கண்களில் வளர்த்தக் காதல்
கரைகிறது கண்ணீரில்...!
இதயத்தைக் கடக்கும் துளிகளில்
மனதின் நேசங்கள் நனைகிறது...!!
வாழுங்கால் வாரா உறவு பின்
வருந்தி காணும் பலன் என்ன..??
அலையும் நீரில் உடையும் நிலவாய்
அழிகிறது வாழ்க்கை அனுதினம்.
காய்ந்த நிலத்தை கட்டியழும்
உழவனாய் தேய்ந்த கிடக்கிறது
வலி சுமந்த மனம் வலிக்கு
வலி மருந்தாகும் மாயம் என்ன..?!
சருகுகள் உதிர்ந்த இடத்தில்
இறந்து கிடக்கிறது நிகழ்காலம்..!
இறந்த இலைகளின் வாழ்க்கை
பேசியபடி.... தீ வந்து முத்தமிட
தேகம் களையும் சருகு சாம்பல்
உரமாகும் உதிர்த்த மரத்திற்கு
உதவிய திருப்தியில் மீண்டும்
துளிர்க்கும் இலைகளில் வழியும்
சாம்பல் இலையின் சாரம் சத்தாய்
வாழ்வின் மையம் வீழ்வதில்தான்
வீழ்கிறேன் மறுபடி வாழ்கிறேன்
விழிகளில் தீபமான உனக்காக.
3 comments:
//சருகுகள் உதிர்ந்த இடத்தில்
இறந்து கிடக்கிறது நிகழ்காலம்..!
இறந்த இலைகளின் வாழ்க்கை
பேசியபடி.... தீ வந்து முத்தமிட //
//வாழுங்கால் வாரா உறவு பின்
வருந்தி காணும் பலன் என்ன..??
அலையும் நீரில் உடையும் நிலவாய்
அழிகிறது வாழ்க்கை அனுதினம்.//
அப்பா... கலக்கிட்டே... ரொம்ப அருமை... விழிகளின் தீபம் எனக்குள் சுடராய்..!
வாழுங்கால் வாரா உறவு பின்
வருந்தி காணும் பலன் என்ன..??
பயனில்லைதான்...
வலி சுமந்த மனம் வலிக்கு
வலி மருந்தாகும் மாயம் என்ன..?!
காலம் செய்யும் வேலை அது..
//வாழுங்கால் வாரா உறவு பின்
வருந்தி காணும் பலன் என்ன..??
அலையும் நீரில் உடையும் நிலவாய்
அழிகிறது வாழ்க்கை அனுதினம்.//
உண்மையான வரிகள் சகோ
அற்புதமான கவிதை
வாழ்த்துக்கள் :)
Post a Comment