Sunday, December 12, 2010

"கரையில் நீ...!"

உன் நினைவென்னும்...
இன்ப வெள்ளத்தில்....
இழுத்துச் செல்லப் படுகிறேன்.
இன்னும் நிற்கிறாய் கரையில் நீ...!

ஆங்காங்கே.....
காதல் சுழல்களில்....
மூழ்கி திக்குமுக்காடுகிறேன்.
மூச்சடைக்கிறேன்.
கைக் கொடுத்து
கரையேற்ற வேண்டியவள்
இன்னும் நிற்கிறாய் கரையில் நீ...!

காதல் ஒரு சூதாட்டமா...?
மேலும் கீழும், உள்ளும் வெளியும்
எத்தனிக்க முடியாமல்....
எனை இழுத்தடிக்கிறது.
இங்கே மூழ்கி எங்கோ எழுகிறேன்.
இன்னும் கரையில் நிற்கிறாய் நீ...!

தளும்பும் நுரையில்
உன் நினைவுகள்...!
என் சிந்தனைச் சிமிழ்
உடைக்கும் உன் காதல்...!
மணற்பரப்பில் ஊன்றும் கால்களில்
தட்டுப்படும் உன் மிருதுவான தேகம்...!!
மயக்கத்தில் மிதக்கிறேனா....?
மயங்கித்தான் மிதக்கிறேனா...?

என்னவளே...!
எதுவும் புரியாமல்...
அன்பெனும் அலைகளுக்கு நடுவே
அலைமோதுகிறேன்...!!
இன்னும் கரையில் நிற்கிறாய் நீ...!

காலவெள்ளத்தில் எனை தள்ளியக் காதல்
கரையிலேயே உன்னை வைத்திருப்பதன்
காரணம்....
என் இறப்புக்குப் பின்...
வற்றிப் போகும் இந்த நதியில்
கண்ணீர்ப் பெருக்கவா....!?

9 comments:

Philosophy Prabhakaran said...

காதல் ரசம் சொட்டுகிறது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு பக்கெட் எடுத்துட்டு வரேன்...

Philosophy Prabhakaran said...

காதல் ரசம் சொட்டுகிறது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு பக்கெட் எடுத்துட்டு வரேன்...

Unknown said...

நல்கவிதை. படம் மிக அருமை.

Sivatharisan said...

அருமை அருமை கவிதை

Unknown said...

//என் இறப்புக்குப் பின்...
வற்றிப் போகும் இந்த நதியில்
கண்ணீர்ப் பெருக்கவா....!?//
nice lines...

சுபத்ரா said...

//காலவெள்ளத்தில் எனை தள்ளியக் காதல்
கரையிலேயே உன்னை வைத்திருப்பதன்
காரணம்....//

ம்ம்ம்.. :-)

'பரிவை' சே.குமார் said...

நண்பா காதலில் விழுந்து விட்டீர்கள் போல... சும்மா...
கடலுக்குள்ள விழந்த்தின் பயனாய் அலையெல்லாம் காதல் நிரம்பி கரைக்கு வருகின்றன அவள் காலடிச் சுவடுகளைக்காண...
ரொம்ப நல்லாயிருக்கு.

ArunprashA said...

”அன்பெனும் அலைகளுக்கு நடுவே
அலைமோதுகிறேன்...!!”
அன்பு வைத்தாலே நிறைய கஷ்டங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் ஓரே நேரத்தில் கொடுக்கும் சக்தி அன்புக்கு மட்டும் தான் உள்ளது.

ஹேமா said...

படத்தோடு கவிதை கவலை.புரிந்துகொள்ள வையுங்கள்.கரை தாண்டி வரட்டும் !