Saturday, June 25, 2011

"பாலை..."



வரவுகள் எதிர்ப்பார்த்து விழிகள் பூத்த
விடியல்கள் விடிந்தும் விழி மூடா
பொழுதுகள் புலர்ந்தென்ன? மறைந்தென்ன??
பொட்டல்வெளி புழுதிக்கு திசையென்ன? திடலென்ன??


கடும் வெயில் சுடும் மணல்
காயும் காற்று தாங்கும் மனம் 
ஈரக் காற்றும் இராப் பொழுதும் 
தாங்கா கொடுமை என் சொல்ல..?


தனிமை தவிர துணையறியா இளமை 
இருந்தென்ன? போயென்ன?? தவிக்க விட்ட 
பேதைதனை பேசியென்ன? ஏசியென்ன?? ஊசிக்காற்றில்
பெருந்துயர் வருத்த நலியும் உடலுயிர் 


வாழ்ந்தென்ன? ஒழிந்தென்ன?? உணர்ச்சிகள் செத்தபின் 
உதடுகளில் முத்தமிட்டு பிணத்தைக் கட்டியழும்
உன்னதக் காதலை வாழ்த்த மனமில்லை 
உணர்ச்சியோடு ஒருமுறை உன்பெயர் உச்சரிக்கிறேன் 


வந்துவிடு... 
வாழ்ந்துவிடு... 
நான் இருக்கும்போதே....!.

6 comments:

போளூர் தயாநிதி said...

வாழ்ந்தென்ன? ஒழிந்தென்ன?? உணர்ச்சிகள் செத்தபின்
உதடுகளில் முத்தமிட்டு பிணத்தைக் கட்டியழும்
உன்னதக் காதலை வாழ்த்த மனமில்லை
உணர்ச்சியோடு ஒருமுறை உன்பெயர் உச்சரிக்கிறேன்
arputham

போளூர் தயாநிதி said...

நல்ல படிப்பு ம் படிப்புதான் படைப்பும் கூட நல்ல ஆக்கம் காதலை உணர்வுடன் சொல்லி இருக்கிறீர்கள் தொடருங்கள் .

Meena said...

சபாஷ்! தூங்கிப்போன உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் வலிமையான எழுத்துக்கள் !

'பரிவை' சே.குமார் said...

Nanba ithu yarukkana kavithai. romba nalla irukku...

padikkaiyil vazhikkirathu

தமிழ்க்காதலன் said...

வாங்க தயாநிதி, நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் வருகை எமக்கு உவகை அளிக்கிறது. தொடருங்கள் உங்கள் ஆதரவை. கருத்திட்டமைக்கு என் நன்றி.

Kayathri said...

மிகவும் அருமை கவிஞரே!!