Sunday, January 09, 2011

மெட்டுக்குப் பாட்டு - 2

மெட்டுக்குப் பாட்டு - 2
படம்: பொற்காலம்
பாட்டு மெட்டு: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ....?!
இந்த பாடல் மெட்டில் பாடவும்....
*********************************************************************
   
அரிது அரிது அரசியல் பிழைத்தல் அரிது
நீதி நேர்மை கண்ணியம் காத்தல் அதனினும் அரிது...
 
பல்லவி:
ஊழல் ஊழல் ஊழல் இங்கே ஊழல் பாருங்கோ (2)
உலகில் உள்ள ஊழல் எல்லாம் ஊழல் இல்லைங்கோ
அரசியல் வாதி எல்லாம் ஊழலிலே திளைக்கிறான்
அதிகாரி எல்லாருமே லஞ்சத்திலே சிரிக்கிறான்
உத்தியோகம் பாக்குறவன் பொழைக்கிறான்,- இங்கே
உடலுழைப்பில் வாழுறவன் தவிக்கிறான்.....    (ஊழல்..ஊழல்)   

சரணம்:1

ஓ...ஓ....ஓ.......
வியாபாரியின் தராசுசுல ஒளிஞ்சிருக்கும் ஊழல்
அட கலப்படத்தில் ஊழல்
அத யாரு இங்க தட்டி கேக்க போறீங்கோ...ஓ..ஓ...
நியாயவிலை கடையிலதான் நலிஞ்சிருக்கும் ஊழல் 
அத கேக்க போனா மோதல்
அட சாகும் வரை போராட்டம் ஏனுங்கோ..?
வலியவங்க சரியில்லே...
வாழவுந்தான் வழியில்லே...
விடிவு காலம் கிடைக்கலயே..
விவசாயி பொழப்பிலே... 
பாசம் எல்லாம் வேசம்,- இங்க
பணம் பண்ணும் மோசம்
அந்த மோசம் களைய வேணுமடா
நமக்கு கொஞ்சம் ரோசம்...           (ஊழல்... ஊழல்) 
       
சரணம்:2

கல்லூரியில் இடம் புடிக்க கட்டுகட்டா ஊழல்
அந்த கல்வியில ஊழல்
அட படிச்சவங்க பண்ணும் பாவம் பாருங்கோ...ஓ..ஓ...
காவல்துறை கிட்டபோனா கை நிறைய ஊழல்
அட நோட்டுக்குதான் மோதல்
அத தட்டிக் கேட்கும் மனுசன் இங்கே யாருங்கோ...
கஞ்சி தொட்டி வச்சாங்கோ
கையேந்த விட்டாங்கோ
தஞ்சை எல்லாம் காஞ்சி போச்சி
கல்லணைய பாருங்கோ...
உழைச்சி என்னடா லாபம்...?
அட முயற்சி எல்லாம் சாபம்...
இங்க நெலச்சி நிக்க வேணுமின்னா
நியாயம் கேக்க வேணும்...                   (ஊழல்... ஊழல்)

6 comments:

'பரிவை' சே.குமார் said...

மெட்டுக்குப் பாட்டு கலக்கல் என்றால் படமோ சூப்பர்...
அருமையான பாட்டு.

சுவடுகள் said...

# அரிது அரிது அரசியல் பிழைத்தல் அரிது
நீதி நேர்மை கண்ணியம் காத்தல் அதனினும் அரிது...

புதிய ஆத்திச் சூடி......ரொம்ப அருமையா இருக்கு

சுவடுகள் said...

வலியவங்க சரியில்லே...
வாழவுந்தான் வழியில்லே...
விடிவு காலம் கிடைக்கலயே..
விவசாயி பொழப்பிலே...

மெத்தனைப் போக்கு அரசாங்கத்தை சாடும் இந்த வரிகள்....மிக நன்று.

மீண்டும் ஓர் சுதந்திரத்துக்காய் போராட்டம் நிகழ்த்த தேவை இருக்கிறதே என நினைக்க வருத்தமாய் இருக்கு..

இது போன்ற விழிப்புணர்வூட்டங்கள்...தொடரட்டும்.

சுவடுகள் said...

# கஞ்சி தொட்டி வச்சாங்கோ
கையேந்த விட்டாங்கோ
தஞ்சை எல்லாம் காஞ்சி போச்சி
கல்லணைய பாருங்கோ...

உழைச்சி என்னடா லாபம்...?
அட முயற்சி எல்லாம் சாபம்...

முத்தாய்ப்பான இந்த வரிகளில் மனம் கரைந்துக் கனக்கிறது. நல்லதொரு கிராமியப் பாடல்.

Meena said...

ஊழலின் இருப்பிடம் அனைத்தையும் அறிமுகப் படுத்தி விட்டீர்கள் கவிதையில். நல்ல கவிதை இல்லை இல்லை நல்ல பாட்டு

ஹேமா said...

இது வேற நடக்குதா...அருமையாயிருக்கு !