Tuesday, November 09, 2010
"பட்டாம்பூச்சி...!"
வண்ணங்கள் சுமந்த வண்ணம் என்
எண்ணங்களில் மிதந்த வண்ணம் உன்
இறுப்பு சுவற்றில் ஒட்டியபடி உன்மேல்
இதமாய் என் நினைவுகள் ஓடியபடி....
பிரமிடு ஒன்று நிலைக்குத்தி நின்றதாய்
நினைப்பு ஒன்று வந்து மோத நான்
பிரமித்து பார்த்தபடி.... நேரிய இறக்கை...!
வீட்டுக்குள் வந்த "பெர்முடா" முக்கோணம்...!
எப்படி பார்த்தாலும் ஒரு செங்கோண
முக்கோணம்....! அசையாத உன் இறுப்பில்
அதிசயித்து அசையாத ஆனந்தமாய் நான்.
வட்ட வட்ட வளையங்களை சுற்றியே
விழிப்பாவை வளையமிட தவிர்க்க வியலா
தருணத்தில்... நிறங்கள் மேல் மயக்கம்...!
நீளும் இரவில் நீண்ட என் நினைப்பு
உன்மீதான இரக்கம், கிரக்கம் எதுவும்
குறையாமலே..! இயற்கையின் ஆற்றல் பிரமித்தபடி..!
உடலைவிட பெரிய அளவில் இருந்தும்
உலகம் சுற்ற இலாவகமாய் அசைக்கும்
அழகில் மயங்காத மானிடம் இல்லை.
நித்திரை சுகம் தழுவி...முதல்நாள்
முத்திரை பதித்த வாழ்க்கை முடிந்து
மறுநாள் விழித்து வாழ்கிறேன்...விழித்து...!
மாலைப் பொழுது வருகைக்கு பின்னான
உன் வருகை எதிர்ப்பார்த்து அனிச்சையாய்
அங்கும் இங்கும் அலைந்த கண்கள்...
அதேயிடம் நிலைக்குத்தி பின் தேடல்...!
அதிர்ச்சியில் உறைந்த கண்களோடு நானும்....
எந்த அழகும் இல்லா எனை
அடுத்தநாள் வாழ அனுமதித்த இயற்கை
அய்யகோ...! கொள்ளை அழகு கொண்ட
உன்னை அனுமதிக்க வில்லையா? அந்தோ...!
இப்போதும் கலையாத அழகுடன் நீ...!
காணப் பொறுக்கா நிலையில் என்காலடியில்.
சுமக்க முடியா இறக்கைச் சுமையால்...
சாய்ந்து கிடந்தாய் கவிழ்ந்த படகாய்...!
கனத்த இதயம் படபடக்கிறது.... உன்
படபடப்பு அடங்கிய தெப்படி?.. யோசித்தபடி
சிலையாய் நிற்கிறேன் நிலைப்படி சாய்ந்தபடி...!
வாழ்க்கை மீதான தாக்கத்தில் வண்ணங்கள்
எதுவும் என் எண்ணத்தில் இல்லை.
எந்த வண்ணமும் கலையா அழகிய
இறப்பு இன்னமும் பாதித்த எனதிறுப்பு...!
மௌனம் சுமந்த இரவு...! மனம்
சுமந்த மரணம்...! ஒற்றை வினாடி
உறவில் இத்தனை பாதிப்பு எனக்கு.
உள்ளுக்குள் அழுதபடி என் சட்டை
அலங்கரித்த உன் வண்ணங்கள் நினைவில்...!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//இப்போதும் கலையாத அழகுடன் நீ...!
காணப் பொறுக்கா நிலையில் என்காலடியில்.
சுமக்க முடியா இறக்கைச் சுமையால்...
சாய்ந்து கிடந்தாய் கவிழ்ந்த படகாய்...!//
Arumaiyana kavithai...
iruthiyil manam kanakkirathu...
Nice
கவிதை நல்லாருக்குங்க.
சுமந்த மரணம்...! ஒற்றை வினாடி
உறவில் இத்தனை பாதிப்பு எனக்கு.
உள்ளுக்குள் அழுதபடி என் சட்டை
அலங்கரித்த உன் வண்ணங்கள் நினைவில்...!
....மனதில் ஒரு பாரம்!! சோகத்தை சுமந்த வரிகள்.
வாங்க தோழா ( குமார் ), உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க பத்மா.. வணக்கம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
எமது வலைப்பூவுக்கு முதல் வருகை தரும் டி.வி.ராதாகிருஷ்ணன் வாங்க, வணக்கம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
வாங்க சுந்தரா.... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள்.
வாங்க சித்ராக்கா, கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment