Tuesday, January 04, 2011

"புரியப்படாத புரிதல்"...!


உருகும் மெழுகுவத்தியின்
ஒழுகும் ஒளியில்
புழங்கும் சீவன்கள்..., ஒருபோதும்
உணர்வதுமில்லை....
உருகுவதுமில்லை....
மெழுகுவத்திகாய்...!

உருகும் மெழுகாய் என் பிரியங்கள்....!!

காயும் கதிரில் வாழ்ந்து
மாயும் உயிர்கள்...வாழ்த்து
பாடவில்லை....!
கதிரின் புனிதம்
புரியவில்லை....!

காயும் கதிராய் என் காதல்...!!

வத்தக் குழம்பில்
கூடிப்போன காரமாய்,-கொஞ்சம்
வச்சப் பாசத்தில்
காதல் கூடிப்போச்சு,- என்
காதலில் குற்றமில்லை,- உன்னைக்
காதலிப்பதும் பாவமில்லை.

"உரைக்கும்" காரமாய் என் உணர்வுகள்....!!

மணக்கும் மல்லிகை நீ, -உன்னை
மணக்கும் மன்மதன் நான்,
பிணக்கும் ஏனடியோ...? பின்
வழக்கும் ஏனடியோ...?

புரியாதவளுக்காய்...அவளைப்
புரிந்தவன்...


9 comments:

எஸ்.கே said...

//வத்தக் குழம்பில்
கூடிப்போன காரமாய்,-கொஞ்சம்
வச்சப் பாசத்தில்
காதல் கூடிப்போச்சு..
//
நல்ல உவமை!:-)))

'பரிவை' சே.குமார் said...

புரியாதவளுக்காய்...அவளைப்
புரிந்தவன்...

உள்ளக் குமுறலை அள்ளித் தெளித்திருக்கிறான் தமிழ்க்காதலன் மனவழியாக இந்தக் காதலன் (இவன் யாரோ... நீர்தானோ?)

Anonymous said...

காயும் கதிரில் வாழ்ந்து
மாயும் உயிர்கள்...வாழ்த்து
பாடவில்லை....!
கதிரின் புனிதம்
புரியவில்லை....!


நல்ல கற்பனை

கா.வீரா

Anonymous said...

அருமையான படைப்பு...!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடன்
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com

Unknown said...

உருகும் மெழுகுவத்தியின்
ஒழுகும் ஒளியில்
புழங்கும் சீவன்கள்..., ஒருபோதும்
உணர்வதுமில்லை....
உருகுவதுமில்லை....
மெழுகுவத்திகாய்...!

உருகும் மெழுகாய் என் பிரியங்கள்....!!

காயும் கதிரில் வாழ்ந்து
மாயும் உயிர்கள்...வாழ்த்து
பாடவில்லை....!
கதிரின் புனிதம்
புரியவில்லை....!

காயும் கதிராய் என் காதல்...!!///////////////

superb...

பலரின் காதல் புரியப்படாமல் மெலுகாய் உருகித்தான் போகின்றன..

சுவடுகள் said...

உருகும் மெழுகுவத்தியின்
ஒழுகும் ஒளியில்
புழங்கும் சீவன்கள்...,

நண்பரே அசத்துரீங்க போங்க,' புழங்கும் சீவன்கள்'... அருமை !

வத்தக் குழம்பில்
கூடிப்போன காரமாய்,-கொஞ்சம்
வச்சப் பாசத்தில்
காதல் கூடிப்போச்சு,

தமிழ்,... கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்துங்க காரம் சுவைக்கும்.
எளிய அருமையான உணர்வுப் பிரவாகம் உயிர் கொண்ட ஓவியமாய்..

உங்கள் கவிதைகளின் தனித் திறத்தால் வியக்கச் செய்கிறீர். நன்று.வளர்க.

புரியாதவளுக்காய்...அவளைப்
புரிந்தவன்...

very nice

Philosophy Prabhakaran said...

// வத்தக் குழம்பில்
கூடிப்போன காரமாய்,-கொஞ்சம்
வச்சப் பாசத்தில்
காதல் கூடிப்போச்சு //

அடடே... என்ன ஒரு இலக்கிய வரிகள்... அருமை...

ஹேமா said...

வார்த்தைகளில் வலி ஏக்கம் இருந்தாலும் வார்த்தைகள் கோர்க்கும் விதம் உங்களுக்குக் கை வந்த கலை !

Meena said...

//புரியாதவளுக்காய்...அவளைப்
புரிந்தவன்...//

உங்க கவிதையை எப்படியோ புரிஞ்சுகிட்டேன் .ஆனா சொல்ல மாட்டேன் !