Friday, January 07, 2011

மெட்டுக்கு பாட்டு - 1

மெட்டுக்கு பாட்டு - 1
படம் : மைனா
பாட்டு மெட்டு : சிங்க் சிக்காம் சிமிக்கிப் போட்டு சிலுசிலுக்குற ரவிக்கை போட்டு...
இந்த பாடலின் மெட்டில் இந்த பாடலை பாடுங்கோ.... 
*********************************************************
ஆண்:
சின்ன சின்ன நெனைப்பு புள்ள
சிங்காரியே  தினமும் தொல்ல
அந்த கால நெனைப்பு இப்போ
நெஞ்சில் ஓரமா....ஏ
கொஞ்ச நேரம் கொஞ்சவாடி
கண்ணே ஓரமா....1

பெண்:
சின்ன சின்ன தீப்பொறிதான்
குடிசை வீட்ட கொளுத்திப் போடும்
குரங்கு வாலு தீ புடிச்சி 
இலங்கை எரிஞ்சிது 
நீயும் அந்த குரங்கு போல
உனக்குத் தெரியுமா...?   2

ஆண்:
கொல்லையில நெல்லு புள்ள
நெல்லுக்குள்ள வரப்பு உள்ள
வந்து போடி நீயும் புள்ள
கொஞ்ச நேரம்தான்...ஏ
வஞ்சி உன்ன நெனச்சதால
கஞ்சி இறங்கல...    3

பெண்:
நெல்லறுக்கும் அருவாருக்கு
நெனப்பு எப்புடி உனக்கிருக்கு..?
வரப்புகுள்ள வந்து போனா
வம்பு பண்ணுவ..
வரமாட்டேன் போடா மச்சான்
என்னா பண்ணுவ..?  4

ஆண்:
கும்பகோணம் வெத்தலையே
கொடமொளகா பத்தலையே
தாராசுரம் தாம்பாளம் நான்
வாங்கி வரட்டுமா
தாம்பூலம் போடாமலே
நீயும் சிவக்குற.... 5

பெண்:
ஆசை வச்ச மீசை மாமா
சாடையில பேசலாமா
மஞ்ச தாலி கட்டிப்புட்டா
மாமன் எனக்கு நீ
மத்ததெல்லாம் அப்புறமா
கொஞ்சம் வழிவிடு... 6

ஆண்:
மீசை மேல சத்தியமா
ஆசை புள்ள உம்மேலத்தான்
நைசா இப்போ நீயும் ஏண்டி
நழுவ பாக்குற...
உன்ன கைகழுவ எண்ணமில்ல
காத்திருக்கேன்டி...  7

பெண்:
முரட்டுபய பெத்த புள்ள
வறட்டு வம்ப விட்டுபுட்டு
வம்சத்துக்கு விளக்கேத்தும்
வழிய பாரையா...
வக்கணையா சமைச்சு போட
ஆள பாரையா... 8

ஆண்:
மல்லிகையா மணக்கும் புள்ள
மாமனுக்கு பொணக்கு புள்ள
மஞ்ச தாலி வாங்கி வாரேன்
தாலி கட்டிக்கடி..
என்ன தத்தளிக்க விடாம நீ
மேல ஒட்டிக்கடி... 9

பெண்:
வெத்தலைய வாங்கு மச்சான்
சுண்ணாம்புக்கு ஏங்கும் மச்சான்
பாக்கு போல பக்குவமா
பாத்து நடந்துக்கோ...
பரிசம் போட்டு பச்ச புள்ள
கைய புடிச்சுக்கோ... 10
    

( # எனது இந்த புதிய முயற்சிக்கு உங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்ப்பார்க்கிறேன். மறக்காமல் தெரிவிக்கவும்.)  

   

22 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல முயற்சி நண்பா.
நல்லா எழுதியிருக்கீங்க...
//தீப்பொரி// தீப்பொறிதானே...
//அருவாருக்கு// அருவாளுக்கா அல்லது அருவாருக்குத்தானா...?
பாருங்கள்...
மற்றபடி நல்லாயிருக்கு...
சினிமாவுக்கே பாட்டெழுதலாம்.
அப்புறம் இண்ட்லியில ஓட்டுப்போட முடியாம இருந்தது. ஆனா உங்களுக்கு ஓட்டு விழுந்திருச்சு....

