Saturday, January 29, 2011

"நேச முடிச்சுகள்"காலை கண் விழிக்கும் அந்த முகம்
காணவில்லை....! 
காய்ந்து கிடக்கும்
குழம்பிக் கோப்பைகள்.....
ஈக்களின் வசிப்பிடம்.
எழுப்ப யாருமிலா பொழுதில் 
கதிரின் கருணையற்ற 
சூடு மனதை சுட்டது...!

இரணங்களுடன் தொடங்கும் நாட்கள்
இரணங்களிலேயே முடிகிறது.
அமைதியாய் இருக்கிறது என் வீடு 
உள்ளே நானிருந்தும்...!
ஆளரவமற்ற பாழ் வீடாய்.

நினைவுகள் என்னைத் தின்ன,- நான் 
உணர்வுகளை அசைபோடுகிறேன்.

தனி மரம் பார்வைக்குப் பட்ட போதெல்லாம்
புரியாத அதன் தனிமை கொடுமை....
இப்போதுதான் எனக்கு உரைக்கிறது.

வேதனைகளோடு முடிச்சிட்டுக்கொள்ளும்
வாழ்க்கையின் வேர்கள் நீ என்பது...
நான் உணர்ந்த நாள் இது...!

சல்லி வேராய் நமக்குள் எழுந்த சலசலப்புகள்
ஆணிவேரை ஆட்டம் காணச் செய்துவிட்டன.
உன் அன்பின் வாசம் இப்போது அதிகமாய் வீசுகிறது.
காய்ந்து போகும் முன்.... 
கண்முன் வாராயோ கண்மணி...!

விழிகளில் வழியும் நீர் நின் நேசம் உரைக்கிறது.
யாரும் அறியா வண்ணம் கரங்கள் மறைக்கிறது.
பேரன்பு பெருங்கடலில் எனை தத்தளிக்க விட்டவளே...!
பெருங்காய வாசமாய் பிழைத்திருக்கிறேன்...
உன் நினைவுகளில்...!

சமையலறையும் படுக்கையறையும் என்னை
சாகடிக்கின்றன...!?
பூசையறையோ புறந்தள்ளி கதவடைக்கிறது.
ஈரம் சொட்டும் உன் கூந்தல் வாசம் தேடும்....
நம் குலதெய்வங்கள் சாம்பிராணி மறுக்கின்றன.
சத்தமில்லாமல் நீ சாதித்த வாழ்க்கை புரிகிறது.
யுத்தமில்லாமலே பிரிந்திருக்கிறோம்...
உத்தமியே உணர்வாயோ....!

பாலையில் ஒற்றையாய்
என் கால் நடைப் பயணம்...
பின்னிக்கொள்ளும் என் கால்களோடு
பிணைந்திருக்கிறது என் காலமும்.
சக்தி இல்லா சிவனாய் சாகக் கிடக்கிறேன்
என் சகத்தியே வாராயோ..?!


சந்தோசம் என்பது உறவல்ல... 
சந்தோசம் என்பது துறவல்ல.... 
சந்தோசம் என்பது வீடல்ல... 
சந்தோசம் என்பது வரமல்ல... 
சந்தோசம் என்பது.............!! 
பணமல்ல...., நூலல்ல..., தனிமையல்ல... 


சந்தோசம் என்பது ............?? 


சந்தோசம் என்பது சம்சாரம்.

என் வாழ்வே...!
என் தவமே...!
என் புரிதலே...!
என் விடியலே...!
என் சந்தோசமே....!
உணர்கிறேன்....!!

நீ இல்லாத நான்....

வெறும் கூடு....
உயிரற்ற உடம்பு....
இயக்கத்தில் இருக்கும் துரும்பு...
இருந்தும் இல்லாத கடவுள்.

வா என் பிரியமே....!
வாழாது போன நம் நேசங்களை
வாழ்ந்து தீர்ப்போம்....!
பிரிவது இறப்பினும் கொடுமை என்பது உணர்ந்தேன்.

பிரிதலில் இல்லை வாழ்க்கை.
சேர்தலில்.
பிரிதலில் இல்லை இன்பம்.
சேர்தலில்.
பிரிவென்பது புரிதலின் தொடக்கம்.
புரிகிறது.............!!

புரியப் புரிய ஆழமாய் 
உன் அருமை உணர்கிறேன்.
உணர உணர உன்னைத் 
திணற திணற நேசிக்கிறேன்.

