Friday, January 28, 2011

ஓ... என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

என்னை புறந்தள்ளி நீ புறம் தள்ளி
மண்ணைத் தூவி கண்ணை மறைத்து
மானிடப் பிறவிக் கொடுத்து மறைபொருளாய்
மனம் படைத்து கலைவடிவாய் காதல்

புதைத்து கண்வழியாய் சிலை வடித்து
பெண் வழியாய் உயிர் கொடுத்து
சித்தனை பித்தனாக்கும் புத்தகமே
உன்னை புரட்டிப் பார்க்கிறேன்..

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

காலம் உன்னில் மறைத்து வைத்த
மர்மங்கள் வாசிக்கிறேன்... பேதையே..! உன்
பேரன்பை யாசிக்கிறேன்...! விடியல்கள் தந்தாய்..
விடிவுகள் இல்லை,- முயற்சிகள் தந்தாய்...

முடிவுகள் இல்லை,- முற்று பெறாத
வாழ்க்கை முன்வினையாய் நீள்கிறது,- புலரும்
பொழுதுகள் என்வினையா...? தன் வினையா..?
புரிதலிலா புரிதலில் புலம்பும் காதல்.

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்...?

வாசலில்லா குடிலுக்கு காவல் எதற்கு...?
பாசமிலா நெஞ்சுக்கு காதல் எதற்கு...?
நேசமிலா வஞ்சிக்கு அன்பு எதற்கு...?
தேசமிலா தமிழனுக்கு மானம் எதற்கு...?

புவியின் மைந்தன் புரியா பூவிதழே...!
கவியின் வேந்தன் காதல் மலரே..!
ரவியின் மையல் தந்த உயிரே..!
ஆவியின் நிழலாய் வருக ஆனந்தமே...!!

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்....?

முகிலும் முக்கடல் நீரும் விரியும்
பார்வைக்கு வெவ்வேறாய் நிலையில் நீயும்
நானும் சந்திக்கும் வாழ்க்கைச் சாகரத்தில்
யாண்டும் வேண்டும் வரம் நீ..!

தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..!
வாழ்வது சாபம்,- வருவது பாவம்..!
போகாது கோபம்,- சாகாது தாபம்..!

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்...?

தாகங்களுடன்.......
-தமிழ்க்காதலன்.

11 comments:

Chitra said...

தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..!
வாழ்வது சாபம்,- வருவது பாவம்..!
போகாது கோபம்,- சாகாது தாபம்..!

ஓ என் இயற்கையே எங்கிருக்கிறாய்...?


.....கருத்தும் வார்த்தைகள் பிரயோகமும் நல்லா வந்து இருக்குதுங்க....

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று.... படம் வித்தியாசமாக இருக்கிறது... யாருடைய கைவண்ணம்...

Yaathoramani.blogspot.com said...

தேசமில்லா தமிழனுக்கு மானம் எத்ற்கு..
நேசமில்லா தமிழனுக்கு தேசம்தான் எதற்கு?
நல்ல கவிதையைப் படித்த நிறைவு
தொடர வாழ்த்துக்கள்.

Unknown said...

//தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..! //
மிக ரசித்தேன்.

செல்வா said...

படம் ரொம்பவெ அழகா இருக்கு அண்ணா ..
ஆனா நீங்க எத பத்தி சொல்லுரீங்கனு தெரியல ..
வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..

'பரிவை' சே.குமார் said...

//வாசலில்லா குடிலுக்கு காவல் எதற்கு...?
பாசமிலா நெஞ்சுக்கு காதல் எதற்கு...?
நேசமிலா வஞ்சிக்கு அன்பு எதற்கு...?
தேசமிலா தமிழனுக்கு மானம் எதற்கு...?//
வாவ்... ஆமாம் எதற்கு இருந்தும் இல்லாதவை எதற்கு?
//புவியின் மைந்தன் புரியா பூவிதழே...!
கவியின் வேந்தன் காதல் மலரே..!
ரவியின் மையல் தந்த உயிரே..!
ஆவியின் நிழலாய் வருக ஆனந்தமே...!!//
அருமையான் உவமைகள்.
//தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..! //
நண்பா எப்படி இப்படியெல்லாம் வருகின்றன்...
நிறைய பேசலாம்... நிறைய எழுதலாம்...
உங்கள் கவிதைகள் எல்லாம் செய்கின்றன.

'பரிவை' சே.குமார் said...

//வாசலில்லா குடிலுக்கு காவல் எதற்கு...?
பாசமிலா நெஞ்சுக்கு காதல் எதற்கு...?
நேசமிலா வஞ்சிக்கு அன்பு எதற்கு...?
தேசமிலா தமிழனுக்கு மானம் எதற்கு...?//

வாவ்... ஆமாம் எதற்கு இருந்தும் இல்லாதவை எதற்கு?

//புவியின் மைந்தன் புரியா பூவிதழே...!
கவியின் வேந்தன் காதல் மலரே..!
ரவியின் மையல் தந்த உயிரே..!
ஆவியின் நிழலாய் வருக ஆனந்தமே...!!//

அருமையான் உவமைகள்.

//தனித்த தவத்தில் கிடைத்த வரம்..!
கேட்ட வரமோ தனித்த தவம்..! //

நண்பா எப்படி இப்படியெல்லாம் வருகின்றன்...
நிறைய பேசலாம்... நிறைய எழுதலாம்...
உங்கள் கவிதைகள் எல்லாம் செய்கின்றன.

Prabu M said...

வணக்கம்.... கவிதைகள் அருமை...

//வாசலில்லா குடிலுக்கு காவல் எதற்கு...?
பாசமிலா நெஞ்சுக்கு காதல் எதற்கு...?
நேசமிலா வஞ்சிக்கு அன்பு எதற்கு...?
தேசமிலா தமிழனுக்கு மானம் எதற்கு...?//

அழகியலோடு உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்திய இந்த வரிகளை ரசித்தேன்... :)

அப்புறம் நான் தான் உங்களோட 100 வது ஃபாலோயர்!!
வாழ்த்துக்கள் :)

'பரிவை' சே.குமார் said...

followers 100 kku vazhththukkal nanba...

சுவடுகள் said...

சித்தனை பித்தனாக்கும் புத்தகமே
உன்னை புரட்டிப் பார்க்கிறேன்..

இப்படி உங்களால் மட்டுமே யோசிக்க முடியும் எனத் தோன்றுகிறது.இணையற்ற உவமைகளை லாவகமாக கையாள்கிறீர்கள். நன்று ......

சுவடுகள் said...

மொத்தக் கவிதையும் படிக்க படிக்க......தெவிட்டாத அமுதத்தை அள்ளி அள்ளி பருகும் சுகம் அளிக்கிறது.

வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத ஆனந்தத் தமிழுக்குள் மூழ்கச் செய்கிறீர்கள். வார்த்தைகளின் அழகு மிளிர்ச்சியில் சொக்கிப்போகிறேன்.

பொருள் பொதிந்து கிடக்கும் உங்கள் கவிதைகள்....வாசிப்பில் நேசம் கொண்டு வசிப்பவர்களுக்கு நல்ல விருந்து.