Wednesday, January 05, 2011

"அவளுக்குத்தான்"...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்....!

என்னை மொழியால் மணந்தவள்...தன்
அன்னைத் தமிழால் கவர்ந்தவள்...என்
எண்ணம் யாவும் உணர்ந்தவள்... தாயின்
வண்ணம் பாசம் தருபவள்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

முழுவதும் என்னில் தொலைந்தவள்
முழுநிலவை தன்னில் தொலைத்தவள்
அன்புக்கு முன் அவள் காட்டாறு
அவள் அன்பில்தான் இந்த பாட்டாறு.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

பிஞ்சுத்தமிழில் என் நெஞ்சம் நிலைத்தவள்
கொஞ்சுத்தமிழில் என் கற்பனை நிறைத்தவள்
விஞ்சும் தமிழின்றி விழிக்கிறேன்,- அவளே என்
நெஞ்சில் தமிழாய் மலர்கிறாள்...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

உணர்ச்சித் ததும்பும் வேலையெல்லாம்
உள்ளிருந்து வழிக் காட்டுகிறாள்...!
மறைந்து கொண்டு மறுகும் அவள்
அன்பின் வெப்பத்தில் உருகும் காதல்...!!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்....!

நினைவுகளில் நேசிக்கும் பாசக்காரி
நிசங்களில் யோசிக்கும் ரோசக்காரி
நிழலாய் நான் என்பதில் ஆசைக்காரி
நிகழ்வுகளின் வலியில் கோபக்காரி.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

சின்ன சின்னதாய் சில வரிகள்
சித்திரமாய் அவள் காதல்....!,- நானும்
சின்னதாய் அவள் காதல் கேட்கிறேன்...
சிணுங்களுடன் ஓடி மறைகிறாள்...!

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

வாழைக்குருத்தாய் வளரும் அன்பின்
வளர்ச்சியில் மிரண்டு போகிறாள்..!
வாலைப்பெண்ணாய் வந்து போகிறாள்
வாழ்க்கை மொத்தமும் தந்து போகிறாள்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

சொல்லாமலும் கொள்ளாமலும் தள்ளாமலும்
விடாமலும் விலகாமலும் விழாமலும்
வராமலும் தராமலும் பெறாமலும்
விழுதுகளாய் தாங்கும் அவள் நேசம்.

அவளுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்...!

தள்ளி நின்று என்னை அள்ளிப்போகும் ஆனந்தமே..!
துள்ளி விழும் கவிதையில் மொட்டவிழும் தெய்வீகமே..!
'கள்ளி'..! நின் காதலில் தமிழோடு நான் பிணங்குகிறேன்.
'காதலே'...! "தமிழாய்" நீ என்னில்...!! மயங்குகிறேன்.      

12 comments:

Unknown said...

superb :)

செல்வா said...

//முழுவதும் என்னில் தொலைந்தவள்
முழுநிலவை தன்னில் தொலைத்தவள்
அன்புக்கு முன் அவள் காட்டாறு
அவள் அன்பில்தான் இந்த பாட்டாறு./

இத வரிகள் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா .!

வினோ said...

:) தல என்ன சொல்றது....

'பரிவை' சே.குமார் said...

//நினைவுகளில் நேசிக்கும் பாசக்காரி
நிசங்களில் யோசிக்கும் ரோசக்காரி
நிழலாய் நான் என்பதில் ஆசைக்காரி
நிகழ்வுகளின் வலியில் கோபக்காரி. //

மேலே உள்ளது மட்டுமல்ல... எல்லாமே பிடிச்சிருக்கு. இது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல...

பாடல் வரிகள் நல்ல கோர்வை.
வாழ்த்துக்கள் நண்பா.

அன்புடன் மலிக்கா said...

அவனுக்குத்தான் எத்தனைப் பிரியம் என் மேல்

நான் மாற்றிப்படித்தேன் இதைபடிக்கும்போ என்னவனின் நினைவுவந்தமையால்...!
அருமை அருமை அருமை..

சுவடுகள் said...

என்னை மொழியால் மணந்தவள்...
முழுவதும் என்னில் தொலைந்தவள்
பிஞ்சுத்தமிழில் என் நெஞ்சம் நிலைத்தவள்
கொஞ்சுத்தமிழில் என் கற்பனை நிறைத்தவள்
விஞ்சும் தமிழின்றி விழிக்கிறேன்,- அவளே என்
நெஞ்சில் தமிழாய் மலர்கிறாள்...!!

"கலக்குறீங்க..."ரொம்ப நல்லாருக்கு, தங்களின் உயிர்ப்பான வரிகளுக்கு...எதை ஈடாக்குவது விழிக்கிறேன் (வழக்கம் போலவே )
மொழியால் 'மணந்தவள்' வித்தியாசமாய் இருக்கிறது. தமிழ்.... தமிழ்தான்.

சுவடுகள் said...

தள்ளி நின்று என்னை அள்ளிப்போகும் ஆனந்தமே..!
துள்ளி விழும் கவிதையில் மொட்டவிழும் தெய்வீகமே..!

உங்களுக்குத்தான் எத்தனை ப்ரியம் அவள் (உங்கள் தமிழ் ) மீது....

தமிழை, பாசக்காரியாய், நேசக்காரியாய்,
கோபக்காரியாய்..இன்னும்... இன்னும்... உங்கள் கவிதை வண்ணத்தில்....தாயும் சேயுமாய்,மிக அருமையாய் வார்த்தெடுதுத் தந்துள்ளீர்கள்.அருமை...அருமை...

ஹேமா said...

எப்பிடித்தான் இப்பிடி எழுதமுடியுதோ...அற்புதமா வந்த்ருக்கு கவிதை !

Philosophy Prabhakaran said...

காதல் ரசம் கிளாசில் ஊற்றி குடிக்கும் அளவிற்கு சொட்டுகிறது...

Meena said...

அவள் யாராய் இருந்தாலும் ஆழக் காதலுக்கு அதிர்ஷ்டம் செய்தவள்

சுவடுகள் said...

# பிஞ்சுத்தமிழில் என் நெஞ்சம் நிலைத்தவள்
கொஞ்சுத்தமிழில் என் கற்பனை நிறைத்தவள்
விஞ்சும் தமிழின்றி விழிக்கிறேன்,- அவளே என்
நெஞ்சில் தமிழாய் மலர்கிறாள்...!!

" அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாள் " யாருக்கு வாய்க்கும் இத்தகைய அமிழ்தம்.....உங்கள் புரிதல் அன்பிற்கே அன்பு சேர்க்கட்டும்.

சுவடுகள் said...

# சொல்லாமலும் கொள்ளாமலும் தள்ளாமலும்
விடாமலும் விலகாமலும் விழாமலும்
வராமலும் தராமலும் பெறாமலும்
விழுதுகளாய் தாங்கும் அவள் நேசம்.

உங்கள் வார்த்தை விளையாடல்களை வியக்காமல் இருக்க இயலவில்லை.

என்னதான் கருத்து தெரிவித்தாலும் உங்களின் கவிதைக்கு ஈடான ஓர் கருத்தை சொல்லி விட்டோமா....என யோசித்தால் இல்லை என்றே தோன்றுகிறது.

நச்சுன்னு எழுதுறீங்க.