Thursday, July 21, 2011

"மனிதம்"






பிரியமான என் பேரமைதியே...!
உன்னை பின் தொடர்கிறேன் 
என் மனக் காயங்கள் ஆற்று.


ஓடைநீரில் உள்ளுறையும் 
குளிர்ச்சியில் என் மனம் நனை.
உருக்கு ஆலை உலையில் 
என் எண்ணம் துவை.


சிந்தனைகளின் சிறுமை நீக்கு.
புடம் போட்டத் தங்கமாய்
பொன்னொளி வீசட்டும்
என் செயல்கள்.


புன்னைகையால் எனைப் 
பூரிக்க வைக்கும் பூந்தென்றலே..!
இன்னெழில் கூட்டும் உன்னெழில்
இதயம் விரும்புகிறது.


கற்பனைகளில் பூத்துச் சிரிக்கும் 
கற்பகத் தருவே...!!
கனவுகளாகும் என் இலட்சியங்களுக்கு 
கண்களால் உயிர்த் தருகிறேன்.


உறக்கமிலா உலகத்தில் 
இறந்து கொண்டிருக்கும்   
"மனிதம்" மலர...
உயிரால் ஒரு ஓலை எழுதுகிறேன்.


"மனிதம் பூத்துச் சிரிக்கட்டும்".

11 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல அருமை நண்பா....!!!

அனிதா ராஜ் said...

arumai tamil

Ram said...

அவனவன் உணரும் வரை மனிதம் பூக்காது.!!!

கவிதை சிறப்பு..

சே.குமார் said...

"மனிதம் பூத்துச் சிரிக்கட்டும்".


வழக்கம் போல அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
உறக்கமிலா உலகத்தில்
இறந்து கொண்டிருக்கும்
"மனிதம்" மலர.../////


மனிதம் மலர எல்லோரும் எதிரிஎடுப்போம்....

முனைவர் இரா.குணசீலன் said...

மரத்துப்போன மனிதர்களிடம் மனிதம் மலரட்டும்!!

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html
நன்றி

Kayathri said...

கனவுகளாகும் உங்கள் இலட்சியங்கள் நினைவுமாகட்டும்..


இறந்து கொண்டிருக்கும்
"மனிதம்" மலர...
உயிரால் ஒரு ஓலை எழுதுகிறேன்....அனைவரும் எழுதுவோம் ஓலை...அருமை...

மாய உலகம் said...

உறக்கமிலா உலகத்தில்
இறந்து கொண்டிருக்கும்
"மனிதம்" மலர... அருமை

போளூர் தயாநிதி said...

//உறக்கமிலா உலகத்தில்
இறந்து கொண்டிருக்கும்
"மனிதம்" மலர...
உயிரால் ஒரு ஓலை எழுதுகிறேன்.


"மனிதம் பூத்துச் சிரிக்கட்டும்"//.அருமையான கவிதை..