வாழ்க்கையின் பொருள் நீ..!
வாழ்க்கையை சமைப்பவள் நீ..!
சந்தோசத்தின் இருப்பிடம் நீ..!

என் பிழைகள் மற....
என் கர்வம், திமிர்... 
யாவும் மன்னித்து மற...
பரிசுத்த பாசமே...!
வாடுகிறேன் வாராயோ...?!
வசந்தங்கள் தாராயோ..?!           

***************************************மனதின் சுவாசங்களை உயிர்ப்பித்த காதலா...!
மௌனத்தில் எனை ஆழ்த்தி
இன்பத்தில் எனை வீழ்த்தி
வசந்தங்களில் வாழ்க்கை சொன்ன
இதயக்காதலா....!
நினைப்புக்கும் நிசத்துக்கும்
கண்ணீரால் பாலம் கட்டுகிறேன்.
உன் அன்பே நிரம்பி வழிகிறது...!
நீயில்லா நானிங்கே நடைபிணமாய்...
என்செய்வாய்..! என் செல்வமே..!
காலை முதல் இரவு வரை
உன் தேவைகளை பூர்த்தி செய்வதே
நான் செய்த பூசையாகும்...!
இப்போது எப்படி...?
விருந்திலும் மருந்திலும்
அளவோடிரு அன்புள்ளமே...!
எனை இழுத்தணைத்த இன்பங்களை
என் தலையணையில் சேர்த்திருக்கிறேன்.
தலை வைக்க மறவாதே...!
ஆனந்த கடலில் தள்ளியவனும்
அசோக வனத்தில் தனித்து விட்டவனும்
நீயே...!!
கரை சேர்ப்பாய் என்றே காத்திருக்கிறேன்...?!
உன்னையே உலகமாய் வாழ்ந்தவள்.
உனக்கு எப்படி பிடிக்காமல் போனேன்...?
ஆயினும் என் காதல் உன்னோடு....
இன்னமும் உயிர்த்திருக்கிறது...!
அறியாயோ என் ஆருயிரே...!!கடந்த காலங்களின் இன்பங்களில்தான்
இழையோடிக்கொண்டிருக்கிறது ...
என் சுவாசம்.
நிற்கும் முன் வாராயோ...?
நின் கரங்கள் தாராயோ...?
எனை ஏந்திக் கொள்ளாயோ...?
என்னுயிரே...!
என் மன்னவா...!
உன் மனைவியாய் மடியும் வரம் தா. 
******************************************

குறிப்பு: இந்தக் கவிதையின் சூழல் என் அருமை நண்பர் மனசு - சே.குமார் அவர்களால் சொல்லப் பட்டது. அவரின் அன்பிற்கிணங்கி இந்த கவிதை எழுத பட்டுள்ளது.

கரு: திருமணத்திற்கு பின் பிரிந்து வாழும் தம்பதிகளின் மனவோட்டம்.

இதே கருவை மையப்படுத்தி மனசு வலைப்பூவில் சே.குமார் கதை எழுதி இருக்கிறார். அதை படிக்க..... 

http://vayalaan.blogspot.com/2011/01/blog-post_29.html

21 comments:

sakthistudycentre-கருன் said...

கடந்த காலங்களின் இன்பங்களில்தான்
இழையோடிக்கொண்டிருக்கிறது ...
என் சுவாசம்.
நிற்கும் முன் வாராயோ...?
நின் கரங்கள் தாராயோ...?
எனை ஏந்திக் கொள்ளாயோ...?
என்னுயிரே...!
என் மன்னவா...!
உன் மனைவியாய் மடியும் வரம் தா. ///

Nice and touching lines..

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

sakthistudycentre-கருன் said...

Ulavu?????

தினேஷ்குமார் said...
This comment has been removed by a blog administrator.
சே.குமார் said...

அய்யா... பிச்சுப்புட்டேய்யா...
ஏம்ப்பா... நான் சாதரண கருவைத்தானே சொன்னேன்...
நீ காற்றாய் சுற்றியிருக்கிறாய்...
நான் கொடுத்த கருவில் நீ வாழ்ந்திருப்பது கண்டு
எனக்குப் பொறாமையே...
என் கதையைவிட உன் கவிதை
வலியுடன் காதல் பேசுகிறதையா...!

