அறுகதிர் அறுக்க அக்கதிர் தொங்கி
வருகதிர் வாங்கி ஒருகதிர் உதிரும்
முக்கதிர் முளைக் கட்ட திக்கதிரும்
அக்கதிர் அறுக்க அறிவார் யார்..?
வினைகள் விதைத்து வினைகள் அறுத்து
விதிகள் விளையாடும் வினைகள் அறிவாரோ..?
விதிகள் பேசி வினைகள் முடித்து
வினைக்குத் துணைப் போவாரோ..?
முன்னம் செய் வினை யாவும்
முன்வந்து நிற்கும் உரு பிதா
பின்னர் செய் வினைப் பலனாய்
பின்வந்து விழும் உரு பிள்ளை.
தன் வினைக்கு தக்க துணை
தன் விதிக்கு தக்க மனை
தன் மதிக்குத் தக்க வாழ்வு
தன் கதிக்குத் தக்க முடிவு
விதை ஒன்று விதை விதைத்து
விதி கரை சேர்க்க விதை
விருட்சமாம் விதிக்கு விதை விலக்கல்ல
விதியின் விதி விதையின் மடியில்.
நதியின் கரை சேரும் விதை
நட்ட மரமாகும் விதிப்படி நல்ல
நிலம் சேரும் மறுபடி விதையாகும்
விதி விதைத்து வினையறுக்கும் விளையாட்டு.
5 comments:
nanba...
enathu blogger idyil irunthu unakku comment poda mudiyavillai.... sila natgalaka appo appo intha pirachinai vanthathu... indru rendu systemla try seithum mudiyalai. keela irukkathu en comment... mudinthal neeyey post pannikko.
//விதை ஒன்று விதை விதைத்து
விதி கரை சேர்க்க விதை
விருட்சமாம் விதிக்கு விதை விலக்கல்ல
விதியின் விதி விதையின் மடியில்.//
Nanba... intha paththyil ellamey sollivittai...
kavithai romba nalla irukku...
--
நேசத்துடன்...
-'பரிவை' சே.குமார்
//நதியின் கரை சேரும் விதை
நட்ட மரமாகும் விதிப்படி நல்ல
நிலம் சேரும் மறுபடி விதையாகும்
விதி விதைத்து வினையறுக்கும் விளையாட்டு//
நச்
//விதியின் விதி விதையின் மடியில்
எல்லாம் நம் விதி என்று நினைக்கத் தோன்றுகையில் அந்த விதியை
வேண்டுவது போல் மாற்றி அமைக்க எந்த உயிருக்கும் பலம் உண்டு என்று
சொல்வது போல் உள்ளது
//நதியின் கரை சேரும் விதை
நட்ட மரமாகும் விதிப்படி நல்ல
நிலம் சேரும் மறுபடி விதையாகும்
விதி விதைத்து வினையறுக்கும் விளையாட்டு.
மறு பிறப்பைப் பற்றித் தானே குறிப்பிடுகிறீர்கள்?
இப்பிறப்பை பற்றியே புரிந்து கொள்ள முடியவில்லை. மறு பிறப்பு
வேறா?
//விதியின் விதி விதையின் மடியில்.
எல்லாம் என் விதி என நினைக்கத் தோன்றுகையில் வேண்டிய படி விதியை மாற்றிக் கொள்ளும் பலம் எந்த உயிருக்கும் உண்டு எனச் சொல்லுவது போல் உள்ளது
/நதியின் கரை சேரும் விதை
நட்ட மரமாகும் விதிப்படி நல்ல
நிலம் சேரும் மறுபடி விதையாகும்
விதி விதைத்து வினையறுக்கும் விளையாட்டு//
மறு பிறப்பைப் பற்றித் தானே குறிப்பிடுகிறீர்கள்?
இப்பிறப்பை பற்றியே புரிந்து கொள்ள முடியவில்லை. மறு பிறப்பு
வேறா?
Post a Comment