞ்சங்கள்
உங்கள் அனைவருக்கும்...
தமிழ்க் காதலனின்
நெஞ்சார்ந்த நன்றிகள்//
அழகாகவும் புதுமையாகவும் உங்களது நன்றிகளை அனைத்து நெஞ்சங்களுக்கும் சமர்ப்பித்துள்ளீர்கள் அருமை...
“தொடர்ந்து தோள் கொடுங்கள்
தோழர்களே”
நிச்சயமாக நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
வாழக வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
எனது தளத்திற்கு வருகை தந்து கருத்துரை வழங்கி வாழ்த்தியதற்கும் எனது தவறை சுட்டிகாட்டி இந்த மாணவனை திருத்தியமைக்கு உங்களுக்கு மீண்டும் எனது இதயங்கனிந்த நன்றி!
வாழ்க வளமுடன்
ellaaraiyum nithaitha ungal kavikkul intha kumar. nanri nanba...
vazhththukkal.
வணக்கம்...வண்ணத் தமிழால் கை கோர்க்க நானும் வந்தேன் தோழரே !
வாழ்த்துகள்:)
நிச்சயமாய்...
கண்கள் ஆனந்தத்தில் சிறிது நேரம் கலங்கிவிட்டன நண்பரே
தமிழ் பாசம்
பல கண்டங்களில்
துண்டு பட்டாலும்
துவளாமல்
கைகோர்க்கும்
பதிவுலகு இன்று
தமிழுலகாக
கரம் கோர்ப்போம்
விதிவெல்வோம்
மதியுரைத்து......
அன்னைத்தமிழே எங்களை பிள்ளையாக பெற்றெடுத்த நீ வாழ தடை தகர்ப்போம் என்றும்......
தேன் தமிழ் எடுத்து வலை உறவுகளைப் பாராட்டும் தமிழ் காதலனின், படைப்புகள் மென் மேலும் வருக வளம்பெருக.
//கண்டங்களில் நாம் துண்டங்களாய்
தொலைத்துவிட்ட நம் நேசத்தை...
தமிழ்த் தேசத்தை...
வலைப்பூ வழியாக...
வடிவமைத்து புனரமைக்க//
அதிரடி கவிதை போட்டி
குழந்தைகள் தினம் அல்ல அல்ல...
சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.
http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_12.html
உங்களின் தமிழார்வம் நடுங்கவைக்கிறது.எதையும் அளவுக்கு அதிகமாக நேசிக்காதீர்கள்.நேசித்ததை இழக்கும்போது இழப்பு பெரிதாகத் தெரியும்.
உங்கள் டெம்ப்ளேட்டுக்கு ஏற்றாற்போல் நிறங்களை உபயோகியுங்கள்.ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு வண்ணம் என்பது உறுத்துகிறது-கண்களை.குறைவான பொருத்தமான நிறம் நீங்கள் எழுதும் எழுத்துக்கு உபரி கனம் கொடுக்கும்.
அடிக்கடி சந்திப்போம்.
உண்மைலேயே கவிதை அருமையா இருக்குங்க .,
அதிலும் எல்லோரது பேரையும் சொன்னது அருமை.!
மேலும் அகிலா அவுங்களுக்கு அவர்களது வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன் .. கூடவே வினோத் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் .!!
superb periyappa...kalakkureenga....
வேலைப்பளு காரணமாக அதிகம் வர முடியவில்லை.
இந்த கவிதை படித்தவுடன் ஏற்பட்ட உணர்வு அற்புதமானது. மிகவும் நெகிழ்ந்து விட்டேன். கிட்டதட்ட எனக்கும் இதே உணர்வு ஏற்பட்டுள்ளது. வெறும் வலைப்பூ இத்தனை அன்புள்ளங்களை அளிக்க முடியுமா! அப்படியானால் அதுவும் ஒரு அதிசயம்தான்!
முகம் தெரியா உள்ளங்கள் வெளிப்படுத்தும் அன்பு எப்பேர்பட்டது. எதையும் எதிர்பாராமல் கருத்துக்கள் பரிமாற்றம் மூலமும் அன்பு வெளிப்படுகிறதே. அன்பிற்கு இல்லை எந்த அடைக்கும்தாழும்!
அன்பைக் கூட அருமையான கவிதையாய் சொன்ன தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! என்னையும் தங்கள் அன்பு பட்டியலில் வைத்ததற்கு மிக்க நன்றி! நம் உறவுகள் அனைத்தும் என்றென்றும் தொடரட்டும்!
Post a Comment