//சமையலறையும் படுக்கையறையும் என்னை
சாகடிக்கின்றன...!?
பூசையறையோ புறந்தள்ளி கதவடைக்கிறது.
ஈரம் சொட்டும் உன் கூந்தல் வாசம் தேடும்....
நம் குலதெய்வங்கள் சாம்பிராணி மறுக்கின்றன.
சத்தமில்லாமல் நீ சாதித்த வாழ்க்கை புரிகிறது.
யுத்தமில்லாமலே பிரிந்திருக்கிறோம்...
உத்தமியே உணர்வாயோ....!///

இதுலயே எல்லாம் சொல்லிட்டியேய்யா....
அப்புறம் எதற்கு இத்தனை வரிகள்...

என்னமோ போ இனி கரு சொல்லுமுன் காவியம் படைப்பாயோ என்று
கவனமாய்த்தான் கொடுக்க வேண்டும் போல....

கிரேட் கவிதையடா நண்பா...
எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா நண்பா...
உன் வார்த்தை ஜாலங்கள் பல முறை வியக்க வைத்திருக்கின்றன...
ஜாலமில்லா வார்த்தைகளால் நீ பின்னியிருக்கிறாய்...
எனக்கு இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களை நீ அடிக்கடி செய்ய வேண்டும் என்பதே ஆசை.

ஏய்யா ராத்திரியா இம்புட்டும் உக்காந்து எழுதினே...
எப்படியய்யா இது சாத்தியம்...

என் கதைக்கான லிங்கை எடுத்துவிடு நண்பா...

என்றும் நட்புக்காக,
உன் இதய சாரலில் வாழும் நண்பன்
-'பரிவை'. சே.குமார்

ரேவா said...

மனதின் சுவாசங்களை உயிர்ப்பித்த காதலா...!
மௌனத்தில் எனை ஆழ்த்தி
இன்பத்தில் எனை வீழ்த்தி
வசந்தங்களில் வாழ்க்கை சொன்ன
இதயக்காதலா....!
நினைப்புக்கும் நிசத்துக்கும்
கண்ணீரால் பாலம் கட்டுகிறேன்.
உன் அன்பே நிரம்பி வழிகிறது...!
நீயில்லா நானிங்கே நடைபிணமாய்...
என்செய்வாய்..! என் செல்வமே..!
காலை முதல் இரவு வரை
உன் தேவைகளை பூர்த்தி செய்வதே
நான் செய்த பூசையாகும்...!
இப்போது எப்படி...?
விருந்திலும் மருந்திலும்
அளவோடிரு அன்புள்ளமே...!
எனை இழுத்தணைத்த இன்பங்களை
என் தலையணையில் சேர்த்திருக்கிறேன்.
தலை வைக்க மறவாதே...!
ஆனந்த கடலில் தள்ளியவனும்
அசோக வனத்தில் தனித்து விட்டவனும்
நீயே...!!
கரை சேர்ப்பாய் என்றே காத்திருக்கிறேன்...?!
உன்னையே உலகமாய் வாழ்ந்தவள்.
உனக்கு எப்படி பிடிக்காமல் போனேன்...?
ஆயினும் என் காதல் உன்னோடு....
இன்னமும் உயிர்த்திருக்கிறது...!
அறியாயோ என் ஆருயிரே...!!

பிரிவின் ரணம் உணர்த்தும் கவிதை..... வாழ்த்துக்கள்

logu.. said...

\\சந்தோசம் என்பது உறவல்ல...
சந்தோசம் என்பது துறவல்ல....
சந்தோசம் என்பது வீடல்ல...
சந்தோசம் என்பது வரமல்ல...
சந்தோசம் என்பது.............!!
பணமல்ல...., நூலல்ல..., தனிமையல்ல...


சந்தோசம் என்பது ............??


சந்தோசம் என்பது சம்சாரம்.\\

Kalakkureenga boss...

தினேஷ்குமார் said...

இருவரின் மனநிலையில் வரிகளை வார்த்து கோர்த்து தொடுத்த கவிதை வரிகள் பேசும் பிரிவின் உணர்வுகள் அருமை நண்பரே ......

பிரிவில்லா உணர்வில்லை
உணர்வுகலல்லா உயிரில்லை
பிரிவின் வலியுணர்த்தும் முன்
உணர்வாயேள் நன்று.
என்றும் எதிலும்....
அதுவே பிறர் வலியரிவானேன் ...

இருவரின் வலிகளையும் உணர்ந்து உயிர்பித்து வடித்துள்ள வரிகளில் காண்கிறேன் உங்களுள் குடியிருப்பவனை

Riyas said...

கவிதை அழகு+அருமை

வினோ said...

பிரிவின் வலியும் தேவையின் வலியும் தெறிக்கிறது தல....

asiya omar said...

