Friday, December 03, 2010

ஆதலால்...கண்மணியே...!



சோலைக்குள் தேனைத் தேடும்
வண்டுகளின் ரீங்காரத்தில்
களையும் என் மௌனம்....

கேசம் கலைந்தோடும்
தென்றலின் நறுமணத்தில்
சுவாசம் உயிர்பெறுகிறது...

புதையும் மணலில்
அழுந்தும் எண்ணங்களில்
பிறக்கும் கவிதை...

மணக்கும் பூக்களின்
"மகரந்த விருந்தில்"
மனம் பசியாறும்....

பசுமை பரப்பும்
புற்களில் கால் பதிக்க
தயங்கும் நெஞ்சம்...

இளமை ததும்பும்
உணர்வுகளை வருடும்
இளங்காலைப் பொழுது....

யாவும் இருக்கிறது....
கவிதைக்கான காரணங்களாய்....!
உன்னைத் தவிர...!!

ஆதலால்.....
கண்மணியே....!!
இன்றும் இந்த கவிதை....
எழுதப் படாத காவியமாய்...!

8 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆதலால் கண்மணியே...
ஆழமாய் மனதை ஆட்கொண்டு விட்டது நண்பா...
ரொம்ப நல்லா வந்திருக்கு.

Chitra said...

யாவும் இருக்கிறது....
கவிதைக்கான காரணங்களாய்....!
உன்னைத் தவிர...!!


..... அருமையாக கவிதை வந்து உள்ளது.

Anonymous said...

//ஆதலால்.....
கண்மணியே....!!
இன்றும் இந்த கவிதை....
எழுதப் படாத காவியமாய்...!//

எழுதப்பட்ட இந்தக் கவிதை ஒரு காவியமாய்! காதல் காவியம்.

வினோ said...

ஆதலால்.....
கண்மணியே....!!

நீங்க காவியம் நல்லா படைக்கிறீங்க...

எஸ்.கே said...

அட வித்தியாசமான காதல் கவிதை! அருமை!

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை நண்பரே... ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...

ஹேமா said...

காதல்...எவ்வளவு எழுதினாலும் அடங்காது மனசுக்குள் !

தமிழ்க்காதலன் said...

@ சே.குமார்
நண்பா கருத்துக்கு நன்றி.

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ ராதை
உங்களின் கருத்தை ஏற்கிறேன்.

@ வினோ
நீங்கதான் உதவணும் நண்பரே.

@ எஸ்.கே.
நன்றிங்க.

@ பிரபாகரன்
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
விரைவில் இணைக்கப் படும்.

@ ஹேமா
ஆமாங்க,