காற்றில் விரவும் தூசதன் பாசப்பிணைவில்
வான் மறையும் வன்மை புகுத்தும்
மென் பொருள் நிறம் மாற
காணாது போகும் கதிரொளி காண்
துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும்
துளிகளில் தோரணமாய் மழை.. மழை
துண்டங்களின் சிதறல் தூறல்,- தூறல்
துவண்டவிழ விழும் இதயச் சாரல்
மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய்
மேந்துளி விழ மேல்மண் நெகிழ்வது
பூம்பெழில் பாவையின் பார்வையில் காண்.
ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை
அழகு இதழின் ஒருங்கிணைப்பில் வாடை
பழகுத் தமிழ்.. பழகவரும் மேடை
இழக்க குறையும் எதிலும் எடை
ஒன்றின் வாலில் மற்றொன்றின் தலையாய்
ஒவ்வொன்றின் முடிவில் மற்றொன்றின் தொடக்கம்
ஒன்றுக்கொன்று முரண்பாடாய் முதலிலும் முடிவிலும்
ஒன்றுமே இல்லாமல் என்றுமே வாழ்க்கை.
கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்
யாவிலும் மென்மை இருப்பது திண்ணம்.
வன்மையின் விதை மென்மை ஈதுண்மை
வஞ்சியின் நெஞ்சம் கண்டு தெளி.
தொடாத தேகம் இல்லை யாரும்
தொடாமல் மோகம் இல்லை நாளும்
துடிக்காத இதயம் இல்லை நெஞ்சம்
வலிக்காமல் காதல் இல்லை.. காதலி.
வான் மறையும் வன்மை புகுத்தும்
மென் பொருள் நிறம் மாற
காணாது போகும் கதிரொளி காண்
துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும்
துளிகளில் தோரணமாய் மழை.. மழை
துண்டங்களின் சிதறல் தூறல்,- தூறல்
துவண்டவிழ விழும் இதயச் சாரல்
மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய்
மேந்துளி விழ மேல்மண் நெகிழ்வது
பூம்பெழில் பாவையின் பார்வையில் காண்.
ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை
அழகு இதழின் ஒருங்கிணைப்பில் வாடை
பழகுத் தமிழ்.. பழகவரும் மேடை
இழக்க குறையும் எதிலும் எடை
ஒன்றின் வாலில் மற்றொன்றின் தலையாய்
ஒவ்வொன்றின் முடிவில் மற்றொன்றின் தொடக்கம்
ஒன்றுக்கொன்று முரண்பாடாய் முதலிலும் முடிவிலும்
ஒன்றுமே இல்லாமல் என்றுமே வாழ்க்கை.
கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்
யாவிலும் மென்மை இருப்பது திண்ணம்.
வன்மையின் விதை மென்மை ஈதுண்மை
வஞ்சியின் நெஞ்சம் கண்டு தெளி.
தொடாத தேகம் இல்லை யாரும்
தொடாமல் மோகம் இல்லை நாளும்
துடிக்காத இதயம் இல்லை நெஞ்சம்
வலிக்காமல் காதல் இல்லை.. காதலி.
பிறப்பு வலி, மூலம் சுகம்.
இறப்பும் வலி, முடிவு ஆனந்தம்.
மறுப்பும் வலி, முதல் சோகம்.
ஏற்பும் வலி, முற்றும் பேரின்பம்.
இறப்பும் வலி, முடிவு ஆனந்தம்.
மறுப்பும் வலி, முதல் சோகம்.
ஏற்பும் வலி, முற்றும் பேரின்பம்.
****************************************
13 comments:
சாரலில் அருமையான கவிதை கொடுத்து இருக்கிறீர்கள்...
வரிகள் எல்லாம் வாசிக்கத்தூண்டுகின்றன நண்பா.
வாழ்த்துக்கள்.
மேன்மையான தங்கள் கவி வரிகளில் மென்மையை உணர்கிறேன் தோழரே
//மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய் //
ரசித்த வரிகள்.
ஒவ்வொரு பத்தியும் தனித்தனி ஹைக்கூ- வாக மிளிர்கிறது.
nalla kavithai.
vaazhthukkal.
துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும்
துளிகளில் தோரணமாய் மழை.. மழை
துண்டங்களின் சிதறல் தூறல்,- தூறல்
துவண்டவிழ விழும் இதயச் சாரல் //////////
ரொம்ப நல்லா இருக்கு..
மென்மையாய் சாரலடித்துக்கொண்டிருக்கிறது மனதிற்குள்...
ரொம்ப ரொம்ப அருமையா எழுதறீங்க
காற்றில் விரவும் தூசதன் பாசப்பிணைவில்
வான் மறையும் வன்மை புகுத்தும்
மென் பொருள் நிறம் மாற
காணாது போகும் கதிரொளி காண்
கவிஞரே மாய சித்தர் ஐயா நீங்கள் ,ஆமாம் நம் கற்று மண்டலம் மாசடைந்தால் விளையும் ஆபத்தை அறிவியல் நோக்கில் விளக்கி இருக்கிறீர்களே. நன்று.
# மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய்
எத்தனை ஆழமான வரிகள். யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும்....."அசத்தல்"
* ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை
அழகு இதழின் ஒருங்கிணைப்பில் வாடை
பழகுத் தமிழ்.. பழகவரும் மேடை
இழக்க குறையும் எதிலும் எடை
தமிழ், உங்கள் கனவுகள் நனவாகட்டும் வளர்க.
கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்
யாவிலும் மென்மை இருப்பது திண்ணம்.
வன்மையின் விதை மென்மை ஈதுண்மை
வஞ்சியின் நெஞ்சம் கண்டு தெளி.
ஓ ! இவர் நவீனப் பட்டினத்தாரோ ... ?!
பிறப்பு வலி, மூலம் சுகம்.
இறப்பும் வலி, முடிவு ஆனந்தம்.
மறுப்பும் வலி, முதல் சோகம்.
ஏற்பும் வலி, முற்றும் பேரின்பம்.
****************************************
நீவிர், யோசிக்கும் விதம் நன்று, புதுமையாய் இருக்கு.
Post a Comment