இதுக்கு மேல் சொல்ல என்ன இருக்கு,அத்தனை அருமை.

asiya omar said...

இதுக்கு மேல் சொல்ல என்ன இருக்கு,அத்தனை அருமை.

மாணவன் said...

“நேச முடிச்சுகள்” தலைப்பே உங்கள் கவிதை (கரு)விற்கான மொத்த உருவத்தையும் சொல்லிவிடுகிறது அருமை நண்பரே,

வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகலந்த வலிகளையும் அன்பையும் கையாண்ட விதம் சூப்பர்...

கவிதைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

சுவடுகள் said...

நினைப்புக்கும் நிசத்துக்கும்
கண்ணீரால் பாலம் கட்டுகிறேன்.
உன் அன்பே நிரம்பி வழிகிறது...

நேசத்தின் ஆழம் பேசும் இந்த வரிகள்.....பிரிவின் சாரலில் மனதை நடுங்கச் செய்கிறது. மொத்தக் கவிதையும் படித்து முடித்தபோது.....இயல்பான... ஆழமான... படபடப்பு இதயத்தில், நேசத்தில் முடிச்சிகள் (தன்னுணர்ச்சி) விழாமல் இருத்தலே நலம் என்பதை.....'நேசத் தமிழில்' முடிச்சிட்டு 'மனசுக்குள்' விதைக்கிறீர்கள்.

எஸ்.கே said...

அன்பும் வலியும் நன்றாக தெரிகின்றது கவிதையில்!

எஸ்.கே said...

இதைப் பார்த்தீங்களா?

இதயச்சாரலில்..

Meena said...

அருமையிலும் அருமை. சந்தர்ப்ப சூழ்நிலையால்
மாதங்கள் பிரிந்த தம்பதியரும் ஆடிப் போய்விடுவது
உண்மை. மொத்தமாகப் பிரிந்து இங்ஙனம் ஆடிப் போவது. இனிய முடிவைத்தான் அளிக்கும். பிரிந்தவர் சேரத் துடிக்கின்றனர்

Anonymous said...

நிழலிம் அருமை வெயிலில் தான் தெரியும்...

கோமாளி செல்வா said...

அண்ணா எனக்கு இதுக்கு எப்படி கமெண்ட் போடுரதுனே தெரியல . சத்தியமா ரொம்ப அருமையா இருக்கு . அதிலும் ஒரு ஆணின் வேதனைகளையும் அதே சமயம் பிரிந்த பெண்ணின் வேதனைகளையும் அப்படியே கண்முன்னாடி கொண்டுவந்து நிருத்திருக்கீங்க. நானும் இதே மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன் .. நேரம் இருக்கும்போது எழுதுறேன் . அதே மாதிரி கடைசில இருக்குற வார்த்தை ஜாலம் அருமை .
//ஆனந்த கடலில் தள்ளியவனும்
அசோக வனத்தில் தனித்து விட்டவனும்
நீயே...!!
//

இந்த வரிகள் வாய்ப்பே இல்ல ..

சுவடுகள் said...

காய்ந்து கிடக்கும்
குழம்பிக் கோப்பைகள்.....
ஈக்களின் வசிப்பிடம்.

மூன்று வரிகளில்....ஒட்டுமொத்த மனோ நிலையையும் விளக்கிவிட்டீர்களே!!! அருமை.

சுவடுகள் said...

சமையலறையும் படுக்கையறையும் என்னை
சாகடிக்கின்றன...!?
பூசையறையோ புறந்தள்ளி கதவடைக்கிறது.
ஈரம் சொட்டும் உன் கூந்தல் வாசம் தேடும்....
நம் குலதெய்வங்கள் சாம்பிராணி மறுக்கின்றன.
சத்தமில்லாமல் நீ சாதித்த வாழ்க்கை புரிகிறது.
யுத்தமில்லாமலே பிரிந்திருக்கிறோம்...
உத்தமியே உணர்வாயோ....!

பிரிவின் வலியில் தவிக்கும் ஆன்மாவின் அலறல் மனதைப் பிழிகிறது.

சுவடுகள் said...

என் வாழ்வே...!
என் தவமே...!
என் புரிதலே...!
என் விடியலே...!
என் சந்தோசமே....!
உணர்கிறேன்....!!

எத்தனை பரிசுத்தமான காதல்.....வியந்து.. வியந்து...பிரமிக்கிறேன்.அழகு அற்புதம்.