Friday, September 16, 2011

”அது..!”இனியது இன்முகப் பொலிவது காண
இனியது இன்சொல் ஒலியது கேட்க
இனியது நற்றமிழ் சொற்கள் உதிர்வது
இனியது இமைகள் மூடி இரசிப்பது


எளியது மனிதம் மனையில் பேணுதல்
எளியது மண்ணுயிர் இன்பம் பெறுவது
எளியது மனதில் தூய்மை மண்ணுதல்
எளியது மாந்தர் சுயநலம் துறப்பது


வலியது வன்முறை தரும் வலி
வலியது வன்சொல் தரும் வலி
வலியது வாழ்ந்திட எளியது நலிந்திடல்
வலியது நல்லோர் வாயுரைத் தவிர்த்தல்


கொடியது கொற்றவன் குலமகள் பிரிதல்
கொடியது பிள்ளையை பெற்றவள் பிரிதல்
கொடியது உயிர்த்துணை உறவின்றி பிரிதல்
கொடியது கொடுமை கண்டும் பொறுத்தல்

2 comments:

Kayathri said...

இனியது இன்முகப் பொலிவது காண...
எளியது மனிதம் மனையில் பேணுதல்...
வலியது வன்சொல் தரும் வலி...
கொடியது கொடுமை கண்டும் பொறுத்தல்...உண்மை.

சே.குமார் said...

Kavithai Nalla Irukku.