Saturday, January 01, 2011

"புத்தாண்டு"...?

மங்களம் ததும்தும் மனம்
சுபங்கள் நாடும் தினம்  
திரவியங்கள் கூடும் நாளும்
தேவதைகள் வாழ்த்து பாடும்
*****************************************
கூடலும் ஆடலும் ஆனமட்டும்
கூடுமிடம் கூடுவிட்டு போகுமட்டும்
நாடலும் தேடலும் நாணுமட்டும்
மாடமும் கூடமும் மண்மட்டும்

குறித்து வைத்து வாழ்வோம்
குறிப்பறிந்து தேவைக் கொள்வோம்
கூத்தாடி வாழ்க்கையில் கூத்தும்
குறுகிய காலம்தான் பார்..!!

ஆண்டாண்டுக்கு ஒரு உறுதிமொழி
அது உறுதிமொழியா..? உளறுமொழியா..?
அடுத்தாண்டுக்கும் இப்போதே தயார்...
அந்த "வராத வைராக்கியம்" எதற்கு..?

குறுகிப்போன வாழ்க்கைக்கு
மனுக்குலம் வாழ்க்கைப்பட்டு
கொஞ்சகாலம் ஆச்சு...
கொஞ்சம் நஞ்சு கூடிப்போச்சு

வாழ்வின் வளம், நலம் யாவும்
வையகத்தில் பொருளாய் போனது.
மனதுக்கும் மனிதனுக்கும் மதிப்பில்லை.
மானிடர்க்கு அதில் ஏதும் பொறுப்பில்லை.

"மனிதம்" பிறக்காத மண்ணில்..
ஆண்டுகளால் ஆனதென்ன...? 
"மனிதன்" பிறக்காத பூமியில்
ஆண்டுகள் வந்தென்ன..? போயென்ன..?

 



சுற்றி வரும் பூமிக்கு சுதந்திரம் எப்போ...?
சுயநலம் சூழும் வாழ்வு முடிவது எப்போ..?
நலிவுற்ற நல்ல உள்ளங்கள் வாழ்வதெப்போ..?
அப்போது பிறக்கட்டும் ஆண்டுகள்...

அதுவரை....

காலமே உனக்கு
விடுமுறை...!!            



6 comments:

வினோ said...

/ ஆண்டாண்டுக்கு ஒரு உறுதிமொழி
அது உறுதிமொழியா..? உளறுமொழியா..? /

நல்ல கேள்வி தல...

Unknown said...

காலத்திற்கே விடுமுறை அளித்த கவிதை அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

கேள்வி குறியாகி போன புத்தாண்டு...!?

நம்பிக்கையோடு வாழ்வை எதிர் நோக்குவோம்...கனவுகள் கைசேரும் காலம் வரும் !!

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா !!

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

'பரிவை' சே.குமார் said...

மனிதம் பிறக்காத மண்ணில் ஆண்டுகளால் ஆனதென்ன? சரியான கேள்வி நண்பரே...
உண்மையில் புத்தாண்டுக்கு இது சாட்டையடிதான்.