Monday, September 05, 2011

"ஆசான் என்ற ஓசோன்"




வீணில் கழியாதப் பொழுதுகள் தந்து
விழலுக்கு பாய்ச்சிய நீரென விரயமாகா
வாழ்வுக்கு அடித்தளம் முதல் மேல்தளத்துக்கும்
வழிகாட்டும் கைக்காட்டியாய் எங்கள் ஆசான்..!!


விதைகளில் பழுது நீக்கி விளைச்சலில்
வீரியம் கூட்டும் விவசாயி,- பிஞ்சுக்
குழந்தைகள் நெஞ்சில் அறிவை விதைக்கும்
அர்ப்பண வாழ்க்கை ஆசான் வாழ்க்கை..!!


எளிதில் புரியா வாழ்வதனை வகைதொகையாய்
வகுத்துக் கொள்ள வழிச் சொல்லி
வாழும் காலம் வரை ஆலமரமாய்
நிழல் தரும் அறிவு சுடர்..!!




உலக அறிவை ஊட்டி வளர்த்து
அறிவியல் புதுமைகள் ஆக்கி வைத்து
உலவியல் உறவியல் உயிரியல் உண்மைகள்
பலப்பல திறமைகள் வளர்த்து விட்டார்


பிறப்புக்கும் இறப்புக்கும் பொருள் தந்து
பிழைப்புக்கும் வாழ்வுக்கும் பொருள் ஈந்து
வள்ளுவம் சொல்லிய நல்லறம் காத்திட
வளமான பாரதம் அமைந்திட தோளீந்து


வருங்காலம் தீர்மானிக்கும் வள்ளல்கள்,- இந்திய
தேசம் செதுக்கும் சிற்பிகள் உங்கள்
கரங்களில் தேசத்தின் வளர்ச்சிகள்,- வளமான
செல்வமாய் மனிதம் செய்வீர்..! செய்வீர்..!!


நாளைய சமூகம் செல்லும் பாதையை
நமக்கு இன்றே சீர் செய்யும்
நல்ல பணி தொடர வேண்டி
இனிய ஆசிரிய தின வாழ்த்துகள்.


***வணக்கங்களுடன்***
-தமிழ்க்காதலன்.

3 comments:

Kayathri said...

//விதைகளில் பழுது நீக்கி விளைச்சலில்
வீரியம் கூட்டும் விவசாயி,-//

//வருங்காலம் தீர்மானிக்கும் வள்ளல்கள்,- இந்திய
தேசம் செதுக்கும் சிற்பிகள் உங்கள்
கரங்களில் தேசத்தின் வளர்ச்சிகள்,- வளமான
செல்வமாய் மனிதம் செய்வீர்..! செய்வீர்..!!//

அருமை....

Yaathoramani.blogspot.com said...

ஆசிரியர்களின் அருமைகளை பெருமைகளை
அழகாகத் தொகுத்துக் கூறும் அருமையான
கவிதையைத் தந்தமைக்கு மனப்பூர்வமான
வாழ்த்துக்கள்

S.Kumar said...

அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...
அருமை...