ஆழ்துயர் ஆழ்த்தும் மாய்துயிர் நீத்தும்
வாழ்துயர் வையத்து நாயுருவி பேயருவி
பாழுருவ பழுதுறவ பேணும் பிழையுருவ
அழைக்கு மத்தகத்து பிதற்றும் பித்துருவ
பாழுயிர் நெக்குருக பலநாள் நெய்யுருக
வாழுயிர் வருந்தி போகுமுயிர் பொருந்தி
புழுதியில் புழுத்த புழுவது நுழைத்த
பேயது பழுத்து பிண்டத்து பெருத்து
தடித்த தண்டொத்து கொழுத்த வண்டொத்து
கிளைத்த கொடியில் முளைத்த இலையொத்து
அழைத்த விருந்துக்கு அமிழ்த மழையொத்து
பிழைத்த மருந்துக்கு குருத்துக் குறியொத்து
நெடுநாள் மூழ்கி நீளும் பொழுதில்
வரும்நாள் தொடங்கி வாழும் நாள்
நெடுக்க நீட்டிப் படுக்கும் பொழுது
வரும்கால் பந்தக்கால் வாழுங்கால் சொந்தக்கால்.
********************************************************
வாழ்துயர் வையத்து நாயுருவி பேயருவி
பாழுருவ பழுதுறவ பேணும் பிழையுருவ
அழைக்கு மத்தகத்து பிதற்றும் பித்துருவ
பாழுயிர் நெக்குருக பலநாள் நெய்யுருக
வாழுயிர் வருந்தி போகுமுயிர் பொருந்தி
புழுதியில் புழுத்த புழுவது நுழைத்த
பேயது பழுத்து பிண்டத்து பெருத்து
தடித்த தண்டொத்து கொழுத்த வண்டொத்து
கிளைத்த கொடியில் முளைத்த இலையொத்து
அழைத்த விருந்துக்கு அமிழ்த மழையொத்து
பிழைத்த மருந்துக்கு குருத்துக் குறியொத்து
நெடுநாள் மூழ்கி நீளும் பொழுதில்
வரும்நாள் தொடங்கி வாழும் நாள்
நெடுக்க நீட்டிப் படுக்கும் பொழுது
வரும்கால் பந்தக்கால் வாழுங்கால் சொந்தக்கால்.
********************************************************
8 comments:
நீங்க சொன்னா சரிதான்! :-)
வார்த்தை ஜாலங்களில் மயங்கச் செய்யும் மரபுக்கவிதை.
அருமை நண்பா... தொடருங்கள்.
(கனி)மொழிக் கவிதையை...!
# ஆழ்துயர் ஆழ்த்தும் மாய்துயிர் நீத்தும்
வாழ்துயர் வையத்து நாயுருவி பேயருவி
பாழுருவ பழுதுறவ பேணும் பிழையுருவ
அழைக்கு மத்தகத்து பிதற்றும் பித்துருவ
மீளா துயரில் ஆழ்ந்து ..,வலுவிழந்து மாயும் உயிரே.. !
'நாயுருவி' குணங்களாம்..சினம் ,கன்மம், குரோதம் மாயைகளில்..! சிக்கித் தவிக்கிறாயே !
மேலும் 'பேயருவியாய்'..பெருகி மூழ்கடிக்கும் அன்பு,ஆசை,மோகம்,போன்ற பாசப்பினைப்புகளில்
உடலை பாழ்படுத்திக் கொள்கிறாயே ! உயிர் வதைத்து வெற்று உடல் பேணத் துடிக்கும் பிழையுருவே !
மரண பீதியில் பிதற்றித் திரியும் வெற்று உருவே.......
அடடா......தமிழின் அலாதி ...என் சொல்வேன் மெய் சிலிர்க்கச் செய்கிறது மொத்த வார்த்தைகளும்.
தமிழ் இனி வாழ்வாங்கு வாழும் வாழும் என...கண்ணீர் மல்க கதைக்கலாம் போலிருக்கு...உங்கள் திறம் வளரட்டும்.வாழ்த்தும் முன் வணங்கத் தோன்றுகிறது. அருமை...அருமை....
ரொம்ப அருமை.மலைத்தேன் இதுவென மலைத்தேனுங்க ..
பாழுயிர் நெக்குருக பலநாள் நெய்யுருக
வாழுயிர் வருந்தி போகுமுயிர் பொருந்தி
புழுதியில் புழுத்த புழுவது நுழைத்த
பேயது பழுத்து பிண்டத்து பெருத்து
பாழும் உயிர் குலைந்து உருக , உயிர் ஆதார சக்திகள் நெய்யாய் உருக..உருக .. ,இங்கே வாழும் உயிர்கள் வருந்தி ,போகவிருக்கும் உயிரோடு இணைந்து ...?! புழுதியில் புழுத்த புழுக்களாய்.....தீ வினைகளாலேயே முற்றிய பிண்டமென் பருத்துக் கிடக்கிறது...
வாவ் மிக்க நன்று. புழுதியில் புழுத்த புழுக்களாய்..உவமை அருமை.
# நெடுக்க நீட்டிப் படுக்கும் பொழுது
வரும்கால் பந்தக்கால் வாழுங்கால் சொந்தக்கால்.
இவ்வளவுதான் வாழ்வு...முடிவை நோக்கிய பயணத்தில் ஏன் இந்த வதைகள்.....ஆசை துறந்து அமைதி வாழ்க்கையை வீழாமல் வாழ்ந்து பார் என சொல்லி முடிக்கும் விதம் நன்று.
மிகப் பொருத்தமான படம். நீங்கள் பேசாதவற்றயும் பேசாமல் பேசுகிறது.
கவிதையை மேலோட்டமாக படித்தால் என் போன்ற அறிவிலிகளுக்கு புரியாது... சுவடுகளின் விளக்கங்கள் அருமை... அவருக்கு எனது நன்றிகள்... முடிந்தால் சுவடுகள் தந்த விளக்கங்களை பதிவில் பிற்சேர்க்கையாக இணைத்துவிடுங்கள்...
கவிதை அருமை . தமிழில் என்னே உங்கள் திறமை?
Post a Comment