அவளுக்கு ஒன்று எழுதி
அவளுக்காய் ஒன்று எழுதி
அவளுக்குள் ஒன்றி எழுதி
அவளோடு ஒன்றாய் எழுதி
அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை
அவள் அறியாது அவளற்ற அவளாக
அவள் இருக்க அவளுக்குள் அவளாய்
இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..?
இவன் அவளாய் இவனுக்குள் அவளாய்
இவனின் இவனாய் இவனை புரிந்த
இவனைப் புரியும் அவளின் அவள்
அவளும் இவனும் அவனும் இவளுமாய்
ஆனபின் ஆணென்ன பெண்ணென்ன அறிவாயோ..?!
அறிவாய் திருவாய் அன்பாய் ஆர்ந்த
அற்புதம் அறிந்த அவனும் அவளும்
உண்டு இல்லையில் உருண்டு எழுந்து
நன்று தீதில் நனைந் தெழுந்து
அன்றிலும் இன்றிலும் ஆழ்ந் தெழுந்து
ஒன்றில் ஒன்றாய் ஒன்றிக் கிடக்கும்
உன்னத வினாடிகளில் ஓர்ந்துக் கிடக்கும்
காலம் ஓய்வெடுத்தப் படி,- உள்ளுள்
உறங்கும் உண்மை விழித்தெழும் இன்மை
இம்மை நீக்கி உண்மை ஊட்டுவிக்கும்
அவனும் அவளும் அறிந்த உண்மை
அவனால் அவளும் அவளால் அவனும்
அவனையும் அவளையும் அவ்வவ்வாறு அறிந்த
ஆன்மத் தேடலின் அவசியம் புரிந்தது.
9 comments:
உங்களுடைய அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்....அருமை....
//அவனும் அவளும் அறிந்த உண்மை
அவனால் அவளும் அவளால் அவனும்
அவனையும் அவளையும் அவ்வவ்வாறு அறிந்த
ஆன்மத் தேடலின் அவசியம் புரிந்தது.//
அவனும் அவளும்... அவளும் அவனும்
ஒருவருக்குள் ஒருவராய் ஆன அன்பின் பரிணாமத்தை அழகாய் கவியாக்கி கடிசை பத்தியில் அந்தக் கவிதையின் மொத்த வரிகளையும் உள்ளடக்கிவிட்டாய். அருமை.
ஐ... இன்னைக்கு பின்னூட்டம் போட்டுட்டேனே... நாளைய பதிவுக்கு முடியுமான்னு தெரியலை... ஆனா எப்பவாவது வழி விடும். அப்போ வருவேன்.
கானல் நீராய் நினைவுகள்.... வருகிறது
maayaulagam-4u.blogspot
by rajeshnedveera
//அவளுக்குள் அவளாய்
இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..? //
...வாவ். உண்மையில் அருமையான கவிதை வரிகள். :)
supper,,,,,,,
congratulation"
அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை
அவள் அறியாது அவளற்ற அவளாக
அவள் இருக்க அவளுக்குள் அவளாய்
இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..?
arumai
அவளுக்கு ஒன்று, அவளுக்காய் ஒன்று எழுதுவதற்கு பதில் அவளுக்காய் எழுதியதை அவளுக்கே எழுதியிருக்கலாமே...
மொத்தத்தில் அருமை..கவிஞரே..
//இவன் அவளாய் இவனுக்குள் அவளாய்
இவனின் இவனாய் இவனை புரிந்த
இவனைப் புரியும் அவளின் அவள்// புரிதல்....:)
வணக்கம்..தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
தங்களது கவிமழை தொடர வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/07/1.html
Post a Comment