Monday, December 20, 2010

"இதயத்துக்கு அருகில்"...


இன்னமும் காத்திருக்கிறேன்,- உன்
இதயத்துக்கு அருகில்,
விடியலிலேனும் விழித்துப் பார்.
உறங்கா என் விழிகளை...!
நீ விடை கொடுக்கா இரவுகளை....
மறுதலிக்கிறது மனம்.
*****************************************

சோர்ந்துப் போகும் விழிகளில்
சொக்கி நிற்கும் உறக்கம்.
ஆயினும்,...
காத்திருக்கிறேன்.
கைப்பேசிக்கருகில்....
காதலுடன்...!
நீளும் இரவில்..... 
******************************************

இன்னும் எனை என் செய்வாய் என்னன்பே...!
புன்முறுவலில் ஒப்புதலளிக்கிறேன்.
வாழ்க்கை முரண்படுகிறது...!


பகலிரவு பாதிப்பாதியாகி
இரவில் பகல்,
பகலில் இரவும் நீள்கிறது
 

நெஞ்சுக்குள் நெருப்பு ஒன்று மூள்கிறது.
உமிழ்நீரே உணவாகிறது.
காற்றுக்கு கதவடைக்கும் நாசிகள்
உன் காதலுக்கு கதவுத் திறக்கின்றன.
 

பாழும் வயிறு பசிக்க வில்லை.
ஏனோ..... விழிகள் உறங்கவில்லை.
எதற்கும் மனம் கலங்கவில்லை.
இதயத்துடிப்பில் லயம் இல்லை
 

கவலையும் பயமும் கலந்த பார்வை.
எதையோ பறிக்கொடுத்த முக பாவனை
நிற்க முடியாமல் தவிக்கும் கால்கள்
கணினிக்கும்...
கைப்பேசிக்கும் இடையில்
கழியும் காலம். 
சொல்....!
இதுதான் காதலா...!!

*******************************************

8 comments:

வினோ said...

ஆமாங்க தல..இதுவும் காதல் தான்...

தினேஷ்குமார் said...

வினோ said...
ஆமாங்க தல..இதுவும் காதல் தான்...

எஸ் பாஸ் அதே தான் மாற்றமே இல்ல எங்கையோ வகையா மாட்டிகிட்டாரு தலைவர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"சோர்ந்துப் போகும் விழிகளில்
சொக்கி நிற்கும் உறக்கம்.
ஆயினும்,...
காத்திருக்கிறேன்.
கைப்பேசிக்கருகில்..."

அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள்

செல்வா said...

//விடியலிலேனும் விழித்துப் பார்.
உறங்கா என் விழிகளை...!///

அட செம பீல் அண்ணா ..!!

செல்வா said...

//பாழும் வயிறு பசிக்க வில்லை.
ஏனோ..... விழிகள் உறங்கவில்லை.
எதற்கும் மனம் கலங்கவில்லை.
இதயத்துடிப்பில் லயம் இல்லை
/

எதுக்கும் ஒரு நல்ல மருத்துவர பாருங்க அண்ணா . ஹி ஹி ஹி

சுவடுகள் said...

*நெஞ்சுக்குள் நெருப்பு ஒன்று மூள்கிறது.
உமிழ்நீரே உணவாகிறது.
காற்றுக்கு கதவடைக்கும் நாசிகள்
உன் காதலுக்கு கதவுத் திறக்கின்றன*
அட..அட..அடடா...உங்கள் நேச சுவாசம் அருமை.உங்கள் உணர்வுகளை....உயிரில் குழைத்து உள்ளத்தில் தீட்டுகிறீர்கள்.மிகவும் நன்றாக இருக்கிறது.
எழுத்துலகம் உம்மை வாழ்த்தட்டும்.பாராட்டுக்கள் கவிஞரே.

Paul said...

//உமிழ்நீரே உணவாகிறது.
காற்றுக்கு கதவடைக்கும் நாசிகள்
உன் காதலுக்கு கதவுத் திறக்கின்றன.//

அழகான வரிகள்.. கடைசி பத்தி வரிகளும் கூட என்னை மிகவும் ரசிக்க வைத்தன.. நல்ல கவிதை..

Kayathri said...

எதையோ பறிக்கொடுத்த முக பாவனை
நிற்க முடியாமல் தவிக்கும் கால்கள்
கணினிக்கும்...
கைப்பேசிக்கும் இடையில்
கழியும் காலம்.
சொல்....!
இதுதான் காதலா...!!.........aamanga...idhuthan..enna santhegam..? kadhal vasapatorin unaivai arumaiyaga soli ulleergal... Mihavum arumai..