Wednesday, September 14, 2011

"சிலந்திக் கூடு..!"




சிலந்திக் கூடாய் சிரிக்கிறது வாழ்க்கை
சிக்கிய பூச்சிகளுள் பூச்சியாய் நானும்
சிலந்தி விரித்த வலையில் விதி
சிரிப்பதைப் பார்த்த படி...


வருந்தி பயன் இல்லை வாழ்வில்
விரும்பி ஏற்க வில்லை விருந்தை
விழுந்தவன் எழுவதற்கு விடவில்லை சூழல்
விதிக்கும் மதிக்கும் போராட்டம்...


உழைப்பில் பலன் உடன் இல்லை
உழைத்த களைப்போ தீரவில்லை தினம்
உண்மையோடு ஒரு ஒத்திகைப் போராட்டம்
உனக்கும் எனக்குமான வாழ்க்கை...


ஒட்டகத்தின் மேல் சவாரியாய் ஆடுகிறது
ஒவ்வொரு முறையும் விழாதிருக்க போராட்டம்
ஓடும் காலத்தின் வேகம் மின்னலென
ஒட்டகமோ ஆடும் படகாய்...


காற்றில் கைவீசுகிறேன் ஆற்றில் வீசுவதாய்
கைக்குப் பிடிமானமற்ற கால வெள்ளத்தில்
கைப்பிடியற்ற துடுப்பைப் போடுகிறேன்
காற்று கன்னத்தில் அறைகிறது...


அகட்டில் தாழ்ந்து முகட்டில் உயர்ந்து 
அலை மோதும் எண்ணங்களில் அலைமோதும்
அன்பை அடகு கேட்கிறது வாழ்க்கை
அரவணைக்க ஆளில்லா நேரத்தில்...


மாறும் சூழல்கள் மாறும் விழலுக்கு
ஊரும் நீரென வீணாகாது சுழலும்
காலம் சுழலும் திசையில் ஞாலம் 
உழலும் இரகசியம் கண்டேன்.

7 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள் பாராட்டுக்கள்

பிரேமி said...

சிலந்திக்கூடாய் சிக்கிக் கிடக்கிறது ஏனையோர் வாழ்க்கை... அதில் யார்தான் விதிவிலக்கு??

Kayathri said...

சிலந்திக்கூட்டில் சிக்காமல் இருக்கும் வழி அறிந்தவர் யாரோ? விதிதான் அறிய விட்டு விடுமா?

காந்தி பனங்கூர் said...

அருமையான கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

தேன்தமிழ் கவிதை வாழ்த்துக்கள் மக்கா...!

ஜெயசீலன் said...

நண்பா! உனக்கு தேர்ந்த மொழி ஆளுமை! கவிதையும் அருமை... எனது கைத்தட்டல்கள்...

TamilTechToday said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com