Monday, September 26, 2011

”நந்தவனம்...”




காத்திருக்கும் நந்தவனத்தில் 
கவிஞனின் கால்தடம் பதிகிறது.
பூத்திருக்கும் பூக்களெல்லாம்
புன்னகைத் தூவி வாழ்த்துது.


கவிதைக்கு மடல் தீட்டும் மலர்கள்
கவிஞனுக்கு இதழ்க் காட்டி சிரிக்கிறது
கவிதைக்கு பரிசாக தேன்மாரிச் சொரிகிறது
கருவண்டின் ரீங்காரம் இசைமழைப் பொழிகிறது


தூரல்களாய் விழும் கவிதைச் சாரலில்
தூங்கும் மொட்டுக்கள் படிக்கும் மெட்டுக்கள்
துள்ளிவரும் சந்தங்கள் கவிஞனுக்கு சொந்தங்கள்
மடல் மத்தளத்தில் மழைத்துளி சத்தங்கள்


பூக்களின் குழல்களில் வண்டுகளின் நாதசுரம்
புல்லாங்குழலில் ஒடிவரும் கவிஞனின் ஏழுசுரம்
இலைகளைக் கட்டிக் கொண்ட வேர்களில்
இன்பத்தின் சாரங்கள் துளிர்க்கும் துளிராய்


மின்னும் இலைகளில் பொன்னும் குறையும்
மிடுக்கு காட்டிச் சிரிக்கும் அழகில்
இருக்கும் கவலை மறந்துப் போகும்
இதம் தரும் இனிய வேளை


தண்டுகளில் தாவும் கரங்களை தழுவும்
சில்லிட்ட சிலிர்ப்பான தருணங்களில் மனம்
இலைகளை முத்தமிட்டு இதழ்களை ஈரமாக்கும்
மலர்களின் நாணத்தில் மௌனம் ஆடையாகும்


புதியப் பாதைக்கு புறப்படும் கவிஞனை
பொன்வண்டும் பூச்செண்டும் தந்து வழியனுப்பும்
அன்பான அந்தவனம் எப்போதும் சொந்தவனம்
உனக்காக வாழ்ந்துப் பார்க்க ஒவ்வொருநாளும்


உயிர்ப்போடு வந்துப் போகிறான் கவிஞன்.










11 comments:

மகேந்திரன் said...

//பூக்களின் குழல்களில் வண்டுகளின் நாதசுரம்
புல்லாங்குழலில் ஒடிவரும் கவிஞனின் ஏழுசுரம்//

ஏழு ஸ்வரங்களில்
ஏகாந்த ராகம்
பாடியிருக்கிறீர்கள்
கவிதை அழகு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இயற்க்கையில் ஒன்றுதலே கவித்துவத்தின் சாரம்...

அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

எங்ககிட்ட சொல்லாம கவிஞருக்கு புதிய பாதை செட்டாயிருச்சா... ரொம்ப சந்தோஷம்.

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

Kayathri said...

புதிய பாதைக்குப் புறப்படும் கவிஞனின் கவிதைகள் நந்தவனமாய் என்றென்றும் பூத்துக்குலுங்கி எங்களுக்கு மனமளிக்க வாழ்த்துக்கள்...

தமிழ்க்காதலன் said...

வாங்க மகேந்திரன், உங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன்.

தமிழ்க்காதலன் said...

என் பிரியமான கவிதை வீதி சௌந்தர், வாங்க. உங்கள் கருத்துரை எமக்கு மிக உற்சாகம் தருகிறது. தொடர்ந்து தாங்கள் எமக்கு தரும் ஆதரவு உங்களின் உணர்வை வெளிக்காட்டுகிறது.

என் நெஞ்சார்ந்த நன்றி தோழா..,

தமிழ்க்காதலன் said...

என் அன்பு தோழன் “மனசு” சே.குமார் வாங்க, அடியேன் மேல் தாங்கள் கொண்ட அன்புக்கு நான் என்றும் உரிமையுள்ளவன். உங்கள் ஆதரவு இந்த கவிஞனுக்கு எப்போதும் வேண்டும்.

தமிழ்க்காதலன் said...

வாங்க சீனிவாசன், வணக்கம். முதல்முறையாய் வருகை தந்து கருத்து தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழா..,

உங்கள் பக்கம் வந்து, உங்களோடு இணைந்து கொள்கிறேன். அழைப்புக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க காயத்ரி, வணக்கம். உங்களின் ஆதரவுக்கும் தொடர் வருகைக்கும் என் மனம் கனிந்த நன்றி.

தொடர்ந்து வருகை தாருங்கள்....

நாவலந்தீவு said...

இயற்கையோடு இயைந்த கவிதை.
இயற்கை வனப்பில்
மணக்கும் கவிதை...
சிறப்பாக எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்.