* சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
- சுவாமி விவேகானந்தர்.
******************************************************************************
எழுச்சியின் பொருள் புரிந்ததும் இந்திய
கம்பீரம் எதுவென உலகறிந்ததும்,- உண்மை
ஆன்மிகம் இதுவென உணர்ந்து கொண்டதும்
செங்காவிச்சுடரே..! நின் எழுச்சிக்கு பின்தான்.
நல்லதை கற்கும்வரை நரேந்திரன் நீ..!
நல்லதை விதைத்த விவேகம் நீ..!
நல்லதை மலரச்செய்த ஆனந்தம் நீ..!
நல்லதின் முழுமை "விவேகானந்தம்"..!!
பரம அம்சத்தை குருவாய் கொண்டு
பாரதம் அளந்த குருவாய் நீ..!
பண்பட்டபின் பண்பாடு பேசியவன் நீ
பரதத்தின் பெருமை பேசியவன் நீ.
உலக இளைஞர்களின் திசைக்காட்டி நீ
உலகத்தை சொந்தமாக்கிய சகோதரன் நீ..!
உடல் தாண்டிய ஆன்மாவின் நேசம்
உன்னதமென உணர்த்தியவன் நீ..!!
தென்குமரி தேடியவன் அமைதி குடிலமைத்தவன்
தென்னகத்தின் அமைதி அன்றே புரிந்தவன்
வேர்களைத் தாண்டி விழுதுகள் விட்டவன்
கம்பீரம் காட்டி கடலில் நங்கூரமிட்டவன்.
இதயங்களில் சிம்மாசனமிட்ட இளைய சிங்கம்
இந்திய மண்ணில் கண்டெடுத்த சொக்கத்தங்கம்
இன்னுமிருக்கும் நம்பிக்கையின் இரகசிய அரங்கம்
இளைஞர்களைத் தேடிய ஞானத்தின் அங்கம்.
உன்னதங்கள் யாவும் பெற்ற பூமியில்
உன்மத்தங்கள் மேவும் கொடுமை பொறுக்கா
உள்ளக்கிளர்ச்சியில் உயிர்த் துடிக்கும் தினம்
உன்னை நினைத்தே,-மீண்டும் வா ..!
குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் இந்தியாவின் "நம்பிக்கை இளைஞன்" நரேந்திரன் என்கிற விவேகானந்தருக்கு, "ஆன்மீக அளவுகோலுக்கு" தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.
உன்மத்தங்கள் மேவும் கொடுமை பொறுக்கா
உள்ளக்கிளர்ச்சியில் உயிர்த் துடிக்கும் தினம்
உன்னை நினைத்தே,-மீண்டும் வா ..!
குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் இந்தியாவின் "நம்பிக்கை இளைஞன்" நரேந்திரன் என்கிற விவேகானந்தருக்கு, "ஆன்மீக அளவுகோலுக்கு" தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.
***************************************************
5 comments:
//நல்லதை கற்கும்வரை நரேந்திரன் நீ..!
நல்லதை விதைத்த விவேகம் நீ..!
நல்லதை மலரச்செய்த ஆனந்தம் நீ..!
நல்லதின் முழுமை "விவேகானந்தம்"..!!//
அருமை நண்பா.
அழகான கவியை அபூர்வமானவருக்கு தொகுத்திருக்கிறீர்கள்.
விவேகானந்தரை நினைவில் கொள்ள வைத்த உமக்கு நன்றிகள்.
குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் இந்தியாவின் "நம்பிக்கை இளைஞன்" நரேந்திரன் என்கிற விவேகானந்தருக்கு, "ஆன்மீக அளவுகோலுக்கு" தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்.
.....அருமையான சமர்ப்பணம். எனது வணக்கங்களையும் இணைத்து கொள்கிறேன்.
வரிகளில் வாழ்த்து சொல்லாமல் நாமும் அவரின் அறிவுரைகளின் வழி பாதையில் பயணம் அமைத்தால் செழிக்கும் என் பொன்நாடு வளம்கொழிக்கும் பலருக்கு வழியமைக்கும்
விவேகானந்தரை நினைவுகூர்ந்ததற்கு நன்றி + வாழ்த்துக்கள்...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
"நல்லதை கற்கும்வரை நரேந்திரன் நீ..!
நல்லதை விதைத்த விவேகம் நீ..!
நல்லதை மலரச்செய்த ஆனந்தம் நீ..!
நல்லதின் முழுமை "விவேகானந்தம்"
அருமை நண்பரே...
Post a Comment