சி.பி.செந்தில்குமார் said...

wait.. i will read and then come

செல்வா said...

//மீசை மேல சத்தியமா
ஆசை புள்ள உம்மேலத்தான்
நைசா இப்போ நீயும் ஏண்டி
நழுவ பாக்குற...
உன்ன கைகழுவ எண்ணமில்ல
காத்திருக்கேன்டி... ௭//


உண்மைலேயே அந்த ராகத்துல படிச்ச களக்கா இருக்கு அண்ணா,
சீக்கிரமே பாட்டு எழுதுங்க !

சி.பி.செந்தில்குமார் said...

the song is super. music director s s kumaran is my friend. iwill introduce u to him..

சி.பி.செந்தில்குமார் said...

pls edit the spelling mistakes which kumar told

Unknown said...

அருமை :)

Anonymous said...

good...

Anonymous said...

good

Anonymous said...

புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

வினோ said...

தல பாடல் நல்லா வந்திருக்கு....

Unknown said...

கிராமத்து கலகலப்புடன், ஜோடி பாடலை உருவாக்கியுள்ளீர்கள். மிக அருமையாக வந்துள்ளது. திறமைசாலிதான் நீங்க..

சுவடுகள் said...

# வெத்தலைய வாங்கு மச்சான்,
சுண்ணாம்புக்கு ஏங்கும் மச்சான்...

கிராமிய பாடல்களின் தனித் திறமையே, கலாச்சாரம் கொஞ்சமும் சிதையாமல்..,கருத்தாழத்தை எளிய தெம்மாங்கு நடையில் சொல்வதுதான்.

கவிஞர், இங்கே பெண்மையின் மன உணர்வையும்...,தன் தலைவனின் உள்ள உணர்ச்சியை புரிந்து..துரிதப் படுத்தும் வகையில்....'நாசூக்காக' சொல்லியிருக்கும் வகையில் நம் பண்பாட்டின் மணம் கமழ்கிறது. மிகவும் இரசித்து வாசித்தேன்.

நன்று. தொடருங்கள்.

சுவடுகள் said...

* கொல்லையில நெல்லு புள்ள
நெல்லுக்குள்ள வரப்பு உள்ள ....

இவ் வரிகளில் கிராமத்து வளத்தையும்... ; ' நெல் வளர்ந்து கதிர் முற்றி வயல் நிறைந்திருக்கிறது, அது போல தன் மனமும் நிறைய வேண்டும்... என்ற ஏக்கத்தையும் குறிப்பால் உணர்த்தும் விதம் அருமை

சுவடுகள் said...

மீசை மேல சத்தியமா
ஆசை புள்ள உம்மேலத்தான்
நைசா இப்போ நீயும் ஏண்டி
நழுவ பாக்குற...
உன்ன கைகழுவ எண்ணமில்ல
காத்திருக்கேன்டி... 7

மிகவும் சுவையாய் இருக்கிறது.மணக்க.... மணக்க.....கிராமிய விருந்து. (விருதுக்கு வாழ்த்துக்கள்)

Unknown said...

ஆஹா ...

ஜெயசீலன் said...

Nalla muyarchi....

Chitra said...

One of your best! Super!

Philosophy Prabhakaran said...

சூப்பரா இருக்கு சார்... நீங்க ஒரு நல்ல பாடலாசிரியரா வர்றதுக்கு எனது வாழ்த்துக்கள்...

Unknown said...

Very good!

DREAMER said...

நல்ல முயற்சி..! நல்ல பயிற்சி..! வாழ்த்துக்கள்

-
DREAMER

Meena said...

மிக நன்றாக இருக்கு

சிவகுமாரன் said...

மெட்டுக்கு பாட்டு அருமை.
கிராமிய மணம் கமழுகிறது பாட்டில் .
ஜிங்கு ஜிக்கா பாட்டின் வரிகளைப் போலவே இதவும் உள்ளது. வேறு பொருளில் எழுதி இருக்கலாம். ஊனம் ஊழல் ஆனது மாதிரி.
வாழ்த்துக்